இந்த வார ராசி பலன் – ஜூலை 01 முதல் 07 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன் சக பணியாளர்களும் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் இருக்கும் நிலையே நீடிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

ரிஷபம்

Rishabam Rasi

பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை வலுப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் சாதகமாகும். பால்ய கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களைத் தீட்டவும் செய்யலாம். சாதகமாக முடியும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

midhunam

பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால், உற்சாகமாக வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல் வடிவம் கொடுப்பீர்கள்.

- Advertisement -

கடகம்

Kadagam Rasi

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சையினால் உடனே சரியாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

சிம்மம்

simmam

பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களுக்கு படிப்பை விடவும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

கன்னி

Kanni Rasi

பணவரவு திருப்திகரமாக இருக்கும். சில அநாவசியமான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைத்திலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

துலாம்

Thulam Rasi

தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வார இறுதியில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

தனுசு

Dhanusu Rasi

பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். சகோதரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். வழக்குகளில் காலதாமதம் ஏற்படும். வியாபாரம் நன்றாக நடக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும்.

மகரம்

Magaram rasi

பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கண்களில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான பண உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

Kumbam Rasi

பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.வேலையின் காரணமாக குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்

Meenam Rasi

எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்களுடன் இணக்கமான உறவு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனுக்குடன் சரியாகிவிடும். அலுவலகத்தில் தங்கள் பணிகளை மட்டும் கவனமாகச் செய்து வருவது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்னை இல்லாமல் இருக்கும். வேலையாள்களிடம் கவனமாக இருக்கவும்.மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -