ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – டிசம்பர் 23 முதல் 29 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
இந்த வாரம் உங்களின் தேவைக்கு அதிகமாகவே பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய குறைபாடு ஏற்பட்டு நீங்கும். வேலை செய்பவர்களாக இருந்தால் அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் உங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்:
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்கள் மனதில் சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் நீங்கள் நல்ல பெயர் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

- Advertisement -

மிதுனம்:
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் தேவை. அலுவலகத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும். உங்கள் வியாபாரமானது முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கடகம்:
நீங்கள் எதிர்பார்த்ததை விட வருமானமானது உங்களுக்கு அதிகமாகவே வரும். இதுவரை இருந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த வாரம் தீர்ந்துவிடும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவீர்கள். மாணவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதன் மூலம் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். மற்ற விஷயங்களை தவிர்த்து படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:

இந்த வாரம் பணவரவு குறைவாகவே இருந்தாலும் மகிழ்ச்சிக்கு எந்தக் குறைவும் இருக்காது. உங்களின் உடல் ஆரோக்கியமானது சீராக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்கள் வியாபாரம் மந்தமாக காணப்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

- Advertisement -

கன்னி:

உங்கள் செலவுகள் அதிகரித்துக் கொண்டு வந்தாலும், அதனை பூர்த்தி செய்வதற்கு பணவரவு சீராக வரும். உங்கள் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஈடுபாடு ஏற்படும்.

துலாம்:

நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் கூட இந்த வாரம் உங்களை வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகள் வழக்கம்போல செல்லும். உங்கள் தொழிலில் புதிய முதலீட்டினை முதலீடு செய்யலாம். கல்வியில் பின் தங்கியிருந்த மாணவர்கள் கூட இந்த வாரம் சுறுசுறுப்பாக படிப்பில் கவனம் செலுத்துவர்.

விருச்சிகம்:

பண மழை பொழிய போக்கும் வாரமாக தான் இது உங்களுக்கு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் அதிக ஈடுபாடுடன் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

தனுசு:

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாக தான் அமையும். பணவரவு இருந்தாலும் அதற்கான செலவுகள் அதிகமாக வந்துவிடும். வேலைக்கு செல்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனாவசியமாக பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வது அவசியம்.

மகரம்:

உங்களின் வருமானம் சீராக இருக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் புதிய முயற்சிகளை இந்த வாரம் தொடங்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய அதிக முயற்சி தேவை.

கும்பம்:

உங்களின் வருமானம் சீராக இருக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்கள் வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சொந்தத் தொழில் காரணமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் மற்ற விஷயங்களை தவிர்த்து விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்.

மீனம்:

உங்களின் வருமானம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருக்கும். சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. வழக்கம்போல அலுவலகத்தில் பணிகள் சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் உங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து கொண்டு படிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -