இந்த வார ராசி பலன் : ஜூலை 9 முதல் 15 வரை

Indha vara rasi palan

மேஷம்
Mesham Rasiமேஷராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த, காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை அமையும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடும். என்றாலும் தேவையான பணம் இருப்பதால் குடும்பச் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள்.வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

- Advertisement -

அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 9, 10, 12, 13, 14; பரணி: 9, 10, 11, 13, 14, 15; கார்த்திகை: 10, 11, 12, 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 11, 15; பரணி: 12; கார்த்திகை: 9, 13

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந் தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கமபன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

ரிஷபம்
Rishabam Rasiரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும், அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வதாலும், அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதாலும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்

மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு, தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்குத் திருப்தி தரும் வாரம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
கார்த்திகை: 10, 11, 12, 14, 15; ரோகிணி: 11, 12, 13, 15; மிருகசீரிடம்: 9, 12, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 1,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 9, 13; ரோகிணி: 9, 10, 14; மிருகசீரிடம்: 10, 11, 15

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.

மிதுனம்
Mithunam Rasiமிதுனராசி அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்யவேண்டாம். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

மாணவர் மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம்: 9, 12, 13, 14; திருவாதிரை: 9, 10, 13, 14, 15; புனர்பூசம்: 9, 10, 11, 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 10, 11, 15; திருவாதிரை: 11, 12; புனர்பூசம்: 12, 13

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

கடகம்
Kadagam Rasiகடகராசி அன்பர்களே! பணவசதி ஓரளவுக்கே இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 9, 10, 11, 14, 15; பூசம்: 10, 11, 12, 15; ஆயில்யம்: 9, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 12, 13; பூசம்: 9, 13, 14; ஆயில்யம்: 10, 14, 15

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்
simmamசிம்மராசி அன்பர்களே! பொருளாதார வசதி திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 9, 10, 12, 13, 14; பூரம்: 9, 10, 11, 13, 14, 15; உத்திரம்: 10, 11, 12, 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 11, 15; பூரம்: 12; உத்திரம்: 9, 13

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை

காதல் பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

கன்னி
Kanni Rasiகன்னிராசி அன்பர்களே! எதிர்பார்த்தபடியே பணவரவு இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறுசிறு தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்வதுடன் தேவையான உதவியும் செய்வார்கள்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டி இருக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 10, 11, 12, 14, 15; அஸ்தம்: 11, 12, 13, 15; சித்திரை: 9, 12, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 3,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 9, 13; அஸ்தம்: 9, 10, 14; சித்திரை: 10, 11, 15

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

துலாம்
Thulam Rasiதுலாம்ராசி அன்பர்களே! குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டி ருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 9, 12, 13, 14; சுவாதி: 9, 10, 13, 14, 15; விசாகம்: 9, 10, 11, 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 10, 11, 15; சுவாதி: 11, 12; விசாகம்: 12, 13

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராமபிரான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

விருச்சிகம்
Virichigam Rasi
அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மாணவ மாணவியர் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்ப நிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 9, 10, 11, 14, 15; அனுஷம்: 10, 11 12 15; கேட்டை: 9, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 12, 13; அனுஷம்: 9, 13, 14; கேட்டை: 10, 14, 15

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒருக் கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

தனுசு
Dhanusu Rasiதனுசுராசி அன்பர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். இளைய சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள்.

அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 9, 10, 12, 13, 14,; பூராடம்: 9, 10, 11, 13, 14, 15; உத்திராடம்: 10, 11, 12, 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 11, 15; பூராடம்: 12; உத்திராடம்: 9, 13

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

மகரம்
Magaram rasiமகரராசி அன்பர்களே! எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 10, 11, 12, 14, 15; திருவோணம்: 11, 12, 13, 15; அவிட்டம்: 9, 12, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 4,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 9, 13; திருவோணம்: 9, 10, 14; அவிட்டம்: 10, 11, 15

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

கும்பம்
Kumbam Rasiகும்பராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 9, 12, 13, 14; சதயம்: 9, 10, 13, 14, 15; பூரட்டாதி: 9, 10, 11, 14, 15

அதிர்ஷ்ட ஏண்கள்: 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 10, 11, 15; சதயம்: 11, 12; பூரட்டாதி: 12, 13

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

மீனம்
Meenam Rasiமீனராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 9, 10, 11, 14, 15; உத்திரட்டாதி: 10, 11, 12, 15; ரேவதி: 9, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 12, 13; உத்திரட்டாதி: 9, 13, 14; ரேவதி: 10, 14, 15

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

தினம் பலன், வார பலன், மத பலன், காலண்டர் குறிப்புகள், யோகங்கள், கதைகை என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.