இந்த வார ராசி பலன் – மே 18 முதல் 24 வரை

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனை இந்தவாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அலுவலகப் பணியில் சற்று கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். சொந்த தொழிலில் அதிகப்படியான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினந்தோறும் சிவபெருமானை வழிபடுவது மன அமைதியை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. எந்த ஒரு முக்கியமாக முடிவை எடுக்க வேண்டியதாக இருந்தாலும், அடுத்த வாரம் தள்ளிப் போட்டால் மேலும் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அலுவலகப் பணியில் வேலை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சொந்தத் தொழில் எப்பவும் போல் செல்லும். புதிய முதலீடுகளை செய்யாமலிருப்பது நல்லது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. எதிர்பாராத பணவரவு உங்கள் கைகளுக்கு தேடிவரும். அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆனால், உங்களது பேச்சில் மட்டும் அதிக கவனம் தேவை. உறவினர்களிடையே சின்ன சின்ன பிரச்சனை வர வாய்ப்பு உள்ளதால் எதையும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தினம்தோறும் அம்மனை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். முடிந்தவரை பயணத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. தினம்தோறும் விநாயகரை நினைத்து வீட்டிலிருந்தே தீபமேற்றி வழிபடுவது மன அமைதியை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்தாலும், இந்த வாரம் வெற்றியடைய போகிறீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அலுவலகப் பணியில், அவ்வப்போது அலைச்சல் உண்டாக வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் முன்னேற்றத்தோடு செல்லும். தினந்தோறும் குரு பகவானை நினைத்து வீட்டில் இருந்தே தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், அவசரப்பட்டு முடிவை எடுக்க வேண்டாம். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், அனாவசியமான வாக்குவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வங்கள். சொந்த தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். அலுவலக பணியில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தினம் தேரும் முருகர் வழிபாடு மன அமைதி தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசியமான செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. சேமிப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்களது அலுவலகப் பணியை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால், கவனத்தோடு பயணம் செய்ய வேண்டும். வீட்டிலிருந்தபடியே அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. புதியதாக எந்த ஒரு பொருளையும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகப் பணியில் உடன் பணிபுரிபவரிடம் உஷாராக பேசுவது நல்லது. சொந்த தொழிலில் பங்குதாரர்கள் இருந்தால், பண பரிமாற்றத்தை கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு மன அமைதியைத் தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கக்கூடிய வாரமாக பிறக்கப் போகின்றது. எதிர்பாராத பணவரவு உங்கள் கைகளை தேடி வரும். அலுவலக பணி மிகவும் சிறப்பாக செல்லும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நீங்கள் கேட்காமலேயே சம்பள உயர்வு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தினமும் சிவன் வழிபாடு மன அமைதியை பெற்றுத் தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம். வீட்டில் சுப காரியங்கள் தொடங்கும் போது, பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பயணத்தை மட்டும் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். சொந்த தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மனதைரியத்தை தேடித்தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும் நேரம் வந்துவிட்டது. உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உஷாராக நடந்துகொள்வது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியைத் தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. அலுவலகப் பணியில் சற்று வேலைப்பளு இருந்தாலும், நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். மனதிற்கு நிறைவாக இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் சுலபமாக முன்னேறி விடலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நல்லது.