இந்த வார ராசிபலன் 19-10-2020 முதல் 25-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வருமானம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக, ஆடம்பர செலவு செய்து விடாதீர்கள். முடிந்தவரை சிக்கனத்தை கையாளுங்கள். இதோடு சேர்த்து உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். முடிந்த வரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். சொந்தமாக தொழில், வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. எந்த வேலையை புதியதாக தொடங்குவதாக இருந்தாலும், ஒன்றுக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். பண பரிமாற்றத்தில் சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்தெறியும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாள் கனவுகள், நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. மன பயம் இல்லாத, தன்னம்பிக்கை கொண்ட முயற்சியோடு எந்த ஒரு வேலையும் தொடங்குங்கள். இந்த வாரம் கட்டாயம் சக்சஸ் தான். குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும். கணவர் அல்லது மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடுபவர்கள் தேடலாம். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். முடிந்தவரை வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்வது நல்லது. கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று இழுபறியான வாரமாக இருக்கப்போகின்றது. எதை தொட்டாலும் அதில் உடனே வெற்றி அடைய முடியாமல், கொஞ்சம் திக்கித்திணறி, கஷ்டப்பட்டு பலமுறை முயற்சி செய்து, அதன் பின்பு வெற்றி அடைந்து விடுவீர்கள். ஆனால், கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் அவ்வப்போது வந்து போகும். அலுவலகப் பணியில் உடன் பணிபுரிபவர்களால், சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களிடம் பக்குவமாக பேசி பழகுங்கள். போட்டிகள் பொறாமைகள் அதிகரிக்கும். அவ்வளவு தான். மற்றபடி அனுசரணையாக சென்றால் அனைத்தும் நன்மையே. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. முடிந்தவரை அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வதாக இருந்தால் மட்டும், அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். சொத்து வாங்குவது, பத்திரம் பதிவது, வண்டி வாகனங்கள் வாங்குவது, லைசன்ஸ் எடுப்பது போன்ற எல்லா வேலைகளையும் அடுத்த வாரம் தள்ளிப் போட்டு விடுங்கள்‌. அலுவலகப் பணியில் உங்களது வேலையை முழுமையாக செய்யவிடாமல் சோம்பேறித்தனம் தடுக்கும். எப்பாடுபட்டாவது, முயற்சி செய்து அன்றைய வேலையை முடித்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. தினமும் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழிலை கடன் வாங்கி கூட விரிவுபடுத்தலாம். நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு பெயரும் புகழும் உங்களை வந்து சேரப் போகின்றது. நல்லது உங்களுக்கு இந்த வாரம்  எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடைபட்டு இருந்தால், அதை இந்த வாரம் தொடங்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவிக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிக்கொடுத்து, மகிழ்வீர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் ஆக மொத்தத்தில் இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரம் என்று கூட சொல்லலாம் குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் சந்தோஷம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள், மனக்குழப்பங்கள் நீங்கும். வேலையில் சம்பள உயர்வு, சேர்ந்த இடமாற்றம் கிடைத்தால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். கையிலிருக்கும் வேலையை மட்டும் இந்த நேரத்தில் விட்டுவிடாதீர்கள். புதிய வேலை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். எப்பாடுபட்டாவது அனுசரித்து வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். இன்றைக்கு கஷ்டப்பட்டாலும் இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து, நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனைவி குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று முடிந்தால் குலதெய்வ தரிசனம் செய்து வருவது நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வெற்றிகளை தரக் கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால், உங்கள் வெற்றிகளை தேவை இல்லாமல், நீங்கள் அடுத்தவர்களின் சொல்லி தம்பட்டம் அடித்துக் கொண்டால், அதன் மூலம் பல