இந்த வார ராசி பலன் : மே 21 முதல் 27 வரை

Indha vara rasi palan

மேஷம்
Mesham Rasiமேஷராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல இடத்தில் வரன் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வேலைகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவிஉயர்வு, சம்பளஉயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும், அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை அமையும்.

மாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். தேவையான நிதியுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

அசுவினி: 23, 24, 25, 27; பரணி: 21, 24, 25, 26; கார்த்திகை: 21, 22, 25, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

அசுவினி: 21, 22, 26; பரணி: 22, 23, 27; கார்த்திகை: 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

ரிஷபம்
Rishabam Rasiரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் இருக்கும். வேலையாள்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்களுக்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், மேற்படிப்பு தொடர்பான விஷயங்களில் பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

கார்த்திகை: 21, 22, 25, 26, 27; ரோகிணி: 21, 22, 23, 26, 27; மிருகசீரிடம்: 22, 23, 24, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

கார்த்திகை: 23, 24; ரோகிணி: 24, 25; மிருகசீரிடம்: 21, 25, 26

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

மிதுனம்
Mithunam Rasiமிதுனராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், உற்சாகமாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். புதிய பொறுப்புக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.

வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாள்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவதுடன், விரும்பிய மேற்படிப்பில் படிக்க இடம் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மிருகசீரிடம்: 22, 23, 24, 27; திருவாதிரை: 21, 23, 24, 25; புனர்பூசம்: 21, 22, 24, 25, 26

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மிருகசீரிடம்: 21, 25, 26; திருவாதிரை: 22, 26, 27; புனர்பூசம்: 23, 27

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

கடகம்
Kadagam Rasiகடகராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும், தேவையற்ற குழப்பங்களால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். பெற்றோரின் ஆலோசனை அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

புனர்பூசம்: 21, 22, 24, 25, 26; பூசம்: 21, 22, 23, 25, 26, 27; ஆயில்யம்: 22, 23, 24, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 7, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

புனர்பூசம்: 23, 27; பூசம்: 24; ஆயில்யம்: 21, 25

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

சிம்மம்
simmamசிம்மராசி அன்பர்களே! பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் பலிதமாகும். பழைய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும். எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர் பாராதபடி வருமானமும் அதிகரிக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மன மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மகம்: 23, 24, 25, 27; பூரம்: 21, 24, 25, 26; உத்திரம்: 21, 22, 25, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 4

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மகம்: 21, 22, 26; பூரம்: 22, 23, 27; உத்திரம்: 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து .

கன்னி
Kanni Rasiகன்னிராசி அன்பர்களே! வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆனால், திடீரென்று ஏற்படும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய மேற்படிப்பில் சேர்வதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

உத்திரம்: 21, 22, 25, 26, 27; அஸ்தம்: 21, 22, 23, 26, 27; சித்திரை: 22, 23, 24, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

உத்திரம்: 23, 24; அஸ்தம்: 24, 25; சித்திரை: 21, 25, 26

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

துலாம்
Thulam Rasiதுலாராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சலித்துக்கொள்ளாமல் செய்து நிர்வாகத் தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

சித்திரை: 22, 23, 24, 27; சுவாதி: 21, 23, 24, 25; விசாகம்: 21, 22, 24, 25, 26

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

சித்திரை: 21, 25, 26; சுவாதி: 22, 26, 27; விசாகம்: 23, 27

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

தினம் தினம் தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

விருச்சிகம்
Virichigam Rasiவிருச்சிகராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்குச் சாதகமான வாரம். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்குத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப் பம் ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

விசாகம்: 21, 22, 24, 25, 26; அனுஷம்: 21, 22, 23, 25, 26, 27; கேட்டை: 22, 23, 24, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

விசாகம்: 23, 27; அனுஷம்: 24; கேட்டை: 21, 25

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

தனுசு
Dhanusu Rasiதனுசுராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகை கிடைக்கக்கூடும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறை அன்பர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்படிப்புக்கான முயற்சி வெற்றிகரமாக முடியும். படிப்புக்குத் தேவையான கடனுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

மூலம்: 23, 24, 25, 27; பூராடம்: 21, 24, 25, 26; உத்திராடம்: 21, 22, 25, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3, 4

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மூலம்: 21, 22, 26; பூராடம்: 22, 23, 27; உத்திராடம்: 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

மகரம்
Magaram rasiமகரராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். ஆனால், வருமானத்துக்குக் குறைவிருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

உத்திராடம்: 21, 22, 25, 26, 27; திருவோணம்: 21, 22, 23, 26, 27; அவிட்டம்: 22, 23, 24, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 5

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

உத்திராடம்: 23, 24; திருவோணம்: 24, 25; அவிட்டம்: 21, 25, 26

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பித்தா, பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா, உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

கும்பம்
Kumbam Rasiகும்பராசி அன்பர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய மேற்படிப்பில் சேருவதற்கு கடின முயற்சி தேவைப்படும். சிலரின் சிபாரிசை நாடவேண்டி இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் பிறகே கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

அவிட்டம்: 22, 23, 24, 27; சதயம்: 21, 23, 24, 25; பூரட்டாதி: 21, 22, 24, 25, 26

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 4, 5

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

அவிட்டம்: 21, 25, 26; சதயம்: 22, 26, 27; பூரட்டாதி: 23, 27

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்பனடியேனே

மீனம்
Meenam Rasiமீனராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்க்கவும். அதனால் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

பூரட்டாதி: 21, 22, 24, 25, 26; உத்திரட்டாதி: 21, 22, 23, 25, 26, 27; ரேவதி: 22, 23, 24, 26, 27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2 ,7, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

பூரட்டாதி: 23, 27; உத்திரட்டாதி: 24; ரேவதி: 21, 25

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை

வார ராசி பலன், மாத பலன், தமிழ் கதைகள், தமிழ் காலண்டர் குறிப்புகள், கதைகள் உள்ளிட்ட பல தகவல்கள் தெய்வீகம் பக்கத்தில் உள்ளன.