இந்த வார ராசிபலன் 11-01-2021 முதல் 17-01-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வெற்றியை பெற்றுத் தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. மன உறுதியோடு, தைரியத்தோடு, நம்பிக்கையோடு, செயல்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் சற்று அதிக அக்கறை தேவை. அலுவலகப் பணியும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் செல்லும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கப் போகின்றது. தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களுக்கு, விடிவுகாலம் பிறக்கும். உங்களது வேலையில் மட்டும் சற்று அதிக கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் போன போக்கில் செய்யக்கூடாது. அதில் வரக்கூடிய நல்லது கெட்டதை யோசித்து நிதானமாக செயல்பட்டால் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கலாம். யாரை நம்பியும் பணத்தை முதலீடாக போட வேண்டாம். விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்தெறியும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையோடு செயல்பட வேண்டியது அவசியம். கோபத்தை குறைக்க வேண்டும். உறவினர்களிடத்திலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடத்திலும் பொறுமையாக பேசவேண்டும். உங்க வீட்டு விஷயங்களை, மூன்றாவது மனிதர்களிடம் சொல்லி பஞ்சாயத்து வைக்காதீர்கள். முடிந்தவரை வாயை மூடிக்கொண்டு இருப்பது எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் நல்லது. யார் என்ன கேள்வி கேட்டாலும் மௌனத்தை மட்டுமே பதிலாக சொல்லுங்கள். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். அலட்சியமாக எதையும் நினைத்து விடக்கூடாது. சிறு துரும்பாக இருந்தாலும், சிறிய வேலையாக இருந்தாலும், அதற்கான மதிப்பு கொடுத்து, நின்று நிதானத்தோடு யோசித்து ஒரு வேலையை செய்ய தொடங்குங்கள். வண்டி ஓட்டும் போது நிதானம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. வாக்குவாதத்திலும் நிதானம் தேவை. இப்படி நிதானத்தைக் கடைப்பிடித்தால் இந்த வாரம் தப்பித்துக் கொள்வீர்கள். மத்தபடி நிதி நிலைமை சீராக இருக்கும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்கள் கைக்கு வந்து, சந்தோஷத்தில் திக்குமுக்காடி போவீர்கள். ஆனால் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதிலும் உஷாராக இருக்கவேண்டும். அனாவசியமாக செலவு செய்யக்கூடாது‌. மருத்துவமனைக்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலும் அலுவலகப் பணியும் எப்போதும் போல சுமுகமாக செல்லும். பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. சொந்த தொழிலில் முதலீடு செய்யலாம். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப் போகின்றது. எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து வெற்றி கிடைப்பதால், சிலசமயங்களில் உங்களது புத்தி தடுமாற நேரிடும். ஆக நிதானத்தோடு செயல்பட வேண்டும். தலைகனம் வரக்கூடாது. எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் இந்த வாரம் நடப்பதற்கு அதிகமாகவே வாய்ப்பு உள்ளது. நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரமோஷன் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சம்பள உயர்வும் உண்டு. சொந்தத் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் புதிய ஆடை, புதிய நகை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தோடு குல தெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமைதி தரும் வாரமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த மனசஞ்சலங்கள், குழப்பங்கள் இந்த வாரம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். வேலை செய்யும் இடத்தில் இருந்த இடர்பாடுகள் இனி இருக்காது. சொந்த தொழிலில் வந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தேவையற்ற கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பழைய சிவன் கோவில்களுக்கு சென்று பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையிலும் சரி, தொழிலிலும் சரி, சண்டை வந்த சொந்த பந்தங்களும் சரி, எல்லா  பிரச்சினைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். உறவுகளுக்கிடையே பிரச்சினைகள் இருந்தாலும் நீங்கள் சுமூகமாக விட்டுக் கொடுத்தால் நன்மை உங்களுக்கே. அனாவசியமான வார்த்தைகளை பேசி உறவுகளுக்கிடையே பிரச்சனைகளை வர வைத்துக் கொள்ள வேண்டாம். அமைதியாக இருந்தால் தானாக எல்லாம் சரியாகிவிடும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கடன் பிரச்சினை தீரும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை காக்க வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. எல்லா விஷயத்திலும் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடினமாக முயற்சி செய்து, கடினமாக உழைத்தால் எல்லா சிக்கலிருந்தும் சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. நேர்மையோடு உண்மையே பேசுங்கள். நாளைக்கு வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். தினந்தோறும் அனுமன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. இருப்பினும் நீங்கள் எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பொறுமை காப்பது நன்மை தரும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். சேமித்து வைத்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். சிலருக்கு திருமண யோகம் வருவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது. வெளியூரில் இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக உங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்து வாருங்கள்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு அப்போது பிரச்சினைகள் இருப்பது போல உணர்ந்தாலும், இனி வரக்கூடிய காலத்தில் நல்லதே நடக்கும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா விஷயத்திலும் அவசரப்பட்டு, முன் கோபப்பட்டு வரக்கூடிய நல்லதை, நீங்களே எட்டி உதைத்து விடவேண்டாம். கொஞ்சம் கஷ்டமாக இருக்கத்தான் செய்யும். அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் பொறுமை காப்பவர்களுக்கு இறுதியில் வெற்றி நிச்சயம். அடுத்து வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. முருகன் வழிபாடு நன்மை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்