இந்த வார ராசி பலன் – அக்டோபர் 08 முதல் 14 வரை

Indha vara rasi palan

மேஷம்

Mesham Rasi

தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கும்.

- Advertisement -

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு கரையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 8, 9, 11, 12, 13; பரணி: 8, 9, 10, 12, 13, 14; கார்த்திகை: 9, 10, 11, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அசுவினி: 10, 14; பரணி: 11; கார்த்திகை: 8, 12

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ரிஷபம்

Rishabam Rasi

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங் களில் இருந்து அழைப்பு வரும்.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கூறி ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை: 9, 10, 11, 13, 14; ரோகிணி: 10, 11, 12, 14; மிருகசீரிடம்: 8, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 8, 12; ரோகிணி: 8, 9, 13; மிருகசீரிடம்: 9, 10, 14

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

மிதுனம்

midhunam

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், ஆனால், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம்: 8, 11, 12, 13; திருவாதிரை: 8, 9, 12, 13, 14; புனர்பூசம்: 8, 9, 10, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 9, 10, 14; திருவாதிரை: 10, 11; புனர்பூசம்: 11, 12

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

கடகம்

Kadagam Rasi

பணவரவுக்குக் குறைவில்லை. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிலருக்கு வெளிநாட்டி லிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 8, 9, 10, 13, 14; பூசம்: 9, 10, 11, 14; ஆயில்யம்: 8, 10, 11, 12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 11, 12; பூசம்: 8, 12, 13; ஆயில்யம்: 9, 13, 14

வழிபடவேண்டிய தெய்வம்: ரங்கநாதர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

சிம்மம்

simmam

பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 8, 9, 11, 12, 13; பூரம்: 8, 9, 10, 12, 13, 14; உத்திரம்: 9, 10, 11, 13, 14

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மகம்: 10, 14; பூரம்: 11; உத்திரம்: 8, 12

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!

கன்னி

Kanni Rasi

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதுடன் தேவையற்ற செலவுகளும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உரிய சிகிச்சையி னால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.

மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 9, 10, 11, 13, 14; அஸ்தம்: 10, 11, 12, 14; சித்திரை: 8, 11, 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திரம்: 8, 12; அஸ்தம்: 8, 9, 13; சித்திரை: 9, 10, 14

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

துலாம்

Thulam Rasi

வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதேநேரம் உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 8, 11, 12, 13; சுவாதி: 8, 9, 12, 13, 14; விசாகம்: 8, 9, 10, 13, 14

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
சித்திரை: 9, 10, 14; சுவாதி: 10, 11; விசாகம்: 11, 12

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னையாளுடையான்
குறியமாணியுருவாய கூத்தன் மன்னியமருமிடம்
நறியமலர்மேல் சுரும்பார்க்க எழிலார்மஞ்ஞைநடமாட
பொறிகொள்சிறைவண்டு இசைபாடும் புள்ளம்பூதங்குடிதானே

விருச்சிகம்

Virichigam Rasi

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும்.

அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் ஆதாயம் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 8, 9, 10, 13, 14; அனுஷம்: 9, 10, 11, 14; கேட்டை: 8, 10, 11, 12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 11, 12; அனுஷம்: 8, 12, 13; கேட்டை: 9, 13, 14

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

தனுசு

Dhanusu Rasi

பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண் டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். மாதாந்திர தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 8, 9, 11, 12, 13; பூராடம்: 8, 9, 10, 12, 13, 14; உத்திராடம்: 9, 10, 11, 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 10, 14; பூராடம்: 11; உத்திராடம்: 8, 12

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

மகரம்

Magaram rasi

எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவிஉயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 9, 10, 11, 13, 14; திருவோணம்: 10, 11, 12, 14; அவிட்டம்: 8, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7

தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 8, 12; திருவோணம்: 8, 9, 13; அவிட்டம்: 9, 10, 14

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

கும்பம்

Kumbam Rasi

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவ தற்கான சூழ்நிலை கனிந்து வரும்.சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 8, 11, 12, 13; சதயம்: 8, 9, 12, 13, 14; பூரட்டாதி: 8, 9, 10, 13, 14

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 9, 10, 14; சதயம்: 10, 11; பூரட்டாதி: 11, 12

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மீனம்

Meenam Rasi
பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 8, 9, 10, 13, 14; உத்திரட்டாதி: 9, 10, 11, 14; ரேவதி: 8, 10, 11, 12

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 11, 12; உத்திரட்டாதி: 8, 12, 13; ரேவதி: 9, 13, 14

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே