இந்த வார ராசி பலன் – ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
பார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட உங்கள் ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
தன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய நீங்கள் இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

கடகம்:
zodiac sign
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட உங்கள் ராசிக்கு சகல விதத்திலும் மேன்மையான பலன்களை இந்த வாரம் அடைவீர்கள். தாராள பண வரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:
Leo zodiac sign
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
Virgo zodiac sign
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் உங்களுக்கு இந்த வாரம் உன்னதமான அமைப்பு என்பதால் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

துலாம்:
Libra zodiac sign
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நல்ல அமைப்பு என்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படகூடிய ஆற்றலை பெறுவார்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, தொழில் ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

தனுசு
Dhanusu Rasi
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட நீங்கள் இந்த வாரம் நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்:
Capricornus zodiac sign
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட நீங்கள் இந்த வாரம் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.

கும்பம்:
Aquarius zodiac sign
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட நீங்கள் இந்த வாரம் உன்னதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும்.

மீனம்:
Pisces zodiac sign
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட நீங்கள் இந்த வாரம் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும்.

- Advertisement -