இந்த வார ராசிபலன் 04.01.2021 முதல் 10.01.2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு செயலிலும் அவசர அவசரமாக முடிவு எடுக்கக்கூடாது. முக்கியமாக புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு எந்த ஒரு செயலையும் செய்ய தொடங்க வேண்டும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சொந்தத் தொழில் கொஞ்சம் மந்தமாக தான் செல்லும். அலுவலகப் பணியில் அக்கறை காட்ட வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தான் இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட்டால் பிரச்சனை உங்களை தேடி வரத் தொடங்கிவிடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பணியில் யாரை நம்பியும் உங்களது வேலையை ஒப்படைக்க வேண்டாம். சொந்த தொழிலில் எந்த ஒரு புதிய முயற்சியையும் எடுக்க வேண்டாம். பரிமாற்றங்களில் கவனம் தேவை. உஷாராக நடந்துகொள்ளுங்கள். தினம்தோறும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலகப் பணி எப்போதும் போல செல்லும் அரசாங்க விஷயங்கள் ஏதேனும் கிடப்பில் கிடந்தால், அதை எடுத்து இந்த வாரம் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அதே சமயம் அடுத்தடுத்த சுப செலவுகள் வந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். எந்த தொழிலிலை நம்பியும் புதியதாக முதலீடு செலுத்த வேண்டாம். ஏதோ ஒரு மன குழப்பம் இருந்து கொண்டே வரும். தினந்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்க!

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகப் பணியில் நல்ல பெயரை வாங்குவீர்கள். சொந்த தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வரும் நாட்களில், எல்லாம் சரியாகிவிடும் என்ற ஆறுதல் வார்த்தையோடு பேசுங்கள். கோபம் வேண்டாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட, இந்த வாரம் சரியாகிவிடும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள், இனி வரும் நாட்களில் நடக்கத் தொடங்கும். உங்களை திட்டியவர்கள் கூட, தானாகவே வந்து பாராட்டி விட்டு செல்ல போகிறார்கள். மகிழ்ச்சி பொங்கும் வாரமாக தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது பல நன்மைகளை சேர்க்கும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி நண்பர்களின் மூலமாகவோ, தொலைபேசியின் வாயிலாக உங்கள் செவிகளுக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் தொகை இந்த வார இறுதிக்குள் வசூல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும், சேர்த்து கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. தேவையற்ற மன சஞ்சலங்கள் நீங்கி மன நிம்மதி பெறுவீர்கள். தினம் தோறும் பெருமாள் அம்பாள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களின் கை இந்த வாரம் மேலோங்கி இருக்க போகின்றது. எல்லோருக்கும் உதவியை நீங்கள் தேடிப்போய் செய்துவிட்டு வருவீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய நிதி நிலைமையும், மன நிலையும் உயர்ந்த நிலையில் இருக்கும். எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணி அசத்த போறீங்க. உங்களை பார்த்து அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் சில திருப்பங்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தலைகனம் மட்டும் வந்துவிட வேண்டாம். தினம்தோறும் ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அமைதியைத் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். வீட்டில் உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நல்லபடியாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும். தேவையற்ற கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற போகின்றது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் மனநிம்மதிக்கு குறைவிருக்காது. தினந்தோறும் வீட்டின் அருகில் இருக்கும் பழைய சிவன் கோவிலுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். சொந்தத் தொழிலில் கைநிறைய லாபம் கிடைக்கும். வரக்கூடிய பொங்கலை சந்தோஷமாக கொண்டாட போகிறீர்கள். உங்களது வேலையில் நல்ல சம்பளமும், நல்ல பாராட்டும் கிடைக்கப் போகின்றது. கண் கலங்கும் அளவிற்கு பிரச்சனைகள் வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் அதை சமாளிக்கும் மன தைரியம் உங்களிடம் உண்டு. தினந்தோறும் ஹனுமன் வழிபாடு மன உறுதியை மேம்படுத்தும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்ப சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் அமைதியாக இருந்தாலும், பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். வீண் வம்பை நீங்கள் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். என்ன செய்வது? சில நேரங்களில் நம்முடைய நேரம், நம்முடைய தலையெழுத்து சரி இருக்காது. உங்கள் மேல் தவறு இல்லை என்றாலும் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அனுசரித்து செல்ல வேண்டும். நிதானத்தோடு இருந்தால் எந்த ஒரு பெரிய பாதிப்புகளிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மற்றபடி சொந்தத் தொழிலும், அலுவலகப் பணியும் எப்போதும்போல செல்லும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் கடன் வாங்காதீர்கள். நீண்டதூர பிரயாணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு கடுமையான வார்த்தைகளை குறைத்துக்கொண்டு, அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் என்றால் பிரச்சனைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தினமும் அம்பாள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆனால் அவ்வபோது வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் வரத்தான் செய்யும். அதை நீங்கள் இந்தவாரம் சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அனாவசியமாக உங்களது வேலையை பற்றி அடுத்தவர்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களது வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்