இந்த வார ராசிபலன் 21-12-2020 முதல் 26-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலங்கள் நீங்கும். மன நிம்மதி பெறுவீர்கள். அலுவலகப் பணியில் ஆர்வம் அதிகரித்து, வேலையில் அதிக ஈடுபாடு கொண்டு நல்ல பெயரையும், எதிர்பாராத சம்பள உயர்வையும் பெற போகிறீர்கள். வேலைதேடி நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கூட, விடா முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை நீங்கி சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். சொந்தத் தொழில் நல்ல லாபம் பெறும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்தவாரம் கொஞ்சம் கவனத்தோடு நடக்கவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து அதன் பின் வாங்க வேண்டும். கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு, உங்களைத் தேடிவர போகின்றது. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பார்ட்னர்களிடையே பைசா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கப் போகின்றது. அலுவலகத்தில் மட்டும் உடன் வேலை செய்பவர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். உங்கள் நண்பர்களே, உங்கள் பின்னால் குழி தோண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது. வீண் விவாதங்களை யாரிடமும் செய்ய வேண்டாம். தேவையற்ற பிரச்சனைகளில் நீங்களாகவே மூக்கை நுழைத்து, வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். தினந்தோறும் சூரியநமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. முடிந்தவரை உறவினர்களிடத்தில் வீண் விவாதங்கள் செய்வதை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளின் மூலம் மனதளவில் சந்தோஷத்தை பெற போகிறீர்கள். தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறும். நீங்கள் செய்யும் வேலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் அலட்சிய போக்கை காட்ட வேண்டாம். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். மற்றபடி இந்த வாரம் பிரச்சினைகள் எதுவும் இல்லாத வாரமாக தான் இருக்கப் போகின்றது. முருகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தேவையற்ற மன பயம் உண்டாகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அரசாங்கத் துறையில் வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலையின் நிதானத்தையும் கவனத்தையும் அதிகமாக காட்ட வேண்டும். சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு, எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளி வைகாதவரை உங்களுக்கு பிரச்சனை வராது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க!

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாகத்தான் இருக்க போகின்றது. சொத்து வீடு, நிலம், வாகனம், போன்றவைகளை வாங்குவதாக இருந்தால், இந்த வாரம் தாராளமாக வாங்கலாம். பணம் பல வழிகளில் உங்கள் கைக்கு வந்து சேரப் போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருந்துகொண்டே இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்க தொடங்கும். தேவையற்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள் குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகின்றது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றால், பத்திரம் பதிய வேண்டும் என்றால், இந்த வாரம் அந்த வேலைகளை செய்ய முயற்சிக்கலாம். எல்லாம் சுபமாக முடியும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகின்றது. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். லாபத்தை கொடுக்கும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. அம்மன் வழிபாடு மேலும் நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக இருக்கப்போகின்றது. புதியதாக ஏதாவது ஒரு வேலையை தொடங்க வேண்டும் என்றால், இந்த வாரம் தாராளமாக தொடங்கலாம். பயந்து பின்வாங்கி விடவேண்டாம். சில தோல்விகள் வந்தாலும், இறுதியில் வெற்றி உங்களுக்கே. விடா முயற்சியை, விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் வேலை அதிகமாக தான் இருக்கும். சோர்வு வரத்தான் செய்யும். இருப்பினும் எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிற்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். பாராட்டு நிச்சயம். தலைகனம் வராமல் அடக்கமான பேச்சோடு முயற்சிகளைத் தொடங்கலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க!

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்தவாரம் பொறுமையை கடைபிடித்தே ஆகவேண்டும். வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரப்போகின்றது. நீங்கள் ஒதுங்கி போனாலும் வம்பு சண்டை வந்து கொண்டே இருக்கும். வாக்குவாதம் நடக்கும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் சரி, உங்களது மௌனத்தை மட்டும் பதிலாக வைப்பது தான் உங்களுக்கு நல்லது. அனாவசியமாக பேசினால் விவாதம் முற்றிப்போய், கைகலப்பு வரை போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிலுள்ளவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தினம்தோறும் காலையில் கோவிலுக்கு சென்று, மனதை அமைதிப் படுத்தி கொண்டு உங்களது அன்றாட வேலையை தொடங்குவது மிகவும் நல்லது.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். புதிய தொழில் தொடங்குவது, புதிய வேலை வாய்ப்புகளை தேடுவது, புதியதாக ஆடை அணிகலன்கள் வாங்குவது, எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு லாபம் கொடுக்கும். உங்களை தரக்குறைவாக பேசியவர்களின் முன்னாள், தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்ட போராட்டமான உங்களது வாழ்க்கையை வாழ்ந்து, சாதித்து காட்ட போகிறீர்கள். சின்ன சின்ன சோம்பேறித்தனம் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்துவிட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். தினந்தோறும் குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றிகளை கொடுக்கும் வாரமாக இந்த வாரம் அமையப் போகின்றது. முடிந்தவரை பணப்பரிமாற்றம் எதையும் இந்த வாரம் செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரிடமிருந்தும் கடனாக பணத்தை வாங்காதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும் விற்பதாக இருந்தாலும்,  கைமேல் பணத்தை வைத்து கணக்கை உடனே முடிப்பதுதான் நல்லது. மற்றபடி குடும்பத்தில் எந்த ஒரு சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. உங்களுடைய உறவினர்களால் சில நன்மைகள் உங்களை தேடி வரப் போகின்றது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் செய்யக்கூடிய வேலைக்கு உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பாராட்டி தள்ளப் போகிறார்கள். அந்த அளவிற்கு உங்களுடைய வாக்கு வன்மையும், சிந்தனையும் தெளிவாக இருக்கும். இத்தனை நாட்களாக, நீங்கள் தலைகுனிந்து இருந்த இடத்தில் கூட, தலை நிமிர்ந்து நடக்கும் அளவிற்கு சில விஷயங்களில் வெற்றி காண போகிறீர்கள். இந்த வாரம் சந்தோஷத்திற்கு ஒரு துளி கூட குறைவிருக்காது. அமோகமான இந்த வாரத்தை முருகவழிபாட்டோடு தொடங்கி, தினம்தோறும் முருகனது பாதங்களை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்