இந்த வார ராசிபலன் 09-11-2020 முதல் 15-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிஅற்புதமான நாளாகத்தான் இருக்க போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, குதூகலம் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். அதனால் சுபச் செலவுகளும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன சஞ்சலம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வேலையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். சம்பள உயர்வு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை இருக்கின்ற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். மற்றபடி புதிய முயற்சியில் ஈடுபட்டு, புதுவிதமான யுக்திகளை கையாண்டு முன்னேற்றத்திற்கான வழிகளை பார்க்கலாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டு. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. நெருங்கிய நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளுக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு பண்டிகைக்கு தேவையான பொருட்களை நிறைவாக வாங்கி மகிழ்ச்சியோடு நாட்களை கழிக்க போகிறீர்கள். சொந்த தொழிலுக்கு கடன் வாங்க முயற்சி செய்யலாம். கடன்தொகை எளிதில் கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலை, இனி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தாலும், அது இந்த வாரம் முழுமையாக சரியாகிவிடும். அலுவலகத்தில் உங்களது மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற போகிறீர்கள். உயர் பதவியும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வோடு, சேர்த்த இடமாற்றம் கிடைத்தால், ஏற்றுக்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும். படிப்படியாக தடைகள் குறைந்து, கவலைகள் மறைந்து கொண்டே வரும், காலம் வந்துவிட்டது. சிலபேருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனையில் இருந்து கூட வெளி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். எந்த வேலையைத் தொடங்கினாலும் ஆரம்பகட்டத்தில் தடையாக தான் இருக்கும். முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். திரும்பத் திரும்ப முயற்சி செய்யும்போது நிச்சயம் அது உங்களுக்கு வெற்றியை தரும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அலுவலகத்தில் பணி எப்போதும் போல செல்லும். சொந்தத் தொழிலில் பார்ட்னரை நம்பி எதையும் முழுமையாக ஒப்படைத்து விட வேண்டாம். நீங்களும் கணக்கு வழக்குகளை கண்காணிப்பது நல்லது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்கலாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு பணப்பற்றாக்குறையை நீக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய தேவைகளுக்கான பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பண்டிகையை நிறைவாக கொண்டாடி மகிழப் போகிறீர்கள். புதியதாக தொழில் தொடங்க கடன் வாங்கலாம். புதிய முயற்சிகளை செய்யலாம். எத்தனை வெற்றி உங்களை சேர்ந்தாலும், தலைகனம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. கோபத்தோடு பேசக்கூடாது. தேவையற்ற சண்டை சச்சரவுகள் உறவுகளுக்கிடையே, நண்பர்களுக்கிடையே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரிபவர்களிடமும் உஷாராக பேசுங்கள். முடிந்தவரை அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால் இந்த வாரம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவுக்கு பெயரும் புகழும் கிடைக்க போகின்றது. உங்களுடைய நல்லெண்ணத்தை, உங்களைச் சுற்றியுள்ள உறவுகளும், நண்பர்களும் நன்றாக புரிந்து கொள்வார்கள். உங்களுடைய பேச்சாற்றலும் செயல் ஆற்றலும் திறமையாக மாறப்போகின்றது. உங்களுடைய அறிவு திறனை பார்த்து, நீங்களே ஆச்சரியப்பட போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து எட்டிப் பார்க்கும். பண வரவு சீராக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள். இல்லை என்றால் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை ஒரு முறை செய்வது நன்மை தரும். தேவையற்ற குழப்பங்களை தீர்க்கும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு பண்டிகையை நிறைவாக கொண்டாடும் அளவிற்கு வருமானம் கைக்கு வரப்போகின்றது. பண்டிகை முடிவதற்குள் கையிலிருக்கும் பணம் எல்லாம் தீர்ந்து போகப்போகிறது. உஷாராக கொஞ்சம் சேமிப்பை எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பு இந்த மாதம் முழுவதும் கஷ்டப்படுவீர்கள். மற்றபடி அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்கி, கடினமான உழைப்பை போட்டு, மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டை வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்யவேண்டாம். