இந்த வார ராசிபலன் 07-09-2020_13-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் மனக்குழப்பம் நீங்கி, எல்லா வேலைகளிலும் தெளிவாக செயல்படப் போகிறீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் அமோகமாக வெற்றி உங்களை தேடி வரும். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். உங்கள் மனைவிக்கு ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள். ஒருவருக்கு தொடர்ந்து வெற்றிகள் வந்தாலே, தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்க தானே செய்யும். இருப்பினும் பொறுமையை கையாளுங்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மேலதிகாரிகள் உங்களை பாராட்ட போகிறார்கள். அந்த அளவிற்கு உங்களின் உழைப்பும், ஈடுபாடும் அதிகரிக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். ஆனால், உங்களுடைய வருமானத்திற்கு அதிகமாக, வீண் விரயச் செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது பணத்தை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை. திருடு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டிலேயே தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. முடிந்தவரை அலுவலகப் பணியை, கொஞ்சம் அதிகப்படியான அக்கறை எடுத்து செய்ய வேண்டும். நீங்கள் செய்யாத தவறுக்கு கூட, மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். முடிந்தவரை சொந்த தொழிலில் பங்குதாரர்கள் இருந்தால், அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். மற்றபடி உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்துவிடும். தினம்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு பேச்சாற்றல் அதிகரிக்கும். உங்களது செயல்திறனும், திறமையும், சுறுசுறுப்பும் சேர்ந்து உங்களை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லப் போகின்றது என்று கூட சொல்லலாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக தொடங்கும். கண்டகச் சனி உங்களுக்கு இருப்பதால், எல்லா விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வெற்றிகள் கிடைக்கின்றது என்பதால், எக்காரணத்தைக் கொண்டும் பிரச்சினைகளை, அலட்சியமாக விட்டு விடக்கூடாது. மற்றபடி எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். வாய்ஜால வித்தையில் கலக்க போகிறீர்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகவே இருந்தாலும், நீங்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும், யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. மற்றபடி வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதியான வாழ்க்கை இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் எப்போதும் போலவே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு உங்களது பணிகளை செய்ய தொடங்குங்கள்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது, அவசர அவசரமாக செய்து முடித்து விடாதீர்கள் என்றாலும், பின்விளைவுகள் பெரியதாக இருக்கும். அதில் பிரச்சனை வந்தாலும் அனுபவிக்கப் போவது நீங்கதான் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக யாரிடமும் பேசாதீர்கள். வீண் சண்டை வந்தாலும், நீங்கள் மௌனமாய் போய் விடுங்கள். மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பதை நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். மற்றபடி சொந்தத் தொழிலும், அலுவலகப் பணியும் எப்போதும்போல செல்லும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் சுபகாரிய பேச்சுக்களைத் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. அனாவசியமான வார்த்தைகளை யாரிடமும் பேச வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை புதியதாக எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடவேண்டாம். மற்றபடி உங்களுடைய அலுவலகத்தில் நன்றாக வேலை செய்து, நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். சொந்தத் தொழிலில் கூடுமானவரை நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை விட்டுக்கொடுத்து சென்றால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக தீராமல் இருந்து வந்த கடன் பிரச்சனை, அலுவலக பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை, எல்லாமே தீரப் போகிறது. உங்களிடம் அலுவலகத்தில் இதுநாள்வரை பிரச்சனை செய்து வந்திருந்தவர்கள் கூட, உங்களுடன் நட்பு உறவாடுவார்கள். சொந்த தொழில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கொடுக்க போகின்றது. உங்களுடைய நிதி நிலைமை, வேலை, சொந்த தொழில், இவைகளின் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை மனைவியை அனுசரித்து செல்ல பாருங்கள். நீங்கள் மனைவியாக இருந்தால் கணவரை அனுசரித்து செல்லுங்கள். குடும்ப பிரச்சனைக்கு மூன்றாவது நபரை, பஞ்சாயத்துக்கு கூப்பிடாதீர்கள். தினம் தோறும் துர்க்கை அம்மனை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய வேலையை மட்டும் பார்த்தால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அனாவசியமாக அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட்டு, அவர்களுக்கு ஏதேனும் வாக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால், நிச்சயம் அதை உங்களால் காப்பாற்ற முடியாமல் தலை குனிந்து நிற்க வேண்டிய சந்தர்ப்ப, சூழ்நிலை ஏற்பட்டுவிடும். முடிந்தவரை யாருக்கும் வாக்கு கொடுக்கவே கொடுக்காதீங்க! நிதானமாகப் பேசுங்கள். சிந்தித்துப் பேசுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். வீண் விரயம் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் ஹனுமனை நினைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே செல்லுங்கள். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிக் கொண்டே இருங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
இந்த வாரம் நீங்களே எதிர்பாராத அதிர்ஷ்ட செய்து உங்கள் செவிகளில் வந்து விழப் போகிறது. எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் மனசுக்கு பிடித்த ஒரு விஷயம் சந்தோசமாக கட்டாயம் ஒன்று நடைபெறும். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான சீட்டு கட்டாயம் கிடைத்துவிடும். இந்த வாரம் உங்களுக்கு வெற்றி மட்டும்தான். சந்தோஷமாக அனுபவித்துக் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டை மறந்து விடாதீர்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு அவ்வபோது தேவையில்லாத மனக் குழப்பம் இந்த வாரம் கட்டாயம் இருக்கும். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களுடைய வேலையில் ஈடுபாட்டோடு இருந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. தினந்தோறும் 10 நிமிடம் கண்களை மூடி மனதை அமைதியாக வைத்து தியானம் செய்துவிட்டு, அதன் பின்பு உங்களது வேலையை தொடங்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் இந்த வாரம் தொடங்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை கவனமா பார்த்துகோங்க. டைம்கு சாப்பிடுங்க. நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் நிச்சயம் உண்டு. ஸ்ரீராம ஜெயத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகமான சந்தோஷத்தை தரப்போகிறது. நீங்கள் எதை சொன்னாலும் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சரிதான், சரிதான் என்று தலையாட்டிக் கொள்வார்கள். உங்களது வாக்குவன்மை அதிகரிக்கும். வசீகரம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆற்றல் அதிகரிக்கும். இப்படியாக முன்னேற்றம் மட்டும் தான். தலைக்கனத்தை மட்டும் அதிகரித்துக் கொள்ளாதீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். சொல்லப்போனால் சில பேருக்கு, கொஞ்சம் அதிகமாகவே வருமானம் வரும். சேமித்து வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் விரைவாக முன்னேறி விடுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.