இந்த வார ராசிபலன் 23-11-2020 முதல் 30-11-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign

வாழ்வில் எதையாவது சாதிக்க நினைக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய இருக்கிறது. பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நீங்கள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் உயரிய பண்பினால் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இருக்கும். பெண்கள் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சரளமாக நடைபெறும்.

ரிஷபம்:
Taurus zodiac sign

எவ்வளவு தோல்விகள் வந்தாலும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் சரியான புரிதல் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றகரமான வாரமாக அமைய இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான தொந்தரவுகளை சமாளிக்க சற்று சிரமப்பட நேரலாம். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

மிதுனம்:
Gemini zodiac sign

யார் எதை சொன்னாலும் உடனே நம்பி விடாமல் தெளிவான சிந்தனை கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரம் தான். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாட்களாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் நபர்களை கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

கடகம்:
zodiac sign

எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் கடமையில் கண்ணாக விளங்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கிரக அமைப்புகள் சிறப்பாக இருப்பதால் சுபகாரிய முயற்சிகள் சிறப்பான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறையுடன் இருப்பது மிகவும் நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சிம்மம்:
Leo zodiac sign

எவருக்கும் அஞ்சாமல் உங்களுடைய லட்சிய பாதையை நோக்கிய பயணத்தில் தெளிவாக இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருந்தால், மறுநாள் அதற்கு நேர்மாறான சூழ்நிலை ஏற்படக்கூடும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் படுபவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கன்னி:
Virgo zodiac sign

உங்களை எதிரியாக நினைப்பவர்களையும் நண்பர்களாக மாற்றிவிடும் திறமை கொண்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விசேஷமான வாரமாக அமைய இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காமல் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசிப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்போருக்கு அதிர்ஷ்டமான வாரம் இது. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் அவசியம் தேவை.

துலாம்:
Libra zodiac sign

நீதி, நேர்மை, நியாயம் என்ற கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாரமாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய வசீகரமான பேச்சாற்றலால் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் மந்தமாக இருந்தாலும் பொருட் தேக்கம் எதுவும் ஏற்படாது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பதில்கள் வரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்க நினைக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் இனிய வாரமாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற போராடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு
Dhanusu Rasi

மற்றவர்களின் குணாதிசயங்களை எளிதாக எடை போட்டு விடும் திறமை கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல வாரமாக அமைய இருக்கிறது. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். சக பணியாளர்களின் ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது உத்தமம்.

மகரம்:
Capricornus zodiac sign

பரந்த மனப்பான்மை கொண்டு விளங்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையப் போகின்றது. உங்களுடைய இரக்க சுபாவத்தால் பலருடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை சிறப்பாக கையாளுவீர்கள். பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த போட்டிகள் வலு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் வளமான பலன்களை கொடுக்கும். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign

சுருங்கச் சொன்னாலும் மற்றவர்களுக்கு புரியும்படி பேசும் ஆற்றல் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கக் கூடிய தைரியம் பிறக்கும் நல்ல வாரமாக அமையப் போகின்றது. பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மத்தியில் அந்தஸ்து அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி சூடு பிடிக்கத் துவங்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று கூடுதல் எச்சரிக்கை தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் முன் கவனத்துடன் இருப்பது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign

பூமாதேவியே தோற்றுவிடும் அளவிற்கு பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில் பொறுமையாகவும், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படவும் தெரிந்த மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபீட்சமான வாரமாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு தங்களின் சாதுரியமான பேச்சால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு டென்ஷனை உண்டாக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுய தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.