இந்த வார ராசிபலன் 14-09-2020 முதல் 20-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். தேவையில்லாத மனக் குழப்பத்தினால், கவலைகள் வந்து போகத்தான் செய்யும். முடிந்தவரை செலவுகளை குறைவாக செய்யுங்கள். வருமானத்தை சேமிக்க பாருங்கள். உங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அனாவசியமான பேச்சை குறைத்துக் கொண்டு, உங்களுடைய வேலையில், அதிக முயற்சி, அதிக கவனம் எடுத்து செய்யும் பட்சத்தில் வெற்றி அடைய முடியும். அலுவலக பணியாக இருந்தாலும், சொந்தத் தொழிலாக இருந்தாலும், மற்றவரை அனுசரித்து சென்றால் நன்மை உண்டு. குடும்பத்தோடு குலதெய்வ வழிபாட்டை செய்து வாருங்கள்.

ரிஷபம்:
Taurus zodiac sign
இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள், அனைவரிடமிருந்தும், சற்று விலகி இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்தவர்கள், உங்கள் காலை வாரி விட தயாராக இருப்பார்கள். யாரையும் நம்பி உங்களுடைய குடும்ப விஷயத்தையோ, அலுவலக ரகசியத்தை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் கூட, உங்களுக்கு பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுங்கள். மாஸ்க் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சூப்பரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி, தெளிவாக செயல்படப் போகிறீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். மன தைரியத்தோடு செயல்பட்டு எல்லா காரியத்திலும் வெற்றி அடையப் போகிறீர்கள். வரும் வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டு. எந்த வேலையாக இருந்தாலும் துணிந்து செய்யுங்கள். பதவி உயர்வு இடமாற்றம் எதுவாக இருந்தாலும் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்கு கட்டாயம் நன்மை தான் வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட போகிறீர்கள். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆனால், உங்களுடைய பொருட்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலக கோப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அவசரப்பட்டு யாரிடமும் வாய் விட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அனுமன் வழிபாடு மன அமைதி தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய மனைவிக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். வருமானம் அதிகரிக்க போகின்றது. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறந்து விடும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல செய்தி வந்து சேரும். முடிந்தவரை கடன் வாங்குவதை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
இதுநாள் வரை உங்களை திட்டிக் கொண்டு இருந்தவர்கள் கூட, இந்த வாரம் அவர்களே வந்து, பாராட்ட செய்யப்போகிறார்கள். உங்களின் புகழ் ஊர் எங்கும் பரவ போகின்றது. வருமானம் அதிகமாக தான் இருக்கும். வீண்விரயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை சிக்கனமாக செலவு செய்வது நல்லது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடியும். அலுவலகத்தில் மேனேஜர் தானாக வந்து உங்களை பாராட்ட போகின்றார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் பிரச்சினைகள் இருக்காது. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாராகத்தான் இருக்கப்போகின்றது. வீட்டில் தேவையற்ற சின்ன சின்ன சண்டைகள் வந்துபோகும். கணவன் மனைவி இருவரில், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விடுங்கள். சொந்த தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயரை வாங்குவீர்கள். பணவரவு எவ்வளவு தான் அதிகமாக வந்தாலும், சேமிப்பு மட்டும் நிற்கவே நிற்காது. தேவையில்லாத செலவு வந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பிரச்சனையில் தலையிட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு இருந்தால் பிரச்சனை இல்லை. மனம் அமைதியாக இருக்க தினந்தோறும் 10 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய பழகுங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான சந்தோஷமும் கிடைக்கும். அதற்கு இணையான பிரச்சினைகளும் வரும். எல்லோரையும் அனுசரித்து தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல், அனாவசியமான வார்த்தைகளை விடாமல், கவனத்துடன் செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்து, உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கி கொள்ளாதீர்கள். முடிந்தவரை உங்களுடைய குடும்ப விஷயத்தை உங்கள் நெருங்கிய சொந்தகாரங்க கிட்டகூட சொல்லாதீங்க. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால், உங்களுக்கு வரவேண்டிய பெயரை அடுத்தவர்கள் தட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், அதை உங்களால் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறு முன்பின் முரணான வாரமாக தான் இந்த வாரம் போகப் போகின்றது. ஆனாலும் சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த சுப காரிய தடைகள் அனைத்தும் இந்த வாரம் நீங்கிவிடும். உங்களுடைய எல்லா வகையான முயற்சிகளுக்கும் நிச்சயம் வெற்றி உண்டு. இனி மன பயம் இல்லாமல், உங்களது புதிய வேலைகளை தொடங்கலாம். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். அலுவலகப் பணியில் உங்களது யோசனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டாயம் நல்ல பெயர் உண்டு. முடிந்தவரை எதை யாரிடம் பேசினாலும் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேசுங்கள். பணம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாகத்தான் இருக்கப்போகின்றது. முடிந்தவரை உங்களது வேலையில் அனுசரித்துச் செல்ல பாருங்கள். இந்த வேலையை விட்டுவிட்டால், இன்றைய சூழ்நிலையில் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும். பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சேனிடைசர், மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். சொத்துக்கள் வாங்கலாம். சொத்துக்களை விற்கலாம். இந்த வாரம் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் தொடங்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். பண பரிமாற்றம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நீங்கள் யாருக்காவது பணம் கொடுப்பதாக இருந்தாலும் அல்லது கடன் வாங்குவதாக இருந்தாலும் அதற்கான பாத்திரங்களை கவனமாக படித்து கையெழுத்து போடுங்கள். உங்களது பொருட்கள் தொலைந்து போகும். அல்லது நீங்கள் யாரிடமாவது ஏமாந்து போகும் அதிக வாய்ப்பு உள்ளது. எல்லா விஷயங்களிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனை இல்லாமல் நீங்களே அவசர அவசரமாக முடிவெடுத்து பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை காப்பது அவசியம் தேவை. தினந்தோறும் கண்களை மூடி உங்களது மனதை அமைதிப்படுத்தி, கோபத்தை குறைக்க தியானம் செய்வது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய தெம்பு பிறக்கப் போகின்றது. எதையோ சாதித்தது போல மனம் சந்தோசப்படும். அந்த உற்சாகத்தில் சூப்பராக வேலை செய்து, நல்ல பெயர் வாங்க போகிறீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டிற்கு, குழந்தைகளுக்கு, மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக நாட்களை கழிக்க போகிறீர்கள். ஆக மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு அமோகமான வாரம் தான். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க கூட வாய்ப்பு உள்ளது. குல தெய்வத்தை மறந்து விடாதீர்கள்.