இந்த வார ராசி பலன் – மே 4 முதல் 10 வரை

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றியைத் தேடித் தரும் வாரமாக தான் அமையப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி பணம் கொடுக்கவும் வேண்டாம். யாரிடமும் பணம் வாங்கவும் வேண்டாம். தினந்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டில் இருந்து 5 நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தேடித் தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தேடி தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் சீராக இருக்கும். செலவினை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தள்ளி வைத்து விடுங்கள். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால், வார்த்தையில் நிதானம் தேவை. உங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான முதலீட்டினை தொழிலில் செய்ய வேண்டாம். யாரையும் நம்பி கடன் தொகையை கொடுக்காதீர்கள். உங்களை ஏமாற்றி விடும் சூழ்நிலை உள்ளது. தினந்தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. ஆரோக்கியத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். வருமானத்தில் தடை ஏற்படும். தேவையற்ற செலவுகளும் வரும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த நேரத்தில் வேலையை விட்டு விட்டால், கண்டிப்பாக புதிய வேலை கிடைக்காது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் வீட்டிலிருந்தே அனுமனை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. எடுத்த காரியத்தை தைரியத்தோடு செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் தேவையில்லாத போட்டிகள் வந்தாலும், சமாளித்து விடுவீர்கள். அலுவலக பணியில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். வார இறுதியில் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். புதிய வாய்ப்புகளை நழுவ விட வேண்டாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதி தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெளிவு தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வீட்டில் குடும்ப உறவினர்களுக்கு இடையே பிரச்சனைகள் வரும் என்பதால், வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். வராத கடனை வசூலிக்க என்ன வழி உள்ளதோ அதை பாருங்கள். நாட்கள் கடந்தால் அந்த கடனை, திருப்பி வசூலிக்க முடியாமல் போய்விடும். தினம் தோறும் வீட்டில் இருந்தே குரு பகவானை நினைத்து வழிபடுவது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பணம் சம்மந்தப்பட்ட பரிமாற்றத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பண வரவு சீராக இருக்கும். வீண் விரயம் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடக்க பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். அலுவலகப் பணி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். தினமும் வீட்டில் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. எந்த பிரச்சனை வந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். வீட்டில், உறவினர்களிடையே பிரச்சினை ஏற்படும் என்பதால், நிதானத்தை கையாள்வது சிறந்த வழி. அலுவலகத்தில் உயர் பதவி உங்களை தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். சொந்த தொழிலில் ஏற்படக்கூடிய லாபத்தினால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வரவுக்கு ஏற்றார்போல் செலவு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினந்தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதி தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக தான் அமையப்போகின்றது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடப்பதற்கு பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். உங்களது வேலைகளை மன தைரியத்தோடு, உற்சாகத்தோடு செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் இதுநாள்வரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சம்பளம் அதிகரிக்கப் போகிறது. சொந்த தொழிலை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லப் போகிறீர்கள். தினம்தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் இருந்தே பூஜை செய்வது நல்லது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாகனமாக தான் பிறக்கப் போகின்றது. பண பரிமாற்றத்தில் அதிக கவனம் தேவை. உங்களுடைய கடனை நீங்கள் அடைக்க முயற்சிகளைச் செய்வீர்கள். யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தால் இந்தவாரம் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தடைகள் ஏற்பட்டாலும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களிடம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். தினந்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டிலிருந்து பத்து நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தேடித் தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்தை தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பணவரவு சுமாராக இருந்தாலும், செலவினை சமாளித்துக் கொள்வீர்கள். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் முடிவுக்கு வரும். சொந்தத் தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அலுவலகத்தில் உங்களது பணிகளை இனிதாக தொடங்கும் நேரம் வந்துவிட்டது. இனி கவலை வேண்டாம். விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இந்த வாரத்தை தொடங்குங்கள். தினம்தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டாலும், அதற்கு அதிக உழைப்பை முதலீடாக செலுத்த வேண்டியதிருக்கும். எந்த ஒரு பொருட்களையும் அவசரப்பட்டு வாங்கும் முடிவுக்கு செல்ல வேண்டாம். விரையம் ஏற்படும். பண பரிமாற்றத்தில் கவனமாக இருப்பது நல்லது. அலுவலக பணி எப்போதும் போல் சீராக செல்லும். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தினம்தோறும் அனுமன் வழிபாடு மிகவும் நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. சம்பள உயர்வு கிடைக்கப் போகிறது. நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளை ஈடுபடுவீர்கள். தொட்டதெல்லாம் வெற்றி அடைய போகும் வாரம் தான் இந்த வாரம் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியை அனுசரித்து செல்வது புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடாதீர்கள். தினந்தோறும் முருகர்வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.