ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – ஜனவரி 6 முதல் 12 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
இந்த வாரம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும். முக்கியமான விஷயங்களில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமென்றால் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நன்மையைத் தரும். அவசரம் வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் வேலைச்சுமை காரணமாக சோர்வு ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் பண பரிமாற்றத்தில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் அதிக ஆர்வம் ஏற்படும்.

ரிஷபம்:
அதிகமான பணவரவின் காரணமாக குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத உறவுகளின் வருகையால் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரம்தான் இது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் அனாவசிய விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் மட்டும் ஆர்வம் செலுத்துவது முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -

மிதுனம்:
நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு உங்களைத் தேடி வரும். பணவரவிற்கு ஏற்றவாறு குடும்பத்தில் சுபச் செலவுகளும் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினை இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களாக இருந்தால், உங்கள் திறமையை மேலதிகாரிகளிடம் நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வியாபாரம் முன்னேற்றம் அடையும். மாணவர்கள் கல்வி கற்பதில் எந்த தடையும் ஏற்படாது.

கடகம்:
இந்த வாரம் செலவிற்கு ஏற்றவாறு உங்களது வருமானம் சீராகவே இருக்கும். கடன் கொடுப்பதாக இருந்தாலும், பெறுவதாக இருந்தாலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உங்களது பொருட்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு, எவ்வளவு தான் உழைப்பினை போட்டாலும் நல்ல பெயர் கிடைக்காது. வியாபாரத்தில் லாபமானது சீராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபாடு காட்டுவார்கள்.

- Advertisement -

சிம்மம்:

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கப்போகும் வாரமாக இது அமையும். சுப விரயம் ஏற்படும். அதற்கான பண வரவும் வந்துவிடும். வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. சுமுகமான நிலை இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் அதிக ஆர்வம் எடுத்து படிப்பது வெற்றியை தரும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான வாரம் தான்.

- Advertisement -

கன்னி:

தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இந்த வாரம் கைகூடி வரும். உங்கள் செலவுக்குத் தேவையான பணவரவு இருக்கும். அலுவலக வேலை காரணமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

துலாம்:

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணத்தை மேற்கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை அடையும். பணவரவு சீராக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்கள் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தேவையற்ற சகவாசங்களை விட்டுவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு நல்லது.

விருச்சிகம்:

உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை செய்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் இது நாள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் இப்போது உங்கள் கையில் வந்து சேரும். வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பது வெற்றியை தரும்.

தனுசு:

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களது பண வரவு இந்த வாரம் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களது நண்பர்களின் மூலம் நல்ல செய்தி உங்களை வந்துசேரும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. சுமுகமாக இருக்கும். மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

மகரம்:

பணம் வரவே வராது என்று நினைத்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து உங்களுக்கு இந்த வாரம் பணம் வந்து சேரும். உறவினர்களுக்கு இடையே சுமூகமான நிலை ஏற்படும். வேலை செய்து கொண்டிருப்பவர்கள், எவ்வளவு தான் உழைத்தாலும் நல்ல பெயரை அவ்வளவு சுலபமாக வாங்கி விட முடியாது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். படிப்பில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்:

உங்களுக்கு வரும் வருமானத்தை விட உங்களுக்கு ஏற்படும் செலவானது இரட்டிப்பாகும். உங்களது நண்பர்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள். கடன் பிரச்சனை தீரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் உங்களை தேடிவரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கரை காட்ட வேண்டிய வாரம் இது.

மீனம்:

வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்படுவது நன்மை தரும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -