இந்த வார ராசிபலன் 29-06-2020 முதல் 05-07-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சற்று சாதகமான அமைப்பு என்றாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களது பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன்-மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வார பிற்பாதியில் நல்ல அமைப்பு என்பதால் வார தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். திடீர் பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.