இந்த வார ராசிபலன் 05-10-2020 முதல் 11-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான பலன் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. இருப்பினும் உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பொறுமையோடு செயல்பட்டால், பெரிய வெற்றியை காண முடியும். முன் கோபத்தோடு செய்யும் எந்த ஒரு விஷயமும், பிரச்சனையில் போய் முடிய அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சொந்த பந்தங்களை எடுத்தெறிந்து பேச வேண்டாம். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலக பணியில் சின்ன சின்ன சச்சரவுகள் வரும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களிடம் கோபமாகப் பேசக்கூடாது. இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பொறுமை மட்டும்தான் தேவை. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்டநாட்களாக தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த, ஒரு காரியத்தை செயல் படுத்த போகிறீர்கள். அதில் வெற்றியும் அடையும் போகிறீர்கள். நீங்கள் சுறுசுறுப்பாக செயல் படுவதை பார்த்து, உங்களை சுற்றியுள்ளவர்களை பொறாமைப்படுவார்கள். உங்களுக்கு நீங்களே திருஷ்டி சுத்தி போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. அந்த அளவிற்கு ஒரு எறும்பு போல உங்களது சுறுசுறுப்பு இருக்கப்போகின்றது‌. குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி சந்தோஷப்பட போகிறீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலக பணியில் நல்ல பெயரையும் வாங்க போகிறீர்கள். குலதெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைக் கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறப்போகின்றது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளலாம். புதிய முதலீட்டை செய்யலாம். வியாபாரத்திற்கு தேவையான பணத்தை வங்கியின் மூலம் கடனாக பெறலாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல பெயர் உங்களை தேடி வரும். பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வும் உண்டு. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடைபெறும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகள் இருக்கும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழில் சுமூகமாகதான் செல்லும். பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. யாரை நம்பியும் கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். முடிந்தவரை பயணங்களை தடுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் வெளியில் செல்லத்தான் வேண்டும் என்றால் பாதுகாப்பு கவசங்கள் அவசியம். உங்களது குடும்ப விவகாரங்களை அனாவசியமாக மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அலுவலக சம்பந்தப்பட்ட கோப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்காமல் நீங்களே வைத்து கொள்வது நல்லது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையோடு செயல்பட வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. அவசரப்பட்டு எந்த விஷயத்திலும், காலை வைத்து விடவேண்டாம். ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனையில் இருந்து தப்பிகொள்வீர்கள். உங்களது உடல் நலத்தையும், உங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தையும் அக்கறை எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த விஷயங்களை கூட, இந்த வாரம் எடுத்தால் அந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் அரசாங்கம் சம்மந்தப்பட்டது மட்டும். வீட்டில் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசிய செலவு தேடி வரும். தேவையில்லாத வீண் விரயங்களை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு தான் நல்லது. மற்றபடி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யுமிடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். முடிந்த வரை எல்லோரையும் அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எதிர்பாராத பயணங்கள் மூலம் சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகளின் மூலம் மன திருப்தி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கப் போகின்றது. அலுவலகத்தில் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு, உங்களுடைய மேலதிகாரிகள் உங்களை பாராட்டி, உங்களுக்கு சம்பள உயர்வு கொடுத்து, பதவி உயர்வு கொடுப்பதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு குழியையும் தோண்டி வைப்பார்கள். ஆகவே, சந்தோஷத்தை நினைத்து, ரொம்பவும் சந்தோஷப்பட்டு ஏதாவது ஒரு விஷயத்தில் ஏமாந்து போகவும் வாய்ப்பு உள்ளது. தூங்கும் போது கூட உங்களது மனகண் திறந்து இருக்க வேண்டும். நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று உங்களுடைய எதிரிகள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் உஷார், தினம் தோறும் அனுமன் வழிபாடு உற்சாகத்தை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி உங்களுடைய செவிகளில் விழும். உற்சாகத்தோடு செயல்பட்டு பெண்டிங்கிள் வைத்திருந்த வேலையெல்லாம் முடிக்கப் போகிறீர்கள். பாராட்டு மழைதான். குடும்பத்தில் மனைவிக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்து, சந்தோஷப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் கஷ்டமான சூழ்நிலையை கூட, சுலபமாக தீர்த்து வைத்து விடுவீர்கள். அட உங்களுக்குள் இத்தனை திறமையா என்று நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ள போகிறீர்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் தடைகளை தகர்த்தெரிந்து வெற்றியடைய போகிறீர்கள். எதைத் தொட்டாலும் பிரச்சனை, எதை தொட்டாலும் குழப்பம், எதைத் தொட்டாலும் வம்பு தும்பு, வந்துகொண்டேதான் இருக்கும். இருப்பினும் உங்களது விடா முயற்சியால் அந்த வேலையில் வெற்றி காணாமல் விடப்போவதில்லை, என்று உறுதியாக நிற்பீர்கள். இருப்பினும் பொறுமையோடு எல்லா விஷயத்தையும் கையாளுங்கள். உங்களுடைய வார்த்தையில் கவனம் தேவை. பிரச்சனைகள் கைகலப்பு வரை போவதற்கும் வாய்ப்பு உள்ளது. மன தைரியத்தை மட்டும் விடாமல் துணிவோடு செயல்படப் போகிறீர்கள். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் மன அமைதியைத் தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். வருமானம் இருக்காது.  அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். கடன் தொகையையும் குறிப்பிட்ட செலவுக்கு பயன்படுத்த முடியாது. வீண் விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். இப்படியாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு பல வழிகளில் வந்து தொந்தரவு கொடுக்கும். இருப்பினும் அதை எப்படியாவது உங்களுடைய புத்திசாலித்தனத்தால் சமாளித்து விடுவீர்கள். தேவையற்ற மன குழப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்துகொண்டால் பிரச்சனை இருக்காது. இந்த மாதம் பொறுமையோடு இருங்கள். அடுத்தவாரம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். தினம் தோறும் மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்னச்சின்ன மனக்கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தேவையில்லாமல் உறவினர்களின் மூலம் சில பல சிக்கல்கள் உங்களை வந்து தொந்தரவு செய்ய போகின்றது. வீண் விரயங்கள் ஏற்படும். ஏற்கனவே உங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும். மேலும் மேலும் கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. உங்கள் செலவை குறைத்துக் கொள்ள வேண்டிய திறமை உங்களிடம் தான் உள்ளது. வண்டி வாகனங்களில் செல்லும்போது உஷாராக செல்லவும். ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டவும். சானிடைசர் இல்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு, இந்த வாரம் அதிகப்படியான சந்தோஷத்தை கொடுக்க போகின்றது. வீட்டில் விசேஷங்களின் மூலம், உங்களுக்கு மனநிறைவு ஏற்படும். உங்களுடைய மனைவி உங்களை அனுசரித்து செல்வார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உங்களது பிள்ளைகளால் மன நிறைவு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு தைரியமாக சுற்றி வருவீர்கள். அந்த அளவிற்கு மன தைரியம் அதிகரிக்க போகின்றது. தினம்தோறும் முருகா முருகா என்ற பெயரை உச்சரித்துக் கொண்டே இருங்கள் வெற்றி உங்களுக்கு மட்டும்தான்.