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள். யாரையும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போடாதீர்கள். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு மனஉறுதியை அதிகப்படுத்தி வெற்றியை கொடுக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் பேசும்போது உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை விட்டுவிட்டு விதத்தில் மட்டும் ஈடுபடவே கூடாது. சண்டை, கைகலப்பு அளவு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. தேங்கிக்கிடந்த அரசு சம்பந்தப்பட்ட வேலையை கையில் எடுக்கலாம். சீக்கிரமாக முடியும். வீட்டில் உள்ள பெண்களுக்கு மன நிம்மதி தரகூடிய வாரம் தான் இந்த வாரம் இருக்கப்போகின்றது. எவ்வளவுதான் நிம்மதி இருந்தாலும், ஏதோ ஒரு உறுத்தல் மட்டும் மனதில் இருக்கும் அந்த உறுத்தல நீக்க, தினம்தோறும் இறை வழிபாடு செய்யுங்கள். 5 நிமிடம் கண்களை மூடி தியானத்தில் ஈடுபடுங்கள். உங்களுக்கு நன்மை மட்டுமே நடக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு துணிச்சல் கொஞ்சம் அதிகரிக்கப் போகின்றது. அதற்காக எந்த ஒரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாக அதன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா என்று சிந்தித்து அந்த வேளையில் காலை வைப்பது நல்லது. சில சமயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவு தவறாவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் இந்த வாரம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஆனால், நேரம் உங்களை அவசர அவசரமாக தவறுகளை செய்ய வைக்கும். உஷாராக இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிடாதீர்கள். உங்களுடைய பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் எதையும் இந்த வாரம் செய்ய வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் கொஞ்சம் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு எந்த ஒரு குறைவும் இருக்காது. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு, வெகு சீக்கிரமாகவே நல்ல வேலை கிடைக்கும். கூடிய விரைவில் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வியாபாரத்தில் முடிந்தவரை அதிகமான முயற்சியை உழைப்பை போடுங்கள். வெற்றி உங்களுக்கே. அவ்வப்போது வாழ்க்கையில் பலவகையான பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய மனப்பக்குவமும் தைரியமும் உங்களிடத்தில் உண்டு. சோர்ந்து போய் அமர்ந்து விடாதீர்கள். இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தினசரி வேலையைத் தொடங்குங்கள். காலையில் கட்டாயம் குல தெய்வத்தை வழிபட மறக்காதீர்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் எவ்வளவு தான் வந்தாலும் இந்த வாரம் கையில் தங்காது. கொஞ்சம் செலவை கட்டுப்படுத்திக்கொண்டு, சேமிக்க ஆரம்பிக்கவும். கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். புதியதாக வேலையில் சேர்ந்து இருப்பவர்கள், அந்த வேலையில் கவனமாக இருக்க வேண்டும். புதியதாக தொழில் தொடங்கி இருப்பவர்களும் அந்தத் தொழில் கொஞ்சம் அக்கறை எடுத்து கவனத்தோடு செயல்படுத்த வேண்டும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவம் உங்களிடத்தில் இருந்தாலும், உங்களுடைய உள் மனதில் ஒரு சிறிய பயம் இருந்து கொண்டே இருக்கும். பயம் வேண்டாம் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். நண்பர்களின் சகவாசம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களுடைய வேலையில் முயற்சியை செய்தால் போதும். நீங்கள் வாழ்க்கையில் எங்கேயோ சென்று விடுவீர்கள். மனதை அலைபாய விட வேண்டாம். தன்னம்பிக்கையோடு, தைரியத்தோடு, துணிச்சலோடு, ஒரு வேலையை செய்து வெற்றி காணும் வரை பொறுமை காக்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். கூடுமானவரை எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அக்கறை எடுத்து செயல்படுவது நல்லது. அலட்சியப்போக்கோடு செயல்படாதீர்கள். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.