இந்த வார ராசி பலன் : ஜனவரி 1 முதல் 7 வரை

Indha vara rasi palan

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைவது மகிழ்ச்சி தரும். நீண்டநாள்களாக செல்லவேண்டும் என்று நினைத்திருந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானமும் இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைக்கும்.

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 

அசுவினி: 2,3,4,6,7; பரணி: 1,3,4,5,7; கார்த்திகை: 1,2,3,4,5

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

அசுவினி: 1,5; பரணி: 2,6; கார்த்திகை: 6,7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் மருத்துவச் செலவுகள் இருக்காது. நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.

வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

கார்த்திகை: 1,2,3,4,5; ரோகிணி: 1,2,3,5,6; மிருகசீரிடம்: 2,3,4,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 3,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

கார்த்திகை: 6,7; ரோகிணி: 4,7; மிருகசீரிடம்: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லோகத்தை 27 முறை பாராயணம் செய்யவும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு.தந்தை வழி உறவினர்கள் உதவி செய்வார்கள்.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்

புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சக கலைஞர்களுடன் நல்ல நட்புறவு ஏற்படும். அவர்களால் அனுகூலமும் உண்டாகும்.

மாணவ மாணவியர் உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகுவதுடன் பாடங்களில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மிருகசீரிடம்: 2,3,4,6,7; திருவாதிரை: 3,4,5,6,7; புனர்பூசம்: 1,3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 4,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மிருகசீரிடம்: 1,5; திருவாதிரை: 1,2; புனர்பூசம்: 2,6

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

கடகம்:
kadagamகடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்துவிடுவீர்கள். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.

குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

புனர்பூசம்: 1,3,4,5,7; பூசம்: 1,2,5,6; ஆயில்யம்: 1,2,3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

புனர்பூசம்: 2,6; பூசம்: 3,4,7; ஆயில்யம்: 4,5

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் ஆதாயம் உண்டாகக்கூடும். குடும்பம் தொடர்பான முடிவுகளைச் சிந்தித்து எடுப்பீர்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களுக்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், சக பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மகம்: 2,3,4,6,7; பூரம்: 1,3,4,5,7; உத்திரம்: 1,2,3,4,5

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மகம்: 1,5; பூரம்: 2,6; உத்திரம்: 6,7

வழிபடவேண்டிய தெய்வம்:
விநாயகர்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற பணிமின் கனிந்து

கன்னி:
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டா லும் உடனே சரியாகிவிடும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும்.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்து அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக பணியா ளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புத் தருவார்கள்.

கலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றாலும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு முயற்சி அவசியம்.

மாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சிரமம் இல்லாத வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

உத்திரம்: 1,2,3,4,5; அஸ்தம்: 1,2,3,5,6; சித்திரை: 2,3,4,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

உத்திரம்: 6,7; அஸ்தம்: 4,7; சித்திரை: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்களுக்கு பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும்.

மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய காலம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

சித்திரை: 2,3,4,6,7; சுவாதி: 3,4,5,6,7; விசாகம்: 1,3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

சித்திரை: 1,5; சுவாதி: 1,2; விசாகம்: 2,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்
முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்
மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.

விருச்சிகம்:
virichigamவிருச்சக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி சில தடைகள் உண்டாகும்.

மாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

விசாகம்: 1,3,4,5,7; அனுஷம்: 2,5,6; கேட்டை: 3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2,3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

விசாகம்: 2,6; அனுஷம்: 1,3,4,7; கேட்டை: 1,2,4,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

தனுசு:
dhanusuதனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மூலம்: 4,6,7; பூராடம்: 1,5,7; உத்திராடம்: 1,2,3,4

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மூலம்: 1,2,3,5; பூராடம்: 2,3,4,6; உத்திராடம்: 5,6,7

வழிபடவேண்டிய தெய்வம்:
தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

மகரம்:
magaramமகர ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும்.

வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மாணவ மாணவியருக்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

உத்திராடம்: 1,2,3,4; திருவோணம்: 1,2,3,5; அவிட்டம்: 2,3,4,6

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

உத்திராடம்: 5,6,7; திருவோணம்: 4,6,7; அவிட்டம்: 1,5,7

வழிபடவேண்டிய தெய்வம்:
விநாயகர்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

கும்பம்:
kumbamகும்ப ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு பலன் பெறுவீர்கள்..

மாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருந்து சாதிப்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

அவிட்டம்: 2,3,4,6; சதயம்: 3,4,5,6,7; பூரட்டாதி: 1,3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 1,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

அவிட்டம்:1,5,7; சதயம்: 1,2; பூரட்டாதி: 2,6

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

மீனம்:
meenamமீன ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன் யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பதால், பணிகளை எளிதாக முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதுடன் பண வசதியும் திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கிடைக்கும்.. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

பூரட்டாதி: 1,3,4,5,7; உத்திரட்டாதி: 1,2,5,6; ரேவதி: 1,2,3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

பூரட்டாதி: 2,6; உத்திரட்டாதி: 3,4,7; ரேவதி: 4,5

வழிபடவேண்டிய தெய்வம்:
சிவபெருமான்

பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.