உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

ஏப்ரல் 23 முதல் 29ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasi
அதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 26, 27, 28
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 27, 28, 29
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்: 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே.

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 28, 29
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24, 25, 26, 29
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மிதுனம்:
Mithunam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 25, 26, 27
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 26, 27, 28
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24, 25, 26, 28, 29
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 25, 26, 27, 29

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 26, 27, 28
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 27, 28, 29
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்:5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
Kanni Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 24, 25, 28, 29 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 24, 25, 26, 29 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 25, 26, 27
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 24, 26, 27, 28
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்:2, 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்: 

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
Virichigam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24, 25, 26, 28, 29
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 25, 26, 27, 29

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்: 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 26, 27, 28
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 27, 28, 29
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 24, 25, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மகரம்:
Magaram rasiஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 23, 24, 25, 28, 29
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24, 25, 26, 29
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்: 

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 25, 26, 27
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 26, 27, 28
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்: 
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

மீனம்:
Meenam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23, 24, 25, 27, 28, 29
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 24, 25, 26, 28, 29 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 25, 26, 27, 29

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

ஆன்மிக கதைகள், வார ராசி பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.