இந்த வார ராசிபலன் 25-01-2021 முதல் 31-01-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விஷயங்களை இந்த வாரம் தொடங்கலாம். சில தடைகள் வருவது போல இருந்தாலும், கடைசியில் உங்களுக்குத்தான் வெற்றி. நிதி நிலைமை சீராக இருக்கும். வாராக் கடன் வசூலாகும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரம் தான். செவ்வாய்க்கிழமை அன்று முருகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக அமையப்போகின்றது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த தேவையற்ற சஞ்சலங்கள் நீங்கி, மனது தெளிவு பெறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொலைபேசியின் மூலமாகவோ அல்லது தெரிந்தவர்களின் மூலமாகவோ உங்களுக்கு பெரிய நல்ல வாய்ப்பு ஒன்று தேடி வரப்போகின்றது. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது உங்களது கையில்தான் உள்ளது. மற்றபடி அலுவலக வேலை சொந்த தொழிலில் முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அவசர முடிவாக இருந்தாலும், அவசிய முடிவாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால், ஒன்றுக்கு பலமுறை யோசிக்கலாம். பலரிடம் ஆலோசனை கேட்கலாம். அவசரப்பட்டு யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கோபப்பட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வாரம் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. எதிர்பாராத யோகம் எதிர்பாராத நேரத்தில் உங்களை வந்து சேரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகின்றது. சரி தவறு, எது என்று உடைத்து பேசி ஒரு முடிவைக் கொடுக்கும் அளவிற்கு உங்களது அறிவு திறனில் முன்னேற்றம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சுறுசுறுப்போடு செயல்பட்டு, வெற்றிகளை பெற போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் அனுமன் வழிபாடும் மன உறுதியை மேலும் அதிகப்படுத்த உதவியாக இருக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற மன குழப்பத்தில் இருந்து விடிவு காலம் பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகளை, தீர்வுக்க மருத்துவரிடம் செல்லப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனையும் இந்த வார முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்து வந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாரம் அதை கையில் எடுக்கலாம். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் முதலீட்டை கவனமாக செலுத்தவேண்டும். தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் தலையிட்டு கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சில பேருக்கு சம்பள உயர்வும் கிடைக்கும். சில பேருக்கு நீண்டநாட்களாக வசூல் ஆகாது என்று இருந்த வாராக் கடன் கூட வசூல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்களது வார்த்தைகள் கவனம் தேவை. எல்லாம் நல்லதாகவே நடந்து வருகிறது என்ற நினைப்பில், சந்தோஷத்தில் அவசரப்பட்டு யாரிடமும் எடுத்தெறிந்து பேசும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சனையாக வரும். பயணங்களின் போது கவனம் தேவை. வெளியிடங்களில் முடிந்தவரை உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க உகந்த வாரமாகும். குடும்பப் பெண்களின் மனது நிறைவாக இருக்க போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. இதுநாள்வரை உங்களுக்கு பிரச்சினை கொடுத்து வந்தவர்கள் கூட, இனி வரப் போகும் காலகட்டங்களில் ஒதுங்கி விடுவார்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்திலேயே இருந்தாலும், உங்களுடைய அடி மனதில் ஏதோ ஒரு சஞ்சலம் இருப்பது போல உணர்வு இருக்கும். குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை ஒருமுறை வழிபட்டு வருவது நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவு தரும் வாரமாக அமையப்போகின்றது. எல்லாம் சுபச்செலவு தான். பயப்படத் தேவையில்லை. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். திருமணங்களுக்கு செல்லவேண்டிய செலவு வரும். நீண்ட தூரப்பயணம் செலவு வரும். சீர் செலவு வரப்போகின்றது. உங்களுடைய வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கும் நிறையவே வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கித்தான் செலவை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இருப்பினும் சந்தோஷத்திற்கு குறைவில்லை. வியாழக்கிழமைகளில், குபேரனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நல்ல வேலையைத் தேடி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகின்றது. வேலையில் இடமாற்றம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் அவ்வப்போது சின்னச் சின்ன சிக்கல்கள் வரத்தான் செய்யும். இருப்பினும் பிற்காலத்தில் அவை அனைத்தும் சரியாகிவிடும். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களது குடும்ப விஷயத்தை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடைபெற தொடங்க வாய்ப்பு உள்ளது. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. எந்த ஒரு செயலையும் தொடங்கலாமா வேண்டாமா என்ற மனநிலை உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். எது சரி எது தவறு என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாற போகிறீர்கள். இருப்பினும் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, அதிகாலை வேளையில் கண்விழித்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானம் செய்து வருவது மனக்குழப்பத்திற்கு ஒரு தீர்வை தரும். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். தடுமாற்றம் வரும் என்பதால் இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வார இறுதியில் பல நன்மைகள் உங்களை தேடி வரப்போகின்றது. உங்களது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க மட்டும் முடியாத சூழ்நிலை உங்களுக்கு நேரிடும். கவலை வேண்டாம். வரப்போகும் காலத்தில் எல்லாம் சரியாகிவிடும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். இனி கடன் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இருந்துவந்த தடைகள் விலக போகும் வாரம் இது. உங்களுக்கு வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள், தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள், உறவுகளுக்குள் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உங்களுக்கு இருக்கும் சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, சுறுசுறுப்பாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி காண முடியும். எந்த ஒரு வேலையும் நாளை என்று தள்ளிப்போடாமல், இன்றே முடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். தினந்தோறும் முருகன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்