இந்த வார ராசிபலன் 26-10-2010 முதல் 01-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செய்ய வேண்டியது அவசியம். சிந்திக்காமல் எந்த ஒரு விஷயத்திலும் காலடி எடுத்து வைக்க வேண்டாம். ஏனென்றால், சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவசர அவசரமாக செய்துவிட்டு, பிறகு பொறுமையாக சிந்திப்பீர்கள்! அதற்காகத் தான். ‘இந்த வேலையை  செய்யாமல் இருந்திருந்தாலே, நன்றாக இருந்திருக்கலாம்.’ இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, நீதான மட்டும் போதும். மற்றபடி சொந்தத் தொழில், வேலை எல்லாமே அனுகூலமாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்‌. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அனாவசியமா யார் பீச்சுக்குப் போகாமல், உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க. முடிந்தால் குடும்பத்தோடு ஒருநாள் குலதெய்வத்தை தரிசனம் செய்து வாருங்கள்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத லாபம் காத்துக் கொண்டிருக்கின்றது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேளை உங்கள் பக்கம் முடிவாகி, உங்களுக்கு சாதகமாகி, உங்கள் காட்டில் மழைதான். முடிந்தவரை இந்த வாரத்தில் கடன் ஏதும் வாங்காமல், கையில் இருக்கும் பணத்தை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். வேலையில் இருப்பவர்களுக்கு சற்று அலைச்சல் இருக்கத்தான் செய்யும். பணப்பற்றாக்குறை யோடு சேர்ந்து, வீண் விரயங்களும் சேர்ந்து வந்து, கொஞ்சம் இக்கட்டான கஷ்டம்.  கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள். மற்றபடி மனநிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால், கொஞ்சம் இழுபறியாக இருக்கும். அவ்வளவு தான். விடாமுயற்சியோடு, உங்களது வேலையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு இந்த வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று மட்டும் தள்ளிப் போடாதீர்கள். கடைசிவரை அந்த வேலையை செய்யாமல் போவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. அலுவலக வேலையில் வாயை அனாவசியமாக திறக்கவே கூடாது. குடும்ப பிரச்சனையிலும் நீங்கள் மௌனமாக இருந்தால், தப்பிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, ஜாக்கிரதையா இருந்துக்கோங்க! தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காத, உங்களுடைய மேலதிகாரி கூட, திடீரென்று உங்களை நம்ப கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றது. இதனால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். சான்ஸை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க. உங்களுடைய தொழில் பாட்னரிடம் பண பரிமாற்றத்தில் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. இந்த வாரம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை. வீட்டில் சந்தோஷம் இருக்கும். பூர்வீக சொத்து ஒரு பிரச்சனைக்கு வரும். முடிந்தவரை பயணம் மட்டும் செய்யவேண்டாம். தவிர்த்துக் கொள்ளுங்கள். அவசியமான பயணம் என்றால், பாதுகாப்பாக போயிட்டு வாங்க. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள்வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினை வரத்தான் செய்யும். கணவன் மனைவி யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எந்த இடத்திலும் அனாவசியமான பேச்சின் மூலம் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். நிதானமாகப் பேசுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் முடிந்தால் சிவன் கோவில்களுக்குச் சென்று வாருங்கள். இல்லையென்றால் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. குறிப்பாக திருமணமாகாதவர்களுக்கு, திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாம். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தேவையற்ற கடன் பிரச்சினைகளில் சிக்கி வந்தவர்களுக்கு ஒரு நல்ல சொல்யூஷன் கிடைக்கப்போகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் உங்களை எல்லோரும் யோக காரர்களாக பார்க்கப் போகிறார்கள். அழகா மாரப்போறீங்க, அழகா பேசுவீங்க, எல்லா வேலையையும் சுறுசுறுப்பா முடிக்கப் போறீங்க. உங்களை சுற்றி உள்ளவர்களிடம் பாராட்டு மழைதான் போங்க. இதோடு சேர்த்து தினந்தோறும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் பல நன்மைகளை அடையலாம்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான லாபம் தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய அசையும் அசையா சொத்துகளை விற்பதாக இருந்தால், இந்த வாரம் விற்க்கலாம். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு, நல்ல சம்பளத்தோடு வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கடன் தொல்லை, வட்டி தொல்லை இப்படி பல பிரச்சனைகள் குறைய தொடங்கும். படிப்படியாக குறையத் தொடங்கும். வீட்டில் மட்டும் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயங்களை முடிந்தவரை வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. சொந்தமாக வண்டி, மனை, வீடு, இவைகளை வாங்குவதாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதை இந்த வாரம் எடுத்து முடித்துக் கொள்ளுங்கள். எந்த வேலைகளை எப்படி செய்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வெளியில் சென்று வந்தால் கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பிரச்சினைகள் எதுவும் இல்லை. தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனசு ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக அமையப்போகின்றது. எந்த வேலையை தொடங்குவதற்கு முன்பாகவும் ஒரு நடுக்கம் உங்களிடத்தில் இதுநாள் வரை இருந்திருக்கும். இனி அந்த பயமே வேண்டாம். எந்த ஒரு வேலையையும் தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் இருக்கும். அப்படியே சிறு சிறு தோல்விகள் வந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடையக்கூடிய தெம்பு உங்களுக்கு வந்துவிட்டது. அலுவலகத்தில் தேவையில்லாத வம்புகளை வளர்க்க சில பேர் வரலாம். வம்பு சண்டைக்கு நீங்க போகவே போகாதீங்க. உங்களை தேடி சண்டை வந்தாலும் நீங்கள் ஓரமாக ஒதுங்கி கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த எல்லா வேலையும், இந்த வாரம் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட் கேஸ் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை, இப்படியாக எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. இந்த வாரம் முயற்சி செய்தால் நிச்சயம் சக்சஸ் தான். உங்களது வேலையில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரச்செய்யும். அட்ஜஸ் பண்ணி போங்க. வேலையை இப்போதைக்கு விடாதீங்க. கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம் தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக இந்த வாரம் குறைய ஆரம்பித்துவிடும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளுக்கும் இந்த வாரம் தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பேச்சில் மட்டும் எப்போதும் நிதானம் இருக்க வேண்டும். இது இந்த வாரத்திற்கு மட்டுமல்ல. உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். சிக்கனமாக செலவு செய்யுங்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுபிட்சம் அடையும் தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக தான் இருக்கப்போகின்றது. இருப்பினும் அவ்வப்போது தேவையற்ற மன சஞ்சலங்களும், உடல் உபாதைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை மனதை குழப்பம் இல்லாமல் அமைதியாக வைத்துக்கொள்ள பாருங்கள். உடல் உபாதைகளுக்கு உடனே மருத்துவரிடம் சென்று, தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த வாரம் எந்த ஒரு செயலையும் மனக் குழப்பத்தோடு செய்யவேண்டாம். நன்றாக தெளிவுபடுத்திக் கொண்டு, அதன் பின்பு நிதானத்தோடு செயல் படுத்திக் கொள்ளுங்கள். டென்ஷனை குறைத்துக் கொள்ள, தியானம் உங்களுக்கு அவசியம் தேவை. சிவன் கோவில்களுக்கு சென்று முடிந்தால் தியானம் செய்யலாம் அல்லது உங்களது வீட்டிலேயே அதிகாலை வேளையில் 10 நிமிடங்களாவது தியானம் செய்து பழகிக் கொள்ளுங்கள்.