இந்த வார ராசிபலன் 27-07-2020 முதல் 02-08-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும் யோகமும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

ரிஷபம்:
Taurus zodiac sign
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் யோகம், நினைத்ததை செயல்படுத்த கூடிய திறன் இந்த வாரத்தில் உண்டு. பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் பேசும் போது பேச்சில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது.

மிதுனம்:
Gemini zodiac sign
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்கள் என்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிவ வழிபாடு செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.

கடகம்:
zodiac sign
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இருக்கும். சிறப்பான பணவரவுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். அம்மன் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

சிம்மம்:
Leo zodiac sign
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான அமைப்பாகும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிக்கனமாக இருப்பதும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. சனி பகவான் வழிபாடு மிகவும் நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும், இடமாற்றமும் கிடைக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

தனுசு
Dhanusu Rasi
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடுமையான நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சிறப்பான அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகளும், சலுகைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உறவினர்களால் சில நேரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

மகரம்:
Capricornus zodiac sign
தானுண்டு தன் வேலையுண்டு என செயல்படும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் விலகும் நிலை உண்டாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். சனி பகவானை வழிபாடு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.

கும்பம்:
Aquarius zodiac sign
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை தரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு குறைவாகவே இருக்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தாராள தனவரவு உண்டாகும். பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.