இந்த வார ராசிபலன் 29-03-2021 முதல் 04-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. கடந்த வாரம் இருந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இந்த வாரம் சுமூகமான முடிவு கிடைத்துவிடும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்போடு வேலை செய்வீர்கள். உங்களை எதிர்த்துப் பேசுபவர்கள், யாராக இருந்தாலும், உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவே இருந்தாலும், அவர்களை ஒரு துணிச்சலோடு எதிர்கொள்ளப் போகிறீர்கள். உங்களுடைய மன தைரியம் அதிகரிக்க போகின்றது. உங்களை சுற்றி இருப்பவர்கள் இடத்தில் பாராட்டு மழைதான் போங்க! சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் அயராது உழைத்து, நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பலபேரின் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் கடினமாக உழைப்பதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். ஆனால் குடும்ப விஷயங்களில் மட்டும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தவேண்டும். வீட்டு விஷயங்களை மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் காத்துக் கொண்டிருக்கின்றது. தினமும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் நிதானத்தோடு இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் குடும்பத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கணவரால் பிரச்சனை வந்தாலும், அந்த இடத்தில் மனைவி விட்டுக் கொடுப்பதன் மூலம் வீட்டில் வரக்கூடிய பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஆரோக்கியத்தில் ஒரு கவனம் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொல்லப்போனால் உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து, பெருமூச்சு விடும் காலம் வந்துவிட்டது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் உங்களுடைய ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியப் போக்கு இருந்தால், தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் தடைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தடைகள் ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம் விடாமுயற்சியோடு உங்களது வேலைகளை சுறுசுறுப்பாக செய்யும் பட்சத்தில், தடைகள் விலகும். கொஞ்சம் மந்தமான சூழ்நிலை நிலவும். உடல் அசதி இருக்கும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வேலையிலும், சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவலைகள் நீங்க கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்தலாம். அலுவலக வேலையில் பாராட்டும் கிடைக்கும். நல்ல சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தீர்க்க முடியாத பிரச்சனைகளே கூட தீர்த்து வைக்கும் அளவிற்கு உங்களுடைய மன தைரியமும் புத்தி கூர்மையும் அதிகரிக்கும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை காக்க வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. எந்த ஒரு காரியத்திலும் அவசரப்பட்டு உடனடியாக முடிவை எடுக்க வேண்டாம். முடிந்தவரை முடிவெடுக்கும் விஷயத்தை அடுத்த வாரம் தள்ளிப் போட்டு விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் குழப்பம், தொழிலில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, என்ற தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். வீண் விவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள் இறைவழிபாட்டில் ஈடுபாடு செய்யுங்கள். முடிந்தால் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக தான் இருக்கப்போகின்றது. உடல் சம்பந்தப்பட்ட தேவையற்ற உபாதைகள் நீங்கி, சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லா வேலைகளிலும் வெற்றிகாண போகிறீர்கள். வேலையில் இருந்த சிக்கல்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். சொந்தத் தொழிலில் இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளும் படிப்படியாக குறையத் தொடங்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கும். அதனால் சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் மௌன விரதம் இருப்பது மிக மிக நல்லது. யார் எதை சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் வந்து உங்களை சூழும். சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனைகள் குடும்பத்தையே இரண்டாக பிரிக்கும் அளவிற்கு கூட விஸ்வரூபம் எடுக்கும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வீண் விவாதம் வேண்டாம். அனாவசிய வார்த்தைகளை தவிர்த்துக் கொண்டாலே போதும், இந்த வாரம் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் கவனத்தோடு உங்களுடைய வேலையை செய்யவேண்டும். கொஞ்சம் கவனம் சிதைந்தால் கூட, வேலைகளில் பிரச்சனைகள் வந்துவிடும். உங்களுடைய பொறுப்புகளை, உங்களுடைய பொருட்களை பத்திரமாக நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். யாரை நம்பியும் பொருட்களையும் ஒப்படைக்க வேண்டாம். பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை நம்பி, உங்கள் காதுக்கு வந்த விஷயம் உங்களோடு இருக்கட்டும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வாரம் இது. தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகின்றது. ஆனால் அதில் சில தடைகள் வரவும் வாய்ப்பு உள்ளது. விடாமுயற்சியின் மூலம் நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தால், சில விஷயங்களை இந்த வாரம் சாதித்துக் கொள்ளலாம். முடிந்தவரை தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்பு பணிக்கு செல்வது நல்லது. பல கஷ்டங்களை உங்களுக்கு அந்த ஆண்டவன் கொடுத்து வந்தாலும், உங்களுடைய முயற்சியைப் பார்த்து சில நன்மைகளை கொடுக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. நேர்மையோடு இருந்தால், விடாமுயற்சியோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சிரமங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். வேலை செய்யும் இடத்தில் பிக்கல் பிடுங்கல் இருந்துகொண்டே இருக்கும். வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வந்துகொண்டு, நஷ்டத்தை ஏற்படுத்தும். சொந்தக்காரர்கள் பிரச்சினை, குழந்தைகளால் பிரச்சினை, என்று பல விதங்களில் பல பிரச்சினைகள் உங்களை வந்து சூழும். இருப்பினும் உங்களுடைய மன தைரியமும், விடாமுயற்சியும் நேர்மையும் உங்களை காப்பாற்றும். உங்களால் இயலவில்லை என்றாலும், முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருங்க! நல்லதே நடக்கும். தினந்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.