இந்த வார ராசிபலன் 16-11-2020 முதல் 22-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அதிகமாக கோபப்பட வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, கோபப்பட்டு எடுத்தெறிந்து பேசுவதன் மூலம், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். பொறுமை காப்பது அவசியம் தேவை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால், யாராவது ஒருவர் அமைதியாக போவது குடும்பத்திற்கு நல்லது. மற்றபடி பொருளாதார சூழ்நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வீட்டில் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதியதாக எதையும் முயற்சி செய்யாதீர்கள். செய்யும் வேலையை சரியாக செய்தாலே போதும். நல்ல லாபம்தான். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் உங்களுக்கு தேவை இல்லாத அனாவசியமான விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. அடுத்தவர்களது பிரச்சினையில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களுடைய வீட்டு பிரச்சனையை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி இதுநாள் வரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணி சுமுகமாக செல்லும். நிதானமாக செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, சுலபமாக கடன் கிடைக்கும். பண பிரச்சனையில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். செய்யும் வேலையில் இடமாற்றம், பதவி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்து, விரிவுபடுத்தலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கும் பணிகளை தொடங்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கப் போகின்றது. நண்பர்களின் உதவியால் சில நல்லது உங்களைத் தேடி வரும். பம்பரம் போல சுழன்று எல்லா வேலையும் பொறுப்பாக முடிக்கப் போகிறீர்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாட்டை செய்து விட்டு உங்களது வேலையை தொடங்குங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்லது உங்களை தேடி வரப் போகின்றது. அந்த சமயத்தில் அவசரப்பட்டு, ஏதாவது செய்துவிட்டால், வெற்றி கைநழுவிப் போய் விடும். அதாவது நீங்கள் செய்யும் வேலையிலும் பொறுமை தேவை, சொந்த தோள்களிலும் பொறுமை தேவை, குடும்ப சூழ்நிலையில் பிரச்சனை ஏற்பட்டாலும் பொறுமை தேவை, வார்த்தையில் நிச்சயம் பொறுமை தேவை. நீங்கள் எதிர்பாராத ஏதோ ஒன்று அதுவும் நல்லதாக நடக்கப்போகின்றது. அவசரம் வேண்டாம். பொறுமை காப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நிம்மதியாக இருக்கலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதனால் வரை இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள், எதிர்பாராத நேரத்தில் நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும். உங்களை பார்த்து கேலி கிண்டல் செய்தவர்கள், உங்களை பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களின் நிலைமை இனி கொஞ்சம் கொஞ்சமாக உயிரும். வெற்றி தோல்வி சேர்ந்துதான் இருக்கும். தோல்வி வரும்போது துவண்டு விடாமல், மன உறுதியோடு போராடுங்கள். நிச்சயம் உங்களுக்கே வெற்றி! பயணத்தின் போது மட்டும் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கடன் எதையும் வாங்காதீர்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனி நடக்க ஆரம்பிக்கும். வீட்டில் சுப விசேஷங்கள் நடப்பதால், சுப விரயங்களும் அதிகரித்துக்கொண்டே செல்லும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் சிக்கனத்தை கையாளுங்கள். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. சம்பள உயர்வு கிடைக்கப் போகின்றது. அதற்கு தகுந்தபடி உங்களது உழைப்பையும் நீங்கள் உயர்த்திக்கொண்டே செல்ல வேண்டும். வேலைக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும். முடிந்த வரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் அதிகப்படியான முயற்சியை எடுக்க வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும், சற்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். இன்று எடுக்கவேண்டிய முடிவை நாளை தள்ளி போட்டாலும் பரவாயில்லை. அவசரம் கூடவே கூடாது. சில சமயங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும், பரவாயில்லை மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் உங்களால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சொந்தத் தொழில் பார்ட்னர்ஷிப் இருந்தால் பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம். அப்போதும் பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. சிக்கல்கள் எதுவும் இருக்காது, இருப்பினும் கொஞ்சம் கவனமாக இருந்து கொண்டால் நல்லதுதானே! தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சமாளிக்கக்கூடிய அளவிற்கு மன தைரியத்தோடு செயல்படப் போகிறார்கள். அதற்காக ரொம்ப துணிச்சலோடு ஏதாவது செஞ்சீங்கன்னா பிரச்சினையில் போய் மாட்டிக் கொள்வீர்கள். வேகத்தோடு சேர்ந்த விவேகமும் முக்கியம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது குருட்டு தைரியத்தோடு தடாலடியாக எந்த ஒரு வேலையையும் செய்து, தவறான விஷயங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி உங்களது வேலை சொந்த தொழில் எல்லாம் சுமூகமாக தான் செல்லும். நிதானமாக செயல்படுபவர்களுக்கு அதிர்ஷ்ட காத்து நிச்சயம் வீசும் என்பதில் சந்தேகமே கிடையாது. புதிய முயற்சிகளுக்கும் வெற்றியுண்டு. நிதானத்தோடு செயல்படுங்கள். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் எதையும் அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள், மேலதிகாரிகள் எல்லோரிடமும்  அனுசரணை கட்டாயம் தேவை. இந்த சூழ்நிலையில் புதிய வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். நீங்கள் செய்த வேலைக்கு கூட நல்லபெயர் உங்களுக்கு கிடைக்காது. வேறு ஒருவர் தட்டிச் செல்லும் போது உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இருப்பினும் பொறுமை காக்க வேண்டிய சூழ்நிலை. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், சக ஊழியர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உஷாராக இருந்து கொள்ளுங்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அரசாங்க சம்பந்தப்பட்ட வேலை நிலுவையில் இருந்தால் இந்த வாரம் அதை எடுத்து நடத்தி முடிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் நடக்கத் தொடங்கும். அனாவசிய செலவை குறைத்துக் கொண்டு சேமித்து கொண்டால் எதிர்காலத்தில் கஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்ப ரொம்ப உஷாராக இருக்க வேண்டியது அவசியம். யாரையாவது நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களது பணத்தை யாரை நம்பியும் கொடுக்காதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். குறிப்பாக சொந்தத் தொழிலில் 10 ரூபாய் கூட முதலீடு செய்ய வேண்டாம். உஷாராக இருக்கவேண்டும். நஷ்டம் ஆவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. புதியதாக சம்பாத்தியம் இல்லை என்றாலும், கையில் இருப்பதை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது உங்களுடைய திறமையில் தான் உள்ளது. பயணங்கள் செய்யும்போது உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் தடைகளை தகர்க்கும் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து செய்துவாருங்கள் நன்மை உண்டு.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிஅற்புதமான அதிர்ஷ்டங்கள் தானாக தேடி வரப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு, நல்ல பெயர் எல்லாம் கிடைக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் வருமானம் உங்கள் கையை தேடிவரும். இருப்பினும் தலைகணம் வரக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, பெருமையோடு நிதானத்தோடு செயல்படுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். ஆர்ப்பாட்டமில்லாத வெற்றிதான் நிலைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தினந்தோறும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.