இந்த வார ராசிபலன் – மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக அமையப்போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. நீங்கள் செய்யும் அலுவலக பணியில் சின்னச்சின்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செய்யும் வேலையில் அதிக கவனத்தோடு ஈடுபட்டால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் மந்தமாக தான் செல்லும். வீட்டில் சுப காரியங்கள் நடத்த பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியைத் தரும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப் போகிறது. வீட்டிலேயே இருந்து, வேலை பார்த்து, நன்றாக ஓய்வு எடுக்கும் சூழ்நிலை அமைந்திருக்கும். அலைச்சல் இல்லாத வேலை. சொந்தத் தொழிலில் இருக்கும் பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். கடன் தொகை எல்லாம், வசூல் ஆவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும், மன அமைதியான சூழ்நிலை நிலவும். அம்மன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக தான் அமையப்போகிறது. வீட்டிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டீர்கள். இருந்தாலும் அனாவசியமாக வெளியில் செல்லாமல் இருக்க வேண்டியது மிக அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சொந்தத் தொழிலில் வருமானம் இருக்காது. கடன் பிரச்சனை இருக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள் அதிக கவனம் எடுத்து செய்வது வெற்றியை தேடித்தரும். இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. தினம் தோறும் முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான வாரமாக தான் இந்த வாரம் அமையப் போகிறது. எந்த ஒரு செயல்பாட்டிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழ்நிலை இருந்தாலும் உங்களது திறமையை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. தொழிலில் லாபம் குறையும். இருந்தாலும் குடும்பத்தை நல்லபடியாக வழிநடத்தி விடுவீர்கள். குடும்பப் பெண்களுக்கு வீட்டில் வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தினம்தோறும் ஹனுமனை மனதார நினைத்து வழிபடுவது மனநிம்மதியை தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக தான் அமையப்போகிறது. அனாவசிய பேச்சை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது. உறவினர்களிடம் அனுசரித்துப் பேசுங்கள். கோபமான வார்த்தையை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வீணாக மனதில் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்தாலும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சொந்தத் தொழில் சற்று தடுமாற்றத்தோடு செல்லும். தினம்தோறும் காலையில் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்வது மன அமைதிக்கு நல்லது.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகிறது. நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களை தேடி வரும். எதிர்பாராத சந்தோஷ செய்தி உங்கள் காதுகளில் கேட்கப் போகிறது. வாழ்க்கை துணைவி உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். எந்த ஒரு முக்கியமான முடிவையும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். கட்டாயம் முடிவினை எடுக்க வேண்டிய நிலைமை இருந்தால், பெரியோர்களின் ஆலோசனைப்படி எடுப்பது நல்ல பலனைத் தரும். அலுவலகப் பணிகளை சீரும் சிறப்புமாக செய்து முடிப்பீர்கள். சொந்தத் தொழில் சீராக செல்லும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக தான் அமையப்போகிறது. பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். பிரச்சனை உங்கள் தலைமையில் வந்து விழுந்துவிடும். உங்களது பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் அதிகம் தேவை. திருமண பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டாம். எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் இந்த வாரம் எடுக்காமல், அமைதியாக இருப்பது நல்ல பலனைத்தரும். சற்று பொறுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதால் அமைதி காப்பது நல்லது. தினம் தோறும் அம்மன் வழிபாடு மனநிம்மதியை தேடித்தரும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகிறது. எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் உற்சாகமாக ஈடுபட்டு, வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். சுப பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் செய்பவர்கள் சற்று கவனமாக செய்ய வேண்டும். சொந்தத் தொழில் முன்னேற்றத்துடன் செல்லும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தினம்தோறும் முருகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக தான் அமையப்போகிறது. நீங்கள் பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றி தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மனதைரியம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். இதனால் வரை இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக குறைய கூடிய நேரம் வந்துவிட்டது. சொந்தத் தொழில் சுமுகமாக செல்லும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகிறது. வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அனுசரித்து செல்லுங்கள். பல பிரச்சினைகளை கடந்து சொந்தத் தொழிலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொஞ்சம் முயற்சி எடுத்தால் எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்று விடலாம். மன அமைதியோடு செய்யும் வேலை தான் வெற்றி அடையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக எதையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். எல்லா பிரச்சனைகளும் சில நாட்களில் சரியாகிவிடும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் சுலபமாக சாதித்து விடுவீர்கள். தினம்தோறும் 5 நிமிடம் கண்களை மூடி இறைவனை நினைத்து தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். பயணங்கள் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் கூட, பயணத்தை தவிர்ப்பது நல்லது. அனாவசிய பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவிற்கு உங்கள் மனதிற்கு தைரியம் வந்துவிடும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. வீட்டில் இருந்துகொண்டு உங்கள் அலுவலக வேலையும் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலையும் செய்து உங்கள் மனைவியிடம் பாராட்டைப் பெற போகிறீர்கள். இந்த மாதம் செலவினை சமாளித்து விடுவீர்கள். பணவரவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. சுபநிகழ்ச்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சொந்த தொழில் மந்தமாக தான் செல்லும். தினம் தோறும் முருகன் வழிபாடு மன அமைதி தேடித்தரும்.