இந்த வார ராசி பலன் : செப்டம்பர் 18 – 24 வரை

Indha vara rasi palan

மேஷம்: 

mesham

மேஷ ராசி அன்பர்களுக்கு போதுமான அளவில் பொருளாதார வசதி இருக்கும். தற்போதுள்ள கிரகநிலைகளின்படி வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், தாயின் உடல் நலன் சற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையினால் சரியாகும். பழைய கடன்களை கொடுத்து முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். வாரப் பிற்பகுதியில் பேச்சில் நிதானம் அவசியம்.

புதிய வேலைக்கு இந்த வாரம் முயற்சிக்கலாம். அதனால் அனுகூலம் ஏற்படும். ஏற்கெனவே வேலை பார்த்து வரும் இடத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களிடம் தங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். மற்றவர்கள் உங்களுடைய படைப்புகளைப் பாராட்டுவார்கள்.

மாணவ மாணவியர்களுக்கு  நினைவாற்றலும், பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

- Advertisement -

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சில தேவையற்ற பிரச்னைகளை எதிர்கொள்ளநேரும் என்பதால் பொறுமை மிக அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,6
முக்கியக் குறிப்பு: 18,19,24 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்க்கவும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

ரிஷபம்:

rishabam

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருப்திகரமான பணவரவு இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாரப் பிற்பகுதியில் தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வீடு மாறவேண்டிய அவசியம் உண்டாகும். கோர்ட்டில் ஏதேனும் வழக்குகள் இருந்தால், அதில் உங்களுக்கு சாதகமான திருப்பம் ஏற்படும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கக்கூடும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியின் காரணமாகவும் சிலர் வெளிநாடு செல்ல நேரிடும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும் என்றாலும் அதனால் கிடைக்கும் ஆதாயம் உங்களை உற்சாகப் படுத்தும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவார்கள். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மற்ற கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர் உற்சாகமாக பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் பாராட்டும் பரிசும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு நிம்மதியான வாரம். கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்க்கும் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  18,19,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,9
முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: உமா மகேஸ்வரர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 

 

மிதுனம்:

midhunam

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார பிரச்னைகள் எதுவும் இருக்காது. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் இப்போது அவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு பேசுவார்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்கவேண்டாம். உடல்நலனில் சற்று கவனம் அவசியம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாரப் பிற்பகுதியில் சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது அவசியம். கோர்ட் வழக்குகளில் இப்போதைக்கு இழுபறிநிலையே காணப்படும்.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்திருந்தால் அதற்கான முயற்சியை வாரத்தின் முற்பகுதியில் மேற்கொள்வது நல்லது. வாரப் பின்பகுதியில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை மிக அவசியம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைவிட்டுப் போகக்கூடும். ஆனாலும் அதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பு எதுவும் இருக்காது. பணியின் காரணமாக அலைச்சல் சற்று அதிகரிக்கக்கூடும்.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் முழு கவனத்துடன் படிக்கவேண்டியது மிகவும் அவசியம். படிப்பில் ஈடுபடமுடியாதபடி மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும்.எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தரும். சில சலுகைகளும் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7
முக்கியக் குறிப்பு: 18-ம் தேதி புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். 24-ம் தேதி பயணம் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனோ

கடகம்: 

kadagam

கடக ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். சிலர் கடன் வாங்கவும் நேரும். குடும்பத்தில் அமைதியற்ற போக்கு காணப்படும். மற்றவர்களுடன் கோபப்பட்டுப் பேசுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு வீடு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.  உடல்நலனில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். கோர்ட் வழக்குகள் எதுவும் இருந்தால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

அலுவலகத்தில் ஜாக்கிரதையால் சில தவறுகள் ஏற்படவும் அதனால் நிர்வாகத்தினரின் கோபத்துக்கு ஆளாகவும் நேரும் என்பதால், உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். வாரப் பிற்பகுதியில் சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் முக்கியமான புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும் இந்த வாரம் தொடங்கலாம். பங்குதாரர்களுடன் ஏதும் பிரச்னை இருந்தால் அது இந்த வாரம் சரியாகிவிடும். விற்பனை கூடுதலாகி லாபமும் அதிகம் கிடைக்கும்.

