ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெய்வீக வழிபாடுகளில் கவனம் செலுத்தும் ஒரு நல்ல வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சக பணியாளர்களின் நட்பு அவசியமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகளினால் மனக்குழப்பம் ஏற்படும். எனினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் சோம்பேறித்தனம் படாமல் சுறுசுறுப்புடன் செயலாற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அரசாங்க வழிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அவ்வபோது சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் இருப்பீர்கள்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் மூலம் சில அனுபவங்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி ஏற்படும். புதிய வாய்ப்புகள் அமையப்பெறும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டாகும். வரவை மீறிய செலவு இருப்பினும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உயர் கல்வி பயில்பவர்கள் சாதகமான சூழ்நிலையை காண்பீர்கள். உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் இருக்கும் நபர்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களினால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் லாபகரமான வாரமாக இருக்கும். எதிர்பாராத தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை நிலவும். மனதிற்கு பிடித்தவர்களால் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்குபவர்கள் லாபம் காண்பீர்கள். தயாள குணம் படைத்த உங்களின் முயற்சிக்கு தடை ஏதுமின்றி நல்ல பலன் கிட்டும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு சுபகாரிய நிகழ்ச்சிகள் உண்டாக பெறும். புதிய தொழில்நுட்பங்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும்.

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய ஒரு வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பீர்கள். அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய உத்திகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் மன உளைச்சல் உண்டாக பெறும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். யாரிடமும் கடுஞ்சொற்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் புதிய வாய்ப்புகளை நோக்கி பயணிக்கும் ஒரு வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து இன்முகமாக பழகுவது நன்மையை தரும். அரசு வழி அனுகூலம் கிட்டும். அவ்வபோது உடல்நிலையில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும். புதிய தொழில் வாய்ப்புகள் வீடு தேடி வரும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் தொடர்பான சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனமாக பேசுவது நல்லது.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான ஒரு நல்ல வாரமாக இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு. அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் துறை சார்ந்த தேடுதல்களில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு வாகன யோகம் உண்டாகப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். தெய்வீக வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். மன நிம்மதியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். மஹான்களின் ஆசியும் கிடைக்கப்பெறும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் நிதிப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிய ஒரு வாரமாக இருக்கும். பொருளாதாரத்தில் பிரச்சனைகள் இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மூன்றாம் நபர்களை நம்பியிராமல் சுய முடிவு எடுப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதன்மூலம் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான ஒரு வாரமாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் வரக்கூடும். எனினும் அதனை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவதற்குரிய பக்குவம் உங்களிடம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தநிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு அமையக்கூடும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான வாரமாக அமையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்து மறையும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் பணத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு வாரமாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் வங்கிகளில் கடன் கேட்டு தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். குடும்பத்தில் அமைதி நிரம்பியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக மிகவும் சோர்வுடன் இருப்பீர்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக வந்து சேரும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விருத்தி அடையும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு நல்ல லாபம் கிட்டும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்ள நேரிடலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களின் கடமைகளை சிறப்பாக முடித்து விடுவீர்கள்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் இனிமையான வாரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்களின் நாணயத்தினால் மேன்மை அடைவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காணலாம்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலையை காணலாம். பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மனதிற்குப் பிடித்த இடத்தில் வாய்க்கப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான ஒரு வாரமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி புரிவார்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் கிட்டும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.