இந்த வார ராசிபலன் 01-06-2020 முதல் 07-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியை கடைப்பிடிக்கும் பட்சத்தில் எல்லாம் வெற்றிதான். பதறாத காரியம் சிதறாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படவேண்டும். சொந்தத் தொழிலில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கலாம். அலுவலகப் பணிகள் இப்போது தான் தொடங்கும் நிலையில் உள்ளதால் சில பிரச்சினைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. அம்மன் வழிபாடு சிறந்தது.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்க போகின்றது. இரண்டையும் சரி செய்ய வேண்டிய திறமை உங்கள் கையில்தான் உள்ளது. குளிர்ந்த பொருட்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். திருமண பேச்சு வார்த்தைகளை தொடங்கலாம். தினம்தோறும் லக்ஷ்மி வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இது நாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்திற்க்கும், இந்த வாரம் ஒரு நல்ல முடிவு கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் சுபகாரிய பேச்சுக்களைத் தள்ளிப் போடுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் நிதானம் தேவை. ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்தவாரம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப பெண்கள் சமையலறையில் கவனத்தோடு இருக்க வேண்டும். காயம் ஏற்படலாம். அலுவலக பணியில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து விலகும். வருமானத்தை சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விரைவாக தீர போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலகப் பணிகள் தொடங்கப் போகின்றது. சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். அவ்வப்போது ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும். தினந்தோறும் சூரிய வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று செலவை குறைத்துக் கொண்டால் நல்லது. வீண் விரையம் வரப்போகின்றது. வண்டி வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் நண்பர்களிடம் உஷாராக பேசுவது நல்லது. எந்த ஒரு ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அனாவசிய பேச்சுக்களை தவிர்த்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய வாரம். வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. சொந்தத் தொழிலில் பணபரிமாற்றம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் கடனாக தொகையை கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். ஆரோக்கியத்திலும் குறைபாடு வர வாய்ப்பு உள்ளது. அக்கறை எடுத்து உங்களை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதி தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில், அதிகப்படியான லாபம் கிடைக்கும். அலுவலகப் பணியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றியை நோக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது. குலதெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நிறைவேற போகின்றது. நீண்ட நாட்களாக பிரிந்த ஒரு நண்பரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் இருந்து வந்த பிரச்சனை தீரும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். கடன் மட்டும் அதிகமாக வாங்காதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களே இந்த வாரம் சற்று கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஒன்றுக்கு பலமுறை யோசித்து பல பேரின் ஆலோசனையை கேட்டு, எது நல்லது என்று தீர்மானிப்பது முடிவு எடுப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. எதையும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் முடிந்தவரை முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் எடுத்தாலும் நல்லதுதான். வருமானம் வந்தாலும், செலவை சமாளிக்க முடியாது. மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். யாரையாவது நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்கள் தானே, என்று நம்பி பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. யாரிடமும் அளவோடு பழகுங்கள். அலுவலகப் பணியில் வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். முடிக்க சற்று சிரமப்படுவீர்கள். கொஞ்சம் திட்டும் வாங்கப் போகிறீர்கள்! அனுசரித்து செல்லுங்கள். நிலைமை சரியாகும் காலம் வரும். தினம் தோரம் 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும்போது, அவசரப்படக்கூடாது. முடிந்தவரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கடனை அடைக்க கொஞ்சம் கஷ்டம் தான். இந்த வார இறுதியில் எல்லா பிரச்சனையும் ஒரு சுமூக தீர்வு பெறும். மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால், நன்மை உண்டு. முருகன் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.