இந்த வார ராசிபலன் 25/12/2023 முதல் 31/12/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

dec 25 to 31
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையாக செயல்பட வேண்டிய வாரமாக இருக்கப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை தேவையான அளவு பணவரவு ஏற்படும். இருப்பினும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் தேவையற்ற வார்த்தைகளை விடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராக இருக்கும். கூட்டாளிகளுடன் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையோடு கவனமாக செயல்பட வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் செலவு செய்ய வேண்டும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் தீர விசாரித்து நிதானமாக எடுக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு அதைவிட அதிகமாக செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புடன் அந்த வேலையை செம்மையாக செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைப்பது கடினம் என்பதால் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சேமிப்புகள் உயரக்கூடிய வாரமாக திகழும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று அதற்குரிய சலுகைகளை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவியால் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்று எடுத்த முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பணவரவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் அவசிய செலவுகளை மட்டும் செய்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை லாபம் சற்று குறைவாகவே கிடைக்கும். தொழிலில் கவனம் செலுத்துவதன் மூலம் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்களை சந்திக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். முடிவை எடுப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். சிரமம் பார்க்காமல் அதை செய்து முடிப்பதே நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் சுமூகமாக நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி வேலையை கொடுக்காமல் தானே செய்வதன் மூலம் வெற்றி பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோசித்து செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. சிறு உபாதை என்றாலும் அதற்குரிய மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். பாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. கவனமாக வேலையை செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பை பெற்றால் தான் தொழிலை நஷ்டம் இல்லாமல் நடத்த முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது இருந்தாலும் வரவேற்கேற்ற செலவே ஏற்படும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம் முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -