இந்த வார ராசிபலன் 18-01-2021 முதல் 24-01-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள். இது நாள் வரை உங்களது அலுவலக வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். உங்களது மேலதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக உங்களை புரிந்து கொள்வார். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை நீங்கும். எதிர்பாராத பணவரவு வந்து சந்தோசத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும் பொழுதும், வெளியிடங்களில் சாப்பிடும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றி தான். எந்த வார்த்தையை சொன்னாலும் அது நூற்றில் ஒரு வார்த்தையாக, சரியாக இருக்கப்போகின்றது. யோகம் தரும் வாரமாக இருந்தாலும், உங்களது வார்த்தையில் மட்டும் நீங்கள் கவனம் கொள்ளவேண்டும். அவசரப்பட்டு கோபத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை விட்டு விட்டால் அதன் மூலம் பிரச்சனைகள் பெரிதாவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். வேலையாக இருந்தாலும், சொந்தத் தொழிலாக இருந்தாலும் நிதானத்தை தவறவிட வேண்டாம். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக அமையப்போகின்றது. பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு நீங்கள் தொடங்கப் போகும் வேலை சுறுசுறுப்பாக வெற்றியில் முடியும். சொந்த தொழில் நல்ல லாபத்தோடு செல்லும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில் மட்டும் கொஞ்சம் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். பத்திரப்பதிவு போன்ற அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். நீங்களே முன்னின்று கவனித்து கொள்ளுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக நடந்துகொள்ள வேண்டும். வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, உறவினர்களின் வீடாக இருந்தாலும் சரி, உங்களது வார்த்தையை கவனமாக பேசுங்கள். உங்களை யாரேனும் தவறாக புரிந்து கொண்டு, தரம் குறைவாக பேசினாலும், இழிவாக பேசினாலும் அதற்காக நீங்கள் கோபப்பட வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வரும் காலங்களில் எல்லாம் சரியாகிவிடும். உங்களை புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் ஒரு நாள் வரும். பொறுமை அவசியம் தேவை. தேவையற்ற விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் விட்டுக்கொடுப்பது நன்மையை தரும். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக அமையப்போகின்றது. ஏதாவது புதிய முயற்சிகளை வைத்திருந்தாலும், இந்த வாரம் தொடங்கலாம். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, மன நிம்மதி அடையும் வாரமாக இருக்கப்போகின்றது. கோவில்களுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றது. எதையும் மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க! மனதிற்கு நிம்மதியை தரும் சில சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்பு உண்டு. மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் யோசித்து செயல்பட வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த ஒரு புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். முடிந்தவரை புதிய முடிவு எடுப்பதை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியோர்களின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். மற்றபடி வருமானம் சீராக இருக்கும். பண பிரச்சனையும் வராது. நீண்ட நாட்களாக வசூலில் ஆகாமல் இருந்த கடன் தொகைகள் கூட வசூலாகும். தினமும் காலை எழுந்ததும் குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத தைரியம் வந்து, சில காரியங்களை அதிரடியாக செய்து முடித்து, பாராட்டையும் பெற போகிறீர்கள். அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டு, பாராட்டு மழை பொழியும். பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் ஒரு அறிவாளி என்று இந்த ஊர் உலகமே பேச போகின்றது என்றால் பாருங்களேன்! திறமை வெளிப்படும் வாரம் இது. திறமை அதிகமாக வெளிப்பட்டால் அவ்வப்போது சின்னச் சின்ன தவறுகள் வெளிவரும். அதை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம். மற்றபடி இந்த வாரம் சந்தோஷமான வாரம் தான். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொலைபேசி மூலமாகவும் நண்பர்களின் மூலமாக நல்ல செய்தி செவிகளில் வந்து சேரப்போகிறது. நீண்ட நாட்களாக திருமணம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வருவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு. சுப செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டில் சுப விசேஷங்கள், உறவினர்களின் வருகை இருந்துகொண்டே இருக்கும். இப்படியாக சந்தோஷம் சம்பந்தப்பட்ட தருணங்கள் நிறையவே உங்களுக்கு வரப்போகின்றது. மகிழ்ச்சியோடு இந்த வாரத்தை செலவழிக்கலாம். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கப் போகின்றது. விட்டுச்சென்ற உறவுகள் உங்களை தேடி வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களது வேலைகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாமல் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களை உங்களுடன் இருக்கும் அலுவலக பணியாட்களிடமோ அல்லது நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நன்மை தரும். சிவன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் மிக மிக கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. பிரச்சனை நடக்கும் இடத்தில் நீங்கள் இருக்க கூட மாட்டீர்கள். ஆனால் உங்கள் மேல் பழி வரும். உங்களை தேடி பிரச்சினைகள் வரும். சண்டை சச்சரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் மௌனவிரதம் தான் இருக்க வேண்டும். ஒரு வார்த்தையை விட்டால் கூட, பிரச்சனை மொத்தம் உங்கள் பக்கம் திரும்புவருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயத்தில் இருந்து, வேலை செய்யும் இடத்தில் வரக்கூடிய விவகாரங்களில் இருந்து தப்பிக்க வாய்ப்பே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கும் போது தினர கூடாது. தைரியத்தோடு முன்னின்று சமாளிக்க பழகிக் கொள்ளுங்கள். தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வாருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். வாழ்க்கையில் விரக்தி நிலையில் உள்ளவர்களுக்கு கூட, சில நல்ல காலம் பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அனாவசியமாக யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள, தினமும் காலை பத்து நிமிடம் தியானம் செய்வது நன்மையை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய வாரமாக அமையப்போகின்றது. இதுநாள் வரை பொங்கலுக்கு முன்பாக கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், இனிமேல் வரக்கூடிய காலகட்டத்தில் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொண்டால் இந்த மாதத்தை நல்லபடியாக கடக்க முடியும். சில பேருக்கு வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் உங்களை தூக்கி நிறுத்தும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து விடுங்கள். நாளைக்கு என்று எந்த வேலையையும் தள்ளிப் போடாதீங்க. எதையும் நினைத்துக் குழப்பிக் கொள்ளாமல் முயற்சியில் மட்டும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் உண்டு. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்