இந்த வார ராசிபலன் 08-06-2020 முதல் 14-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் செல்லப் போகின்றது. எடுக்கப்போகும் முக்கியமான முடிவுகளை ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பயணத்தை தவிர்த்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால், அதிகப்படியான கவனம் தேவை. அநாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றி அடைய முடியும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் செய்யும், எல்லா வேலையிலும், சற்று அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. யார் பேச்சையும் நம்பி, சிந்திக்காமல் செயல்படக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வருமானம் சீராக இருக்கும். அலுவலகப் பணி எப்போதும்போல் செல்லும். சிந்தித்து செயல்பட்டால் சிரமமில்லை. வீட்டிலிருந்து, வெளியே கிளம்பும்போது சிவபெருமானை நினைத்து வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கஷ்டப்பட்டாவது செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். வீண்விரயம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மேலும் செலவு அதிகரிக்கும். சுபச் செலவாக இருந்தாலும், விரையம் தான். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியில் சிக்கல்கள் வந்து போக வாய்ப்பு இருப்பதால், உஷாராக இருக்க வேண்டும். தினம் தோறும் அனுமன் வழிபாடு மன தைரியத்தை தேடித்தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் செல்லப் போகின்றது. எல்லோருடைய பாராட்டும் உங்களுக்கு வந்து குவியும் வண்ணம் இருக்கப்போகிறது. அந்த அளவிற்கு உங்களது செயல்பாடு சுறுசுறுப்பாகவும், திறமையான தாகவும் வெற்றி அடைய கூடியதாகவும், இருக்கும். எந்த முயற்சி செய்தாலும் உங்களுக்கு வெற்றிதான். தைரியத்தோடு செயல்படுங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடாதீர்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளை தைரியமாக எடுக்கப் போகிறீர்கள். எதிர்ப்புகள் வந்தாலும், வெற்றியடைய போகிறீர்கள். இதன் மூலமாகவே அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பள உயர்வு ஏற்படும். உங்களுடைய முதலாளி வாயாலேயே பாராட்டைப் பெற போகிறீர்கள். இந்த சமயத்தில் உங்களுக்கு தலைக்கனம் வராமல் இருக்கவேண்டும். மனதை கட்டுப்படுத்த தினந்தோறும் காலை ஐந்து நிமிடம் சிவனை நினைத்து தியானம் செய்வது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில், நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நல்ல செய்தி வந்து சேரும். சொந்தத் தொழிலை விரிவு படுத்த, நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய போகிறது. பணவரவு அதிகரிக்கும். அந்த பணத்தை வைத்து உங்கள் மனைவிக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தரும் யோகம் கூட உள்ளது. தினம் தோறும் முருகப் பெருமானை நினைத்து வழிபட மறக்காதீர்கள்.

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள், இந்த வாரம் முழுவதும் நீங்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கவனம் குறையும் பட்சத்தில், காயம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பெண்கள் சமையலறையில் கவனத்தோடு வேலை செய்யுங்கள். வாகனத்தில் செல்லும்போது, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டாதீர்கள். மனநிலை சரியில்லாத பட்சத்தில், ஒரு வேலையை அரைகுறை மனதோடு செய்யாமல், மொத்தமாக மூடி வைத்து விட்டு, நன்றாக தூங்கி மனத்தெளிவு அடைந்த பின்பு செய்வது நல்லது. தினம் தோறும் சிவன் வழிபாடு அவசியம் தேவை.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபச்செய்தி வந்து சேரப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷமான விஷயம் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலை மட்டும் அப்படியே விட்டுவிடுங்கள்! புதிதாக முயற்சி எடுத்து, புதிய முதலீட்டை செய்யாதீர்கள். அலுவலகப் பணியில் அதிகப்படியான ஆர்வத்தை காட்டுங்கள். விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரம் என்றுதான் சொல்லவேண்டும். எதிர்பாராத வகையில், எதிர்பாராத பணவரவு உங்கள் கைகளை வந்து சேரப்போகிறது. உடல் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும், பதவிஉயர்வு உங்களை விடப் போவதில்லை. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் போகிறது. யோகமான வாரமாக இருந்தாலும், வார்த்தையில் கவனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் புதிய முயற்சியில் தாராளமாக ஈடுபடலாம். மன பயத்தை விட்டுவிடுங்கள். தைரியத்தோடு, நிதானமாக, நீங்கள் செய்யும் வேலையை தொடங்கினால், உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்துபோக இருந்தாலும், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உண்டு. பதட்டப்பட வேண்டாம். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மனதைரியத்தை தேடித்தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து, பணத்தை செலவு செய்யுங்கள். சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை இடைப்பட்ட காலத்தில் நீங்கள் நன்றாக உணர்ந்து இருப்பீர்கள். இனியும் காலதாமதம் வேண்டாம். பொறுமையோடு பணத்தின் அருமை பெருமைகளைத் தெரிந்து சேமித்து வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்துங்கள். மனதை முழுமையாக இறைவழிபாட்டில் ஈடுபடுத்துவது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரம் தான். வராது என்று முடிவு செய்து வைத்திருந்த, ஒரு தொகை உங்கள் கைக்கு வரப்புவதன் மூலம், சந்தோஷப்பட போகிறீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவிட போகிறீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது, ஆரோக்கியத்திற்கும் நல்லது. அலுவலக பணிக்கும் நல்லது. குறிப்பாக மேல் அதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். முருகன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

- Advertisement -