உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

பிப்ரவரி 20 முதல் 25ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24, 25
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பிப்ரவரி மாத பலன்கள்

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 24, 25
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 25
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 24, 25
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்:

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24, 25
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

கூற வேண்டிய மந்திரம்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 24, 25 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 22, 25 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பிப்ரவரி மாத பலன்கள்

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 21, 22, 25
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 22, 23, 24 
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

கூற வேண்டிய மந்திரம்: 

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 24, 25
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 25

அதிர்ஷ்ட எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24, 25
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்.

கூற வேண்டிய மந்திரம்: 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 24, 25
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்: 

முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்த வர்க்கெலாம்
நன்னெறியாவது நமசிவாயவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 25
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24 
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

கூற வேண்டிய மந்திரம்: 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25 
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 22, 24, 25 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

கூற வேண்டிய மந்திரம்:

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

வார ராசி பலன், ஆன்மிக கதைகள், மந்திரங்கள், மாத ராசி பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.