பிரச்சனைகள் வரும். முக்கியமாக உங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை, உங்களுடைய வருமானத்தை, உங்கள் நெருங்கிய நண்பர்களிடம், நெருங்கிய சொந்தக்காரர்களிடம் கூட சொல்லிக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கேஏ பிரச்சனையாக திரும்பும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும். அலுவலகப் பணியில் நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கப் போகின்றது. இப்படியாக பல நன்மைகள் உங்களுக்கு வரப்போகின்றது. தினம்தோறும் சிவவழிபாடு செய்து கொண்டே வாருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசி காரர்களுக்கு, இந்த வாரம் உங்களுடைய பேச்சாற்றலை வைத்தே நிறைய பேரை மயக்கி விடப் போகிறீர்கள். அதாவது உங்கள் பேச்சை கேட்டு, நீங்கள் சொல்வதற்கெல்லாம் எல்லோரும் தலை ஆட்டுவார்கள். அந்த அளவிற்கு முகப்பொலிவும், வாக்கு வன்மையும் அதிகரிக்கப் போகின்றது என்று கூட சொல்லலாம். ரொம்ப நாளா உங்களை யாராவது ஏதாவது வேலைக்கு, ஏமாத்திட்டே வராங்கன்னா, இந்த வாரம் நைசா போய் தாஜா பண்ணி அவங்க கிட்ட பேசியே, அந்த காரியத்தை சாதித்துக் கலாம். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகின்றது. பெயர் புகழுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகப் போகிறீர்கள். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சிரித்துக் கொண்டே இருங்கள். மேலும் நல்லது நடக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப்போகின்றது. தேவையில்லாத பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துவிடும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் பளிச்சென்று ஆம், இல்லை என்ற முடிவை சொல்லிவிடுவீர்கள். குழப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் போது, எக்காரணத்தைக் கொண்டும் ஒருவருக்கு தலைகணம் அதிகரிக்கக் கூடாது. உங்களுக்கும் தலைகனம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழில் வேலைவாய்ப்பு இப்படியாக எல்லாமே சுமுகமாக செல்லும். கொஞ்சம். சோம்பேறித்தனத்தை தூக்கி ஓரமாக வைத்து விட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால், உங்களை வெல்ல யாராலும் முடியாது தினம் தோறும் அம்மன் வழிபாடு தைரியத்தை மேலும் அதிகரிக்கும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. யாராவது உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே உங்களைத் தேடி வரப்போகிறார்கள். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரிடமிருந்தும் கடன் வாங்காதீர்கள். யாரை நம்பியும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். தேவையில்லாத வம்பு வரும். உங்களது பொருட்கள் களவு போவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களது கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உஷார் உஷார்! மற்றபடி வீட்டில் சுப நிகழ்ச்சிகளை தொடங்கலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உங்கள் செவிகளுக்கு வந்து சேரும். தினம்தோறும், குலதெய்வ வழிபாட்டோடு சேர்த்து முடிந்தால் ஒருமுறை குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து வருவது மிகவும் நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே உங்களுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கும். இதில் அவசரப்பட்டு கடனை வாங்கி அந்த பிரச்சனையையும் உங்கள் தலை மேல் போட்டுக்கொள்ள வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. மற்றபடி சொந்தத் தொழிலாக இருந்தாலும் வேலை வாய்ப்பாக இருந்தாலும் உங்களுக்கு நன்மை கொடுக்கும் வகையில் தான் அமையும். ஆனால் உங்களுடைய முன்கோபம் எல்லா வகையிலும் உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும். கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்ளுங்கள் தினம்தோறும் இறைவழிபாடும் தியானமும் அவசியம் தேவை.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நீண்ட நாட்களாக நடத்தி முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்களை, இந்த வாரம் தொடங்கலாம். நிச்சயம் வெற்றி உண்டு. மன தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வந்து, மனநிறைவை அடைவீர்கள். பணப்பற்றாக்குறை இருப்பதுபோல தெரிந்தாலும், அவ்வபோது அங்கிருந்து கொஞ்சம் வருமானம், இங்கிருந்து கொஞ்சம் வருமானம் வந்து போக்கெட்டை நிரப்பிவிடும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. முருக வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.