இந்த வார ராசிபலன் 22-03-2021 முதல் 29-03-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில், உங்களின் எதிர்பாராத திறமைகள் வெளிப்பட்டு, புகழின் உச்சிக்கே செல்ல போகிறீர்கள். பணமும் பதவியும் உங்களைத் தேடி வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்தியவர்கள் கூட, உங்களை இழிவாகப் பேசியவர்கள் கூட, உங்களை பாராட்டி பேசும் அளவிற்கு பல நன்மைகள் நடக்கப்போகின்றது. ஆனால் உங்களுடைய உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுடைய உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. தினமும் அனுமன் வழிபாடு நன்மையை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபமான வாரமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக வராமல் இழுபறியாக இருந்து வந்த கடன் தொகை, நீண்ட நாட்களாக இழுத்து கொண்டு வந்த கோர்ட்டு கேஸ் சொத்து பிரச்சனை, எல்லாம் உங்கள் பக்கம் சுமூகமாக முடியும். உங்களுக்கு வர வேண்டிய தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களை தாராளமாக தொடங்கலாம். இனிதே நடந்து முடியும். நல்லது நடக்கும் போது குல தெய்வத்தை மறக்காதீர்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீங்கள் எதிர்பாராமலேயே நிறைய வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்ட தான் செய்யும். கொஞ்சம் கஷ்டப்பட்டு, முயற்சி செய்து, வாய்ப்புகளை ஏற்று, தைரியமாக செயல்படத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். பிரச்சினைகளைக் கண்டு பின் வாங்குவதற்கு தோல்வி மட்டுமே மிஞ்சும். மன உறுதியோடு செயல்படுங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் சண்டை சச்சரவுகள் வந்தால் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மற்றபடி சொந்தத் தொழில், அலுவலக பணி வழக்கம்போல செல்லும். ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக தான் அமையப்போகின்றது. தேவையற்ற பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வந்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மற்றபடி நிதி நிலைமையில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்குள் சண்டை என்றால் உறவுகளுக்குள் சண்டை என்றால் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அனாவசியமான வார்த்தைகளைப் பேச வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் தெளிவான வாரமாக இருக்கப்போகின்றது. யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை அறிந்து, யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொள்வீர்கள். தெளிவான மனநிலை உங்களுக்கு இருந்தாலும் யாரிடமும் அனாவசியமாக பேச வேண்டாம். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து தகராறு முடிவுக்கு வரும். வேலையில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். சொந்தத் தொழிலில் யாரை நம்பி முதலீடு செய்யாதீர்கள். நட்பாக இருந்தாலும் சொந்தமாக இருந்தாலும் அளவோடு நம்பிக்கை வைத்து பழகுங்கள். நல்லதே நடக்கும் தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. யாரையாவது நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய சொந்த விஷயங்களை உங்களுடைய நண்பர்களிடமோ அல்லது மற்ற உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய பொருட்களை நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக யாரிடமும் பேச வேண்டாம். முன் கோபம் வேண்டாம். மற்றபடி பொறுமையாக இருந்தால் வேலையில் தொழிலில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லை. முன் கோபப்பட்டு தேவையற்ற வார்த்தைகளை விட்டால், நிச்சயம் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். தினமும் குருபகவான் வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம் கடன் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். எப்போதுமே மனது எதையோ இழந்தது போல ஒரு சஞ்சலத்தில் இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் காலையில் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். அவசரப்பட்டு குழப்பத்தோடு எந்த முடிவையும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிகாரர்கள் இந்த வாரம் எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய பேச்சுகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் அடுத்த வாரம் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் தற்போது ஏதேனும் அவசர சூழ்நிலை என்றால், பெரியவர்களை ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். முன்கோபம் கூடாது. அதிகப்படியான முதலீட்டை எங்கேயும் போட வேண்டாம். மற்றபடி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்க போகின்றது. நீங்கள் பொறுமையாகவே இருந்தாலும், வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. சண்டை என்று வரும்போது கொஞ்சம் விட்டுக்கொடுத்த செல்லலாம். வாய் தகராறு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். முடிந்தவரை வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம். மூன்றாவது மனிதருக்கு பஞ்சாயத்து செய்வதற்காக செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக தான் அமையப்போகின்றது. ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபம் வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. வரவு இருப்பது போலவே இருந்தாலும், மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிக்கனமாக செலவு செய்ய பாருங்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் அமையப்போகின்றது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கும் உங்களது அவசர புத்தியை விட்டுவிடவேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். கட்டாயம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். வேறு வழியே கிடையாது. சமாளித்து தான் ஆக வேண்டும். பிரச்சினைகள் கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். சிக்கலை அவிழ்பதில் கஷ்டம் இருக்கும். பொறுமையோடு செயல்படுங்கள். குலதெய்வத்தை தினமும் நினைத்துக் கொண்டு தினசரி வேலையைத் தொடங்குங்கள்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமூகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை தொடங்கலாம். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். ஆனால் குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து விடுங்கள். சுபகாரிய பேச்சுகள் வீட்டில் தொடங்கலாம். கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருந்தாலும் கூட, சேமிப்பில் கவனம் காட்டுவது நல்லது. தினந்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.