இந்த வார ராசி பலன் – மே 11 முதல் 17 வரை

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுடைய தொழில் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அவ்வப்போது அலைச்சல்கள் வந்துபோகும். உடல்நிலையில் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில்  கவனமாக இருப்பது நல்லது. யாரை நம்பியும் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகப் பணிக்கு கூடிய விரைவில் செல்லும் காலம் வந்து விடும். மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது அனாவசியப் பேச்சுகளைத் தவிர்த்துக் கொள்ளவும் தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வாரத்தின் ஆரம்பம் சற்று மந்தமாக இருந்தாலும், இந்த வாரம் முடியும்போது வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. வீட்டில் எதிர்பாராத உறவினர்களின் வருகையால், சுப விரயம் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளலாம். தினம் தோறும் வீட்டில் இருந்தே மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் அமையப்போகின்றது. வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதால், உறவுகளுக்கு இடையே வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வண்டியில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். முடிந்தவரை பயணத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. புதியதாக ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், இந்த வாரம் வாங்க வேண்டாம். தள்ளிப்போடுவது நல்லது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாகத் தான் பிறக்கப் போகின்றது. அலுவலகத்தில் இதுநாள் வரை இருந்த வேலைச்சுமையும் இந்த வாரம் குறையும். சொந்த தொழிலில் இருந்து வந்த, பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். இருந்த போதிலும் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பொறுமை அவசியம் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் தனி கவனம் எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். சிவபெருமானை வீட்டிலிருந்தே நினைத்து தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் உஷாராக இருக்கவேண்டும். யாரிடமாவது ஏமாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்காதீர்கள். குறிப்பாக அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகளை உங்கள் கைப்பட பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். சொந்த தொழிலில் எந்த ஒரு புதிய முயற்சியும், புதிய முதலீட்டையும் போட வேண்டாம். வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலகப் பணியில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். இதன் மூலம் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவினர்கள் இடையே இருந்த பிரச்சனை நீங்கி, மன நிம்மதி அடைவீர்கள். சொந்த தொழிலில், வியாபாரிகள் எந்த ஒரு புதிய முயற்சியிலேம் ஈடுபட வேண்டாம். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிட்டது என்று, கர்வத்தோடும் நடந்து கொள்ள வேண்டாம். தினம்தோறும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள 5 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், உங்களுடைய குடும்பம் ஆதரவாக இருக்கும். தோல் கொடுக்க மனைவியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டியதாக இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு வர வாய்ப்பு உள்ளது. வேண்டாம் என்று சொல்லாமல் பதவி உயர்வை ஏற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தை தரும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்தை தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதுநாள் வரை கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனை நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்திலிருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் ஏற்படக்கூடிய எதிர்பாராத முன்னேற்றத்தால் நல்ல லாபத்தை பெறலாம். தினம் தோறும் அனுமன் வழிபாடு மன தைரியத்தை அதிகரிக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. ஏனென்றால் எடுத்த காரியத்தை துணிச்சலோடு வெற்றிகரமாக முடிப்பதற்கு நேரம் வந்துவிட்டது. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வினை சுலபமாக கண்டுபிடித்து தீர்த்து விடுவீர்கள். அலுவலகப் பணியில் உங்களது வேலையை சிறப்பாக, சுலபமாக, விரைவாக செய்து முடிக்க போகிறீர்கள். இதற்கான பாராட்டும் கிடைக்கும். தக்க சன்மானமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்தே குலதெய்வத்தை வழிபடுவது அவசியம்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகத்தைத் தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுக்கான மதிப்பும் மரியாதையும், கூட போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு உங்களுடைய திறமையானது, வெளிப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் சந்தோஷமாக இருக்கலாம். வீட்டில் இருந்தபடியே மகாலட்சுமி நினைத்து தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. நிதிப்பற்றாக்குறை ஏற்படாது. செலவுக்கு ஏற்றவாறு வருமானம் வந்து சேர்ந்துவிடும். அனாவசிய பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. மௌனத்தை மட்டுமே பதிலாக சொன்னால் வரப்போகும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்த கடன் தொகைக்கு முயற்சி செய்யலாம். வங்கிகளிலும் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணத்தை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணம் என்றால் கவனத்தோடு இருக்க வேண்டும். தினம்தோறும் முருகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களது பொருட்களை சற்று கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போகலாம். அலுவலகப் பணியில் சற்று அதிக ஆர்வம் எடுத்து, அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. இருந்தாலும் பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உறவினர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. அநாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால், பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.