கலைத்துறையினர் தங்கள் பணியின்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். புது முயற்சிகளில் கவனமாகச் செயல்படவும். உடல்நலனில் சற்று கவனம் அவசியம்.

மாணவ மாணவியர்  தங்கள் படிப்பில் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். சக நண்பர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும். போட்டி பந்தயங்களில் ஈடுபடும்போது பொறுமையும் விவேகமும் அவசியம்.

குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு வார முற்பகுதியில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சிற்சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5
முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.

சிம்மம்:

simmam

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வாரத் தொடக்கத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராகவே இருந்தாலும் வாரப் பிற்பகுதியில் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும் என்பதால் செலவுகளைச் சுலபமாகச் சமாளித்துவிட முடியும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான வாரம். வாரப் பிற்பகுதியில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள், குலதெய்வ வழிபாடுகள் நடைபெறக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். அவ்வப்போது உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படுவதால் மகிழ்ச்சிக்குக் குறை இருக்காது.

வியாபாரம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை துணிந்து எடுக்கலாம். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாரம்.

கலைஞர்களுக்கு மிகவும் அனுகூலமான வாரம் இது. தொழில் நிமித்தமாகச் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

மாணவ மாணவியர் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விண்ணப்பித்து இருந்தால் நல்ல பதில் கிடைக்கும். மேற்கல்விக்கான உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் திருப்திகரமான வாரம் இது. பொருளாதார நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான வாரம் இது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,9
முக்கியக் குறிப்பு: 18,19,23,24 தேதிகளில் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு – அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

கன்னி:

kanni

கன்னி ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வார முற்பகுதியில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்க்காத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் சிலரால் குடும்பத்தில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரத்தில் எடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருந்துகொள்ளவும்.

வேலையில் இருப்பவர்கள் இப்போதைக்கு வேறு வேலைக்கு முயற்சிக்கவேண்டாம். இருக்கும் வேலையிலேயே கவனத்துடன் பணியாற்றவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். சக பணியாளர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது.

வியாபாரத்தில் உழைப்பு அதிகம் இருக்கும் என்பதால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக இருந்தால் வாரப் பிற்பகுதியில் மாற்றவும்.

கலைத்துறை அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். உடல்நலனும் சற்று பாதிக்கப்படும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.

மாணவ மாணவியருக்கு வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். வெளியில் தங்கி படித்து வரும் மாணவ மாணவியர்  உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். மேல்படிப்புக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,6
முக்கியக் குறிப்பு: 18,19,23 தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27  முறை தினமும் பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

துலாம்: 

thulam

துலாம் ராசி அன்பர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார முற்பகுதியில் தம்பதியரிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. வாரப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவுகளை நீங்கள் இந்த வாரத்தில் எடுக்கலாம்.

அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொண்டு அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம்.

வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் அதனால் பெரிதும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும் என்பதால் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிறு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். தங்களுடைய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் மட்டுமே ஓரளவு வெற்றி பெற முடியும்.

மாணவ மாணவியர் தங்கள் சக மாணவ மாணவியரிடம் பொறுமையாகப் பேசுவது அவசியம்.. மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். மனதில் அடிக்கடி சஞ்சலம் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உடல் நலன் சற்று பாதிக்கப்படும். வாரப் பிற்பகுதி ஓரளவு நிம்மதி தருவதாக இருக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு சாதகமான வாரம் இது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5
முக்கியக் குறிப்பு: 18,19,24 தேதிகளில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வார முற்பகுதியில் மனதில் வீண் சஞ்சலம் ஏற்பட்டு நிம்மதியைக் குறைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. கோர்ட்டில் வழக்குகள் எதுவும் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. வெளி இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அவர்களிடம் தேவையற்ற விஷயங்கள் எதையும் பேசவேண்டாம். வேலைச் சுமை அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக உடலில் சோர்வு உண்டாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

மாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு மனதுக்கு உற்சாகம் தரும்.

குடும்பத்தை  நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அளவாகப் பழகவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  18,19,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,9
முக்கியக் குறிப்பு: இந்த வாரத்தில் குடும்பம் தொடர்பான முக்கிய விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்:  சிவபெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

தனுசு: 

dhanusu

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவரால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். பண வசதி திருப்திகரமாக இருந்தாலும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட சாத்தியம் இருப்பதால் பொறுமை மிக அவசியம். எந்த விஷயமாக இருந்தாலும் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்காமல் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர சாத்தியம் உள்ளது.எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தடை தாமதம் ஆகலாம்.

வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். புதிய வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.

வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மட்டுமே போட்டிகளைச் சமாளிக்கமுடியும். வார முற்பகுதியில் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் சாத்தியம் உள்ளது.

கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் எதுவும் இந்த வாரம் கிடைக்கும் என்பதற்கு  உத்தரவாதம் இல்லை. ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையாவது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மாணவ மாணவியருக்கு முன்னேற்றமான வாரம் இது. படிப்பில் அதிக கவனம் செலுத்தி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். நண்பர்கள் வகையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாகப் பழகவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  18,19,20,21,22
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,6
முக்கியக் குறிப்பு: 23,24 தேதிகளில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் – நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் – கந்த
சஷ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

மகரம்: 

magaram

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சியில் இறங்கலாம். நல்ல வரன் அமையும்.வாரப் பிற்பகுதியில் கணவன் – மனைவியிடையே வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.கோர்ட்டில் வழக்குகள் எதுவும் இருந்தால் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகக் கிடைக்கும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின்போது மட்டும் சற்று கவனமாக இருக்கவும். பங்குதாரர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவர்.

கலைத்துறையினருக்கு சிறு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் அமையும். வார பிற்பகுதியை விட வார முற்பகுதியில் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நல்லமுறையில்படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியர்  மற்றவர்களிடம் கவனமாகப் பழகவும்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுமை மிக அவசியம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சாதகமான வாரம் இது. பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  20,21,22
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6,9
முக்கியக் குறிப்பு: 18,19, 23,24 தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன் கொடுப்பது வாங்குவது இரண்டையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

கும்பம்: 

kumbam

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. சகோதரர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். வார முற்பகுதியில் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இப்போது உங்களுக்குக் கிடைக்கும். தற்போது இருக்கும் வீட்டை சிலர் மாற்றவேண்டி இருக்கும். மனக் கசப்பால் பிரிந்து சென்ற உறவுகள் உங்களைப் புரிந்துகொண்டு திரும்ப வந்து பேசுவார்கள்.

தற்போது பார்த்து வரும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாக இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் லாபம் சற்று கூடக் குறையத்தான் இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வாரப் பிற்பகுதியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4
முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

மீனம்: 

meenam

மீன ராசி அன்பர்களுக்கு தேவையற்ற சஞ்சலங்கள் மனதை அலைக்கழிக்கக்கூடும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஏற்கெனவே நடந்த விஷயங்களை நினைத்து நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளவேண்டாம். வாரப் பிற்பகுதியில் வருமானம் நல்லபடி இருக்கும். ஆனாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பாகவும் இணக்கமாகவும் பழகவும். புதிய கடன் வாங்கி பழைய கடனை கொடுப்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். ஏற்கெனவே வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களும் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடி இருக்கும். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பங்குதாரர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தற்போது ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். தீவிர முயற்சியினால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மாணவ மாணவியருக்கு நினைவாற்றலும் படிப்பில் ஆர்வமும் அதிகரிக்கும்.  பாடங்களை நன்றாக கவனித்து படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. வார முற்பகுதியில் மனதில் சிறு சலனங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  18,19,20,21
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,6
முக்கியக் குறிப்பு: 22,23,24 தேதிகளில் புது முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

இந்த வார ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி