இந்த வார ராசிபலன் 12-10-2020 முதல் 18-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வரவே வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கடன்தொகை வசூலாகும். உங்களுடைய வார்த்தையில் மட்டும் நிதானம் தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டு, பின் கஷ்டப்படுவதில் பிரயோஜனமில்லை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்லுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக அமைந்தாலும், அவ்வப்போது குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து மறையும். அனுசரித்து சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முடிந்த வரை யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். யாரிடமிருந்தும் கடன் தொகையை பெற வேண்டாம். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பணியில் நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு உண்டு. வெளியிடங்களுக்குச் செல்லும்போது மட்டும் அதிக கவனம் தேவை. மாஸ்க் அணியாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் அமையப்போகின்றது. நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த சிரமமான வேலை கூட, சுலபமாக நடந்து முடிந்துவிடும். அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு, உங்களது வேலையை முடிக்கப் போகிறீர்கள். அலுவலகத்தில் புகழ் உங்களை தேடி வரும். ஒரு பக்கம் பாராட்டு மழை இருந்தாலும், தன்னடக்கம் கட்டாயம் தேவை என்பதை மறந்து விடாதீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உடல்நலனில் மட்டும் சற்று அக்கறை தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால் இந்த வாரம் வெற்றிகள் குவியும். ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்க.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும், உங்களைத் தேடிவரும். சம்பள உயர்வோடு சேர்ந்த இடமாற்றம் வந்தால், அதை ஏற்றுக் கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சில் மட்டும் கவனம் தேவை. அனாவசியமாக கோபப்பட்டு யாரிடமும் கடுமையான வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்லது என்று சொல்லும் வார்த்தைகள் கூட சில சமயங்களில் அடுத்தவர்களுக்கு கெடுதலாக நினைக்க தோன்றிவிடும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய பேச்சும் நடவடிக்கைகளும், அடுத்தவர்களை கவரும் அளவிற்கு சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்தோடும் இருக்கும். உங்களுடைய திறமையான வேலையை பார்த்து உங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களே பாராட்டுவார்கள். சொந்த தொழிலில் மட்டும் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நிலுவையில் இருந்தால், இந்த வாரம் தொடங்குங்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்தெறியும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் அமையப்போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும், உடனடியாக வெற்றியை தொட முடியாத சூழ்நிலை நிலவும். இரண்டு மூன்று தடவை சில சரிவுகளை சந்தித்த பின்னரே, வெற்றி வாகை சூடுவீர்கள். ஆனால், உங்களிடம் இருக்கும் மன உறுதி, உங்களை வாழ்க்கையில் மேன்மேலும் முன்னேற்றம் அடைய தூண்டுகோலாக உதவி புரிந்து கொண்டே இருக்கும். வேலை கிடைப்பதில் சிரமம், கடன் கிடைப்பதில் சிரமம், வீட்டில் சுப காரியம் நடப்பதில் தடை, இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரத்தான் செய்யும். விடாமுயற்சி விஸ்வரூப முயற்சி என்பதை மனதில் கொண்டு இந்த வாரம் செயல்படுங்கள். மனக்கவலை நீங்க ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. குடும்பத்தில் சுப காரிய தடை நீங்கி விசேஷங்கள் தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும். சுப செலவுகளுக்கு பணத்தை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலக பணியில் உங்களது வேலையை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், எந்த பிரச்சனையும் முடிக்க வேண்டும் என்பதற்காக, பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள். எதிர்காலத்தில் அந்த பொய், உங்களை பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வைக்கும். நேர்மையோடு துணிச்சலோடு, வரக்கூடிய கஷ்டத்தை அப்போதே எதிர்கொண்டு விட்டால், பிரச்சினை இல்லை. மன தைரியத்தை அதிகரிக்க அனுமன் வழிபாட்டை தினம்தோறும் செய்து வாருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உஷாராக இருக்க வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. எந்த ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பாகவும், ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டியது அவசியம். அலுவலகப் பணியில் யாரை நம்பியும், யாரிடமும் குறை பேசாதீர்கள். குறிப்பாக உங்களது குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது. நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபகாரிய செலவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் நன்மை தரக்கூடிய சம்பவங்கள் அதிகமாக நடந்தாலும், வீண் வம்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், உஷாராக இருந்து கொள்ளுங்கள். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு, இது நாள் வரை இருந்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் இந்த வாரம் ஒரு முடிவு கிடைக்கும். முடிந்த வரை உங்களது மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல பாருங்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை, இன்னொருத்தர் தட்டி செல்ல வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த இடத்தில் கோபப்பட வேண்டாம். உங்களுக்கான பாராட்டு நிச்சயம் உங்களை தேடி வரும். செலவுகளை மட்டும் குறைத்துக்கொண்டு, சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். முடிந்த வரை இந்த வாரம் முழுவதும் நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. கட்டாயம் பயணம் செய்ய வேண்டுமென்றால், பாதுகாப்பு கவசம் அவசியம் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாகத்தான் அமையப் போகின்றது. இந்த வாரம் வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம். சொந்தத் தொழிலை விரிவுபடுத்த வங்கியிலிருந்து மட்டும் கடன் தொகையை பெற முயற்சி செய்யுங்கள். கட்டாயம் கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியம் மீண்டும் தொடங்கும். அலுவலகத்தில் பணிகள் எப்பவும் போல செல்லும். சுபவிரயங்கள் ஒன்றன்பின் ஒன்று வந்து கொண்டேதான் இருக்கும். சமாளிப்பது உங்கள் கையில் உள்ளது. சந்தோஷமான செலவுகள் தான், இருப்பினும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு செலவு செய்யுங்கள். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அடாவடித்தனமாக முடிவுகளை எடுக்காதீர்கள். நிதானத்தோடு செயல்பட்டால் நஷ்ட்டங்கள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்து பாருங்கள். திருமணம் சம்பந்தப்பட்ட சுப காரியங்களை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தேவை இல்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் பஞ்சாயத்து செய்யப் போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் சந்தோஷம் அதிகரிக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட்டால் கட்டாயம் சங்கடம் வரும். முடிந்தவரை மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு மந்திரத்தை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் தேவையில்லாத மன குழப்பம் நீங்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகின்றது. புதியதாக ஒரு காரியத்தைத் தொடங்கி விட்டோமே, இதில் வெற்றி அடைவோமா! தோல்வி அடைவோமா! என்ற மன சஞ்சலம் ஆரம்பத்தில் இருந்தாலும், அதில் முட்டிமோதி முயற்சி செய்து கட்டாயம் வெற்றி பெறுவீர்கள். முயற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள். சொந்தத் தொழில், அலுவலகப் பணி, உற்றார், உறவினர்கள், கடன் பிரச்சனை இப்படிப்பட்ட பல பிரச்சினைகளிலிருந்து இனி உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகின்றது. பணப்பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.