இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரமாக இருக்கும். எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று மனதை உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சவால்களை எதிர்கொண்டு சாதிக்க கூடிய வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். பெண்களுக்கு வேலை பளு காரணமாக அதிக ஓய்வு தேவைப்படலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சுமூகமான வாரமாக இருக்கும். எதிர்பார்த்தபடி எந்த நிகழ்வுகளும் புதிதாக நடைபெறாது. வழக்கம் போல் உங்களது பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடனான பிரச்சனைகள் குறையலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் நன்கு ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் உற்சாகமான ஒருவாரமாக காணப்படும். நகைச்சுவை உணர்வு அதிகமுள்ள உங்களுக்கு பலரின் உதவிகள் கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் திருப்திபடுத்தும். நினைத்த காரியங்கள் கைகூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் சுப நிகழ்ச்சிகளில் ஒன்று செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். நண்பர்களின் சேர்க்கையில் சிறிது கவனத்துடன் இருப்பது நல்லது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். எந்த செயலை செய்தாலும் அதில் முன்னேற்றம் இருக்கும். ஒரு செயலை செய்யும் முன் தீர்க்கமாக யோசித்து சரியாக முடிவெடுக்கும் பக்குவம் உங்களிடம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைகளை கற்று அதில் ஆர்வம் அதிகம் காணப்படும். அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கி பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். பெண்களின் முன்னேற்றம் குறித்த விஷயத்தில் வெற்றிப்பாதை கிட்டும்.

கன்னி:

- Advertisement -

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுயமாக சிந்திக்க வேண்டிய வாரமாக இருக்கும். அடுத்தவர்களின் பேச்சை கேட்பது நல்லது தான். எனினும் பலதரப்பட்ட மனிதர்கள் பலதரப்பட்ட ஆலோசனைகளை கூறி குழப்பி விடுவார்கள். எனவே நீங்கள் தான் சுயமாக முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உங்களது பலமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான வாரமாக இருக்கும். வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் என்ன பேச்சு வார்த்தைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வயதில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. கவனம் சிதறினால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அரசு வழி காரியங்கள் சிக்கலின்றி முடிவுக்கு வரும். வழக்கு தொடர்பான வற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் உருவாகி பின்ன நல்ல புரிதல் உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சல்களை சந்திக்கக்கூடிய வாரமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்ட உடல்நலத்தில் கோளாறுகள் உருவாகலாம். எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் நீங்கும். பரஸ்பர ஒற்றுமை நிலவும். திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும் இனிய வாரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். தொடர் விரயங்கள் ஏற்பட்டாலும் சுப விரயமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான வாரமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். துர்க்கை வழிபாடு பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிட்டும். வழக்கு தொடர்பான வற்றில் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் உச்சகட்ட நிலையில் ஏதேனும் ரூபத்தில் உங்களுக்கு தேவையான பணம் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆசிரியர்கள் பாராட்டும் விதமாக நடந்து கொள்வீர்கள். சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை அதிகரித்து காணப்படும். இரக்க சுபாவம் மிக்க உங்களுக்கு வெற்றிகரமான வாரமாக அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகம் தேவைப்படும் வாரமாக இருக்கும். பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்றம் இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வழக்கு தொடர்பானவற்றில் எச்சரிக்கை தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உத்தியோக உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை உண்டு. நாட்டு வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்கள் கைகூடும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனப்பக்குவம் கொண்ட நீங்கள் இந்த வாரம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சினைகள் ஏற்படலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -