இந்த வார ராசிபலன் 22-06-2020 முதல் 28-06-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியம் நல்லபடியாக நடந்து முடியும். வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்களிடம் சற்று உஷாராக இருக்க வேண்டும். பண பரிமாற்றத்தில் கவனமாக இருங்கள். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில், சிந்திக்காமல் கையெழுத்து போடவேண்டாம். அலுவலகப் பணி சுமுகமாக செல்லும் தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைப்பது போல இருக்கும். அதனுடன் உங்களுடைய வேலை இரண்டு மடங்காக அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். ஆனால், தேவையில்லாத வார்த்தையை பேசுவதன் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பது போல் இருக்கும். உள்ளுக்குள் ஏதோ ஒரு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற போகிறீர்கள். புதிய முயற்சிகளை செய்யலாம். வருமானம் அதிகரிக்க போகின்றது. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்துவந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை மட்டும் சற்று கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை ஆபரணம் பொருட்களை வாங்கி சந்தோஷம் அடைவார்கள். சொந்தத் தொழில் சற்று மந்தமாகத்தான் செல்லும். பிரச்சனை எதுவும் ஏற்படாது. முடிந்தவரை யாருக்கும் பஞ்சாயத்து செய்ய நீங்கள் முன்னாடி போய் நிற்காதீர்கள். பிரச்சனை உங்கள் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால் சந்தோஷம் நிலைக்கும். தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. வரவே வராது என்று நீங்கள் நினைத்திருந்த, ஒரு கடன் தொகை இந்த வாரம் உங்கள் கைக்கு தேடி வரலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குடும்ப பிரச்சனை இந்த வாரம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது. அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார். எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்ல போகின்றார். அதிர்ஷ்ட காத்து லேசாக உங்கள் பக்கம் வீசத் தொடங்கியுள்ளது. வாகனத்தில் போகும்போது மட்டும் கவனம் தேவை. அனுமன் வழிபாடு மிகவும் நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. உடல்நிலையில் மட்டும் சற்று பின்னடைவு ஏற்படும். பிரச்சினை என்று வந்தால், உடனே மருத்துவரை அனுப்புங்கள். வீட்டில் சுபகாரிய பேச்சுக்களை தொடங்கலாம். உங்களது அலுவலகப் பணியை விரைவாக முடித்து அதற்கு தக்க சன்மானமும் பெற போகிறீர்கள். புதியதாக சொத்து வாங்க வேண்டும் என்பதாக இருந்தால், இந்த வாரம் அதற்கான வேலைகளை தொடங்கலாம். முருகன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக தான் இருக்கப் போகின்றது. கணவர், மனைவிக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்து குடும்பத்தை சந்தோஷப்படுத்த போகின்றார். அலுவலகத்தில் உங்களது கை ஓங்கி நிற்கப் போகின்றது. எல்லோராலும் மதிக்கத்தக்க மனிதராக நீங்கள் போற்றப்படுவார்கள். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பயணத்தின் போது கவனம் தேவை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் முடிந்தவரை இந்த வாரம் சிக்கனமாக செலவு செய்வது மிகவும் நல்லது. வீண் விரயச் செலவுகள் வரப்போகின்றது. வருமானம் அதிகமாக இருந்தாலும், சேமிப்பை மறந்துவிடாதீர்கள். பண பரிமாற்றத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவேண்டாம். எந்த விஷயத்திலும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. அவசரம் வேண்டாம். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது, வார்த்தையில் அதிக கவனம் தேவை. தினம்தோறும் சிவவழிபாடு மன அமைதியை தரும். 5 நிமிடம் தியானம் செய்தாலும் தவறில்லை.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். அவசரமாக முடிவு எடுத்தாக வேண்டும் என்றால், பெரியோர்களிடம் ஆலோசித்து, சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வார்த்தையில் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். வெளியில் போகும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் அதிகம் தேவை. தினந்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதியதாக வண்டி, நிலம், வீடு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும், இந்த வாரம் வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் இது நாள் வரை இல்லாத அளவிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். அதை நீங்கள் தான், கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அனாவசிய பேச்சின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்கும் சமயத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தினம்தோறும் குரு வழிபாடு மிகவும் நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பணவரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை தொடர்ந்து இருந்து வந்த, பிரச்சினைகள் இனி சற்று குறைய ஆரம்பிக்கும். அலுவலக பணியில் நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களது உறவினர்கள், உங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது கட்டாயம் உதவி செய்வார்கள். உறவினர்களில் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளப் போகும் காலம் என்று கூட சொல்லலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு இது நல்ல நேரம் வந்துவிட்டது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் உங்களுடைய உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டும். சொந்தத் தொழில் சுமுகமாக செல்லும். செலவை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது. பதவி உயர்வு உங்களை தேடி வரப்போகின்றது. அதை நீங்கள்தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நம்மை தேடி வருவது எதுவாக இருந்தாலும், அதை உதாசீனப்படுத்து தவறு என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். பொறுமை அவசியம் தேவை. தினம் தோறும் சிவனை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்யுங்கள்.