ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
உங்களின் பண வரவு சீராக இருக்கும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது. வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் பொறுமையோடு இருங்கள். அனாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.

ரிஷபம்:
உங்களின் பண பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு பண இருப்பு இருக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களின் பணவரவு அதிகமாகவே இருக்கும். வீண் செலவுகள் குறையும். உங்கள் உடன் பணிபுரிபவர்களால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீண் விவாதங்களை தவிர்த்து, உங்கள் வேலையை மட்டும் பார்ப்பதால் எந்த பிரச்சனையும் வராது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கடகம்:

- Advertisement -

பணவரவு சீராக இருக்கும். செலவு செய்வதற்கு தேவையான பணம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். வேலை செய்பவர்கள், அலுவலகப் பணிகளில் அதிக கவனத்துடன் ஈடு பட வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வி பயில்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

சிம்மம்:

- Advertisement -

பணவரவு திருப்தி தரும் வகையில் அமையும். ஆன்மீகச் சுற்றுப் பயணம் செய்ய சிலருக்கு வாய்ப்பு உண்டு. வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி:

பணவரவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிறிய அளவில் ஏதாவது ஒரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் உங்களின் மனது சஞ்சலமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள், செய்யும் வேலையில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் கடினமான உழைப்பினை போட்டால் லாபம் அதிகமாக கிடைக்கும். மனதினை ஒரு நிலைப்படுத்தி படிப்பில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

துலாம்:

அதிகமான பண வரவு காரணமாக புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:

உங்களது செலவினை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் மன அழுத்தம் ஏற்படும். பிரச்சனைகள் வந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் சற்று தடுமாற்ற நிலை ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு:

உங்கள் தேவைக்கேற்ற பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அனாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். கவனத்துடன் படித்தால் மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி நிச்சயம்.

மகரம்:

உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணம் உங்கள் கையில் இருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டிய வாரம் இது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக தான் இருக்கும். பிரச்சனைகளை சமாளித்து முன்னேற வேண்டிய நேரம் இது. வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மற்ற விஷயங்களில் ஆர்வத்தை செலுத்தாமல் கல்வியில் மட்டும் ஆர்வம் கொண்டு செயல்படுவது நல்லது.

கும்பம்:

பணவரவு சீராக இருக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களாக இருந்தால் அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவார்கள்.

மீனம்:

பொருளாதார நிலை சீராக இருக்கும். இந்த வாரம் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து சுலபமாக தப்பித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் எப்பவும் போல் செயல்படுவது நல்லது புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அதிக கவனத்துடன் செயல்பட்டால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடையலாம்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -