இந்த வார ராசிபலன் 15-06-2020 முதல் 21-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கெல்லாம், இந்த வாரம் தீர்வு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை நீங்கி, சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். அலுவலகப் பணி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் செல்லும். செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகளை தொடங்கலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் சென்ற இடமெல்லாம் உபச்சாரம் உங்களை தேடி வரும். அலுவலகப் பணியில் நல்ல பேர் வாங்க போகிறீர்கள். அதேசமயம் உஷாராக இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஹனுமன் வழிபாடு மன அமைதி தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் தாயின் உடல் நலனில் மட்டும் அக்கறை காட்டுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. திருமணத்தை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. வீட்டிலிருந்தபடியே செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுவது நல்லது.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம். தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாராக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. சொந்தத் தொழிலில், பண பரிமாற்றத்தில் அவசியம் கவனம் வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனம் தேவை. உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் சிவன் வழிபாடு நல்லது.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் எடுத்த காரியத்தில் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். மற்றபடி அலுவலகப் பணி, சொந்தத் தொழில் எல்லாம் பிரச்சனைகள் இல்லாமல் செல்லும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். கூடவே, செலவும் பின்தொடர்ந்து வரப்போகின்றது. சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகப் பணியில் மட்டும் யாரிடமும் கோபம் அதிகம் வேண்டாம். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் முருகன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பணப் பரிமாற்றத்தின் போது உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம். கையெழுத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களை அடுத்த வாரம் வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தினமும் ஐந்து முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் உச்சரியுங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க வேண்டியிருக்கும். சமாளித்து தான் ஆக வேண்டும். வரும் நாட்களில் இந்த பிரச்சனை கட்டாயம் சரியாகி விடும். அலுவலக பணியில் எந்த பிரச்சனையும் இருக்காது. சொந்தத் தொழில் சற்று மந்தமாக காணப்படும். குடும்பத்திலும் அவ்வப்போது பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். முழுமனதோடு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களது வார்த்தையில் மட்டும் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லும் பட்சத்தில் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். உறவினர்களின் ஆதரவும் முழுமையாக இருக்கும். செலவு அதிகரிக்கப் போகின்றது. பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் உங்களிடம் உள்ளதால், சந்தோஷத்திற்கு இடையூறு வராது. தினம்தோறும் சிவவழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம், உங்களது அலுவலகப் பணியை சுறுசுறுப்பாக முடித்துவிட்டு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க போகிறீர்கள். பாராட்டு மழைதான். சொந்த தொழிலில் முதலீடு மட்டும் செய்ய வேண்டாம். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வார இறுதியில் மன சங்கடம் வருவதுபோல் இருக்கும். சங்கடங்கள் எதுவுமில்லை என்று, எப்போதும் போல் உற்சாகத்தோடு செயல்படுங்கள். ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் முடிந்தவரை இந்த வாரம் யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். வார்த்தையில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியமும் சுமாராகத்தான் இருக்கும். சொந்தத் தொழில் எப்போதும்போல் செல்லும். எல்லோரையும் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. முன் கோபம் வேண்டாம். வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். பின்னாடி கஷ்டப்பட்டு வருத்தமில்லை. மன அமைதி பெற தினமும் 5 நிமிடம் கண்களை மூடி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகின்றது. குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் போகின்றது. வீட்டில் சுபகாரிய முயற்சிகளைத் தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களை நம்பி, எதையும் சொல்ல வேண்டாம், எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். முருகர் வழிபாடு மன அமைதி தரும்.