இந்த வார ராசிபலன் 08-02-2021 முதல் 14-02-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சாதக பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்த பிணக்குகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடை நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த அளவிற்கு நன்மைகள் நடக்கும் இனிய வாரமாக அமையும். ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். வியாபார விருத்தி பெற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர சகோதரி வழியே நடைபெற்றுக் கொண்டிருந்த வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடகம்:

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைத்தது நிறைவேறும். சுபகாரியத் தடைகள் நீங்கி நல்ல விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிப்பதால் வேலை பளு கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றத்தைக் காணலாம். கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் குறையும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எனினும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிகம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு விநாயகரை வழிபடுவதன் மூலம் ஏற்றம் காணலாம்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செழிப்பான வாரமாக இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறைவிருக்காது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதுவரை வசூலாகாத பணம் கூட வசூலாக கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறலாம். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிட்டால் தேவையில்லாத வருத்தத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நிலவ . ஸ்ரீமன் நாராயணரை துளசி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சீராக அமையும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாக புதுப்புது விஷயங்களை புகுத்துவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். வழக்குகள் சாதகமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வாரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலக்கை நோக்கிப் பயணிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும், சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி பிரச்சனைக்கு இடையே சுமூகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பெரிய மனிதர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். சுவாச ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமான லாபம் கிடைக்கும். இரக்க சுபாவம் உள்ள உங்களுக்கு இந்த வாரம் பல்வேறு நன்மைகள் நடக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்கள் செய்திகள் கிடைக்கப் பெறும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் வீண் விரயத்தை தவிர்க்கலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.