இந்த வார ராசி பலன் : மே 7 முதல் 13 வரை

Indha vara rasi palan

மேஷம்
Mesham Rasiமேஷராசி அன்பர்களே! பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு அதிகரிக்கும். இந்த ராசி அன்பர்கள் உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் நல்ல திருப்புமுனை உண்டாகும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகமாக இருக்கும்.

அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும். வங்கிக் கடனுதவிக்கு முயற்சி செய்யலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

- Advertisement -

ரிஷபம்
Rishabam Rasiரிஷபராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவு களால் மனதில் சஞ்சலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவி கிடைப்பதுடன் உற்சாகமும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தாமதம் செய்யக்கூடாது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான சூழ்நிலையே காணப்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்
Mithunam Rasiமிதுனராசி அன்பர்களே! பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் என்பதால் மனதில் சலனம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் – மனைவிக்கிடையில் பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அடிக்கடி கோபவசப்படுவீர்கள் என்பதால், அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் சேருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணி களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கடகம்
Kadagam Rasiகடகராசி அன்பர்களே! பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமணத் துக்கு வரன் தேடும் முயற்சியை ஒத்திப் போடவும் . மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.

கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

மாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும்.

சிம்மம்
simmamசிம்மராசி அன்பர்களே! வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனதில் குழப்பமான நிலை ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

மாணவ மாணவியர்க்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சற்று கஷ்டப்பட்டு படிக்கவேண்டும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.

கன்னி
Kanni Rasiகன்னிராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.

துலாம்
Thulam Rasiதுலாம்ராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்
Virichigam Rasiவிருச்சிகராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவிஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

தனுசு
Dhanusu Rasiதனுசுராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவி இருவருக்குமிடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டு பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.

மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மேற்படிப்பு தொடர்பாக ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.

தினம் தினம் தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மகரம்
Magaram rasiமகரராசி அன்பர்களே! பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. பேசும்போது வார்த்தை களில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasiகும்பராசி அன்பர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதுமான பண வரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரம்.

மீனம்
Meenam Rasiமீனராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படும். தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டி வரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று மேற்படிப்பில் சேர்வீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வார ராசி பலன், மாத பலன், தமிழ் கதைகள், தமிழ் காலண்டர் குறிப்புகள், கதைகள் உள்ளிட்ட பல தகவல்கள் தெய்வீகம் பக்கத்தில் உள்ளன.