இந்த வார ராசிபலன் 20-07-2020 முதல் 26-07-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பம் தெளிவாகிவிடும். தைரியத்தோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றிதான். பயம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்படும் பட்சத்தில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. வீட்டில் உறவினர்களின் வருகையால் சுபச்செலவு ஏற்படும். முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தினமும் முருகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபத்தை தரக்கூடிய வாரமாகதான் இருக்கப்போகின்றது. நின்று போன சுபகாரிய பேச்சுகளை, தாராளமாக தொடங்கலாம். சொத்து வாங்குவதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும், இந்தவாரம் முயற்சிகளை மேற்கொள்வது வெற்றியை தேடித்தரும். உடல் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். பணப் பரிமாற்றத்தின் போது மட்டும் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் பொருட்களை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். தினம் தோறும் அம்மன் வழிபாடு மனமகிழ்ச்சியை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் உறவினர்களிடம் பேசும்போது, அதிகமாக வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மௌனத்தை மட்டுமே பதிலாக சொல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். நீங்க நல்லது செஞ்சா கூட, இந்த வாரம் கேட்டதில் போய் முடிந்துவிடும். உஷாராக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாட்டை மனதார நினைத்து பூஜை செய்து வந்தால் நன்மை நடக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. அவசர அவசரமாக ஏதாவது ஒரு வேலையை செய்து விட்டு, பின்னால் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். ஆகவே, பொறுமையாகவே உங்களது வேலையும் செய்யுங்கள். உங்களது பேச்சையும் நிதானமாகப் பேசுங்கள். உங்களது செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பிலிருந்து தேவைக்காக ஒரு காசு கூட எடுக்காதீர்கள். கையில்  இருக்கும் வருமானத்தை வைத்தே செலவு செய்யுங்கள். பத்து ரூபாய்தானே என்று சேமிப்பிலிருந்து எடுத்தால் கூட, அந்த செலவு பெரியதாக இழுத்து விடும். வீண் விரயம் ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்மராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான லாபம் கிடைக்கப் போகின்றது. சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகள் கூட நல்ல வெற்றியை தேடித்தரும். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியைத் தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகின்றது. சண்டை போட்டுச் சென்ற, சொந்தக்காரர்கள் கூட தானாகவே வந்து பேசுவார்கள். உங்களது அருமை பெருமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நேரம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். மற்றபடி தொழில், வேலை, பணப்பரிமாற்றம், இதில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் கொடுக்கவும் வேண்டாம். கடன் வாங்கவும் வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் யாரையும் நம்பி எந்த ரகசியத்தையும் வெளிப்படையாக சொல்லாதீர்கள். முக்கியமாக உங்கள் வீட்டு குடும்ப விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கவனமாக செயல்படவேண்டும். உடல் ஆரோக்கியத்தை பத்திரமா பாத்துக்கோங்க. சுப காரியத்தை இந்த வாரம் தொடங்க வேண்டாம். வீட்டில் யார் திட்டினாலும், இந்த காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுங்கள். எதையுமே பெருசா எடுத்துக்காதீங்க! சொந்த தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். எல்லா பிரச்சனைகளும் இந்த வார இறுதியில் சரியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தினம்தோறும் சிவபெருமானை நினைத்து, கண்களை மூடி தியானம் செய்துவிட்டு, உங்களது தினசரி வேலைகளை தொடங்குங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் இந்த வாரம் அதிக கவனம் செலுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தரக்கூடிய பொருட்களை சாப்பிட்டு வர தொடங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். தேவைக்கு அதிகமாக பணம் வந்தாலும் அதை சேமிப்பில் எடுத்து வைக்க பழகுங்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் மனதைனியும் உங்களிடம் இருப்பதால், எந்த கவலையும் இல்லை. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் மகாலட்சுமி வழிபாடு மிகவும் சிறப்பானது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் சொந்தத் தொழிலிலும், வேலை செய்யும் அலுவலக பணியிலும், கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். வலிய வந்து உங்களை ஏமாற்ற பார்ப்பார்கள்! ஏமாந்து விடாதீர்கள். தேவையற்ற பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. பெரியோர்களின் ஆலோசனையை கேளுங்கள். புது நபரை நம்பி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கி விடாதீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வார்த்தையில் நிதானம் தேவை. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு அவசியம்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த ஒரு புதிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். திருமண  சுபகாரிய பேச்சு வார்த்தைகளை தள்ளிப்போடுவது நல்லது. நீங்க நல்லாவே வேலை செஞ்சாலும், உங்க முதலாளியிடம் திட்டு வாங்குவீங்க! அடுத்த வாரம் எல்லாமே சரியாகிவிடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும், அந்தந்த நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மறக்காதீர்கள். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனைத் தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி, செவிகளுக்கு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும். கடன் தொகை வசூலாகும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். இருப்பினும், உங்களது வார்த்தையில் மட்டும் கவனம் தேவை. யாரிடமாவது பேசி மாட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகப் பணி, சொந்தத் தொழில் என்று எவ்வளவுதான் வேலை இருந்தாலும், சொந்த வேலையை கவனிக்க மறந்து விடாதீர்கள். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு அவசியம்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மனைவியை விட்டுக்கொடுத்து சென்றால், பிரச்சினைகள் சுமூகமாக போய்விடும். குடும்ப உறுப்பினர்களின், உடல் நலத்தில், ஆரோக்கியத்தை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். புதியதாக சொத்துக்களை வாங்குவதாக இருந்தால் இந்த வாரம் வாங்கலாம். சுபச்செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போது கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். முருகன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.