ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – ஜனவரி 13 முதல் 19 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு உங்களை வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் பேசும் வார்த்தையில் மட்டும் அதிக கவனம் தேவை. வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் இருக்கும்‌. சொந்த தொழிலில் சுமுகமாக நடைபெறும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.

ரிஷபம்:
சென்ற வாரம் உங்களால் முடிக்க முடியாத வேலைகளை கூட இந்த வாரம் சுலபமாக முடித்து விடுவீர்கள். காரிய தடை விலகும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவது நன்மை தரும். தினம்தோறும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
அதிக முயற்சி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை இந்த வாரம் உங்களுக்கு இருக்கும். அனாவசியப் பேச்சை தவிர்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் உஷாராக இருங்கள். தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. படிப்பில் அக்கறை எடுத்து படிப்பது மாணவர்களுக்கு நல்லது. வியாழக்கிழமை குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

கடகம்:
பண வரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த நினைப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயரை சுலபமாக வாங்கி விடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குவதாக இருந்தால் கூட இந்த வாரம் தொடங்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினந்தோறும் விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மை கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:

இந்த வாரம் பணவரவுக்கும் மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இருக்காது. உங்கள் பேச்சுக்கு உங்கள் குடும்பத்தில் நல்ல மதிப்பு இருக்கும். ஏனென்றால் சொன்ன வாக்கை காப்பாற்றும் தருணம் இது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உங்கள் வேலையில் கவனமாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். படிப்பில் மாணவர்களுக்கு அதிக கவனம் தேவை. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

கன்னி:

வீண்விரயம் ஏற்படக்கூடிய வாரமாக இது உங்களுக்கு அமையப்போகிறது. உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். மனதில் சிறு சஞ்சலம் இருப்பதுபோல் ஒரு நிலை இருக்கும். ஆனால் உற்சாகத்தோடு பணியில் ஈடுபட்டால் எந்த பிரச்சனையும் வராது. பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் சுறுசுறுப்பாக இருப்பது முன்னேற்றத்தை தரும். தினம் தோறும் ஹனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

துலாம்:

பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தடைகள் எதுவும் வராது. மாணவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து படிப்பில் ஆர்வம் காட்டுவது வெற்றி தரும். செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்:

பணவரவிற்கு ஏற்றவாறு செலவுகள் உங்களை பின் தொடரும். எந்த காரியத்திலும் அவசரம் வேண்டாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். சொந்தத் தொழிலில் சுமுகமான நிலை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது முன்னேற்றம் அளிக்கும். உங்கள் வீட்டில் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று தினந்தோறும் வழிபடுவது நன்மை தரும்.

தனுசு:

உங்களது வருமானத்திற்கு மீறிய செலவு வரப்போகும் வாரம் இது. சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்காமல் தப்பித்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழிலில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது வெற்றி தரும். சிவன் வழிபாடு செய்வது நல்லது.

மகரம்:

பணவரவு சீராக இருக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி அடையப் போகிறீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் உங்களை வந்து சேரும். சொந்தத் தொழிலில் சற்று கவனமாக செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பில் மிக மிக கவனம் தேவை. வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

கும்பம்:

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, உங்களை பாராட்டுகிறார்கள் என்று அவர்களை நம்பி விடாதீர்கள். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் யாரையும் நம்பி விட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சனிக்கிழமை அன்று நவக்கிரகத்திற்கு விளக்கு போட்டு வழிபடுவது நன்மை தரும்.

மீனம்:

நல்ல முன்னேற்றம் அமையக்கூடிய வாரமாக இருந்தாலும், உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சத்தம்போட்டு நீங்கள் சொல்லும் வார்த்தையை விட, பொறுமையாக பேசும் வார்த்தைக்கு மதிப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் நல்ல பெயரானது உங்கள் முன்கோபத்தால் கெட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வாக்குவன்மை அதிகரிக்கும். உங்கள் பேச்சை அனைவரும் மதிப்பார்கள். சொந்தத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் யோசித்து செய்வது நல்லது. வெள்ளி கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று அரளிப்பூ செலுத்தி வழிபடுவது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -