இந்த வார ராசிபலன் 28-09-2010 முதல் 04-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
முடிந்தவரை மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். யார் எதை சொன்னாலும், தலையை மட்டும் ஆட்டி கொள்ளுங்கள். அனாவசியமாக பதில் கூறி பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தேவைக்கு அதிகமாகவே பணம் கைக்கு வந்துசேரும். சொந்தத் தொழில், முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியில், வேண்டுமென்றே சண்டைக்காக சில பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் வாயை கொடுத்து சிக்கிக் கொள்ளாதீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நல்ல முடிவுக்கு வரும். இந்த வாரம் முழுவதும் வாயைத் திறக்காமல் இருந்தீர்கள் என்றால் தப்பித்தீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன உறுதி கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கூட, பொறுமையோடு செயல்படுவது நல்லது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் போகிறது. அலுவலகப் பணியில் இதுநாள்வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும். சில பேருக்கு இடமாற்றம் உண்டு. பயணங்களின் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். பெருமாள் வழிபாடு மன உளைச்சலைக் குறைக்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. காசு சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்து விட்டு, பின்பு கஷ்டப்படுவதில் பிரயோஜனமில்லை. வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப சண்டைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வரும். அலுவலகத்தில் நீங்கள் செய்த வேலைக்கு கூட, அடுத்தவர்கள் நல்ல பெயரை தட்டிக் கொண்டு செல்வார்கள். கோபப்படக் கூடாது. பொறுமை காப்பது அவசியம் தேவை. அடுத்த வாரம் நிலமை நல்லபடியாக மாறும். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மையை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு வார தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், வார இறுதியில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நீங்கள் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று பிளான் செய்து வைத்துள்ளீர்களோ, அவை அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களுடைய உறவினர்கள் வீட்டுக்கு, நீங்கள் சென்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கும் முன்னேற்றம் உண்டு. சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் கூட நல்ல முடிவுக்கு வந்து, மன அமைதியை தரும். தினம் தோறும் சிவன் வழிபாடு நல்லது.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இந்த வாரத்தின் இறுதியில் எல்லா விசயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தத் தொழிலாக இருந்தால், முதலீடு செய்வதில் கவனம் தேவை. அலுவலக பணியாக இருந்தால் உங்களது கோப்புகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். மற்றபடி எல்லா விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். கஷ்டம் வருவது போல இருந்தாலும், இறுதியில் வெற்றி அடைய போவது நீங்கள் மட்டும்தான். எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையோடு செயல்படுங்கள். மன உறுதியோடு செயல்படுங்கள். அனைத்தும் நல்லபடியாக முடியும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்களது வேலைகளை எல்லாம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். வீட்டில் சுப செலவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். துருதுருவென்று உங்களது வேலைகளை செய்து, அடுத்தவர்களை கவரும் வண்ணம், உங்களது நடவடிக்கை இருக்கும். அப்பப்போ உடல் நலனை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலைக்கு சாப்பிடவேண்டும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அவசியம் வெளியே சென்றே ஆகவேண்டும் என்றால், பாதுகாப்பு கவசங்கள் தேவை. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல செய்திகள் உங்கள் செவிகளை வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். நல்லதே நடக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். நிதி நிலைமை உயரும். அலுவலகப் பணியில் மேலதிகாரிகள் பாராட்டு மழையை பொழிய போகிறார்கள். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த நல்ல அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் குதுகலமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குலதெய்வத்துக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அருமையான வாரமாக தான் அமையப்போகின்றது. அரசு சம்பந்தப்பட்ட பணிகள் ஏதாவது நிலுவையில் இருந்தால், இந்த வாரம் தொடங்குங்கள். உங்களது அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் கட்டாயம் வெற்றியடையும். அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும் என்றாலும், தாராளமாக இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். இதுநாள் வரை இருந்து வந்த சின்ன பிரச்சனைகளாக இருந்தாலும், பெரிய பிரச்சினைகளாக இருந்தாலும் நல்ல முடிவுக்கு வந்துவிடும். மன அமைதி இருக்கும். குடும்பத்தில் இழந்த சந்தோஷங்கள் மீண்டும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைக்க போகிறது. பூர்வீக சொத்தும் உங்களுக்கு சாதகமாக வரும். உங்களோட மவுஸ் அதிகமாகும்போது என்று கூட சொல்லலாம். வரக்கூடிய சின்ன சின்ன தடைகளை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் இந்த வாரம் கட்டாயம் வெற்றியைத் தேடித்தரும். சோம்பேறித்தனத்தை மட்டும் சற்று தள்ளி வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்படுவதன் மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ள வேலைகளை முடிக்க போகிறீர்கள். இவ்வளவு வேலைகளை செய்ய வேண்டுமா! என்று மட்டும் அலுத்துப்போய், அமர்ந்து விடாதீர்கள். தேவையில்லாமல் அடுத்தவர்களிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். உங்களது வேலைகளை முடித்துவிட்டு, அதன் பின்பு ஓய்வு எடிக்க வேண்டும். உங்களுடைய கடின உழைப்பு தான் இந்த வாரம் உங்களை காப்பாற்ற போகின்றது. உடல் ஆரோக்கியத்தையும் சற்று ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது குடும்ப உறுப்பினர்களையும் அக்கறையோடு கவனித்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் வாய் வார்த்தைகளை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும். தேவை இல்லாமல் அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அடி உதை வாங்கும் அளவிற்கு கூட பிரச்சனைகள் பெரிதாகிவிடும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். கடன் வாங்காதீர்கள். மூன்றாவது மனுஷனுடைய விவகாரங்களில் தலையிடவே தலையிடாதீர்கள். அனாவசியமாக பஞ்சாயத்து செய்யவதற்கு குறுக்கே போக வேண்டாம். மற்றபடி எல்லா விஷயங்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் தப்பித்தீர்கள். தினம் தோறும் சனிபகவான் வழிபாடு உங்களைக் காப்பாற்றும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் சரியாவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து வரும். ஆரோக்கியம் மேம்படும். முடிந்த வரை கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் எதிலும் வாக்கு கொடுத்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுமை உங்களுக்கு அவசியம் தேவை. வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. தேவையற்ற மன குழப்பத்தை தள்ளிவைத்துவிட்டு இறைவனின் மீது பாரத்தைப் போட்டு உங்களது வேலையை செய்யத் தொடங்குங்கள் எல்லாம் நன்மையே நடக்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ஒரு வேலையையும் முழுசாக செய்து முடிக்க முடியாது. இருப்பினும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து, முடித்து விடுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு சில சங்கடங்கள் இருந்தாலும், இறுதியில் உங்களுக்கு நன்மை மட்டுமே நடக்கும். இறைவனை வேண்டிக் கொண்டு உங்களது வேலைகளை செய்து கொண்டே இருங்கள். மன உறுதியும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு கைகொடுக்கும் முருகன் வழிபாடு நன்மை தரும்.