மார்ச் 27 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.
மேஷம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 29, 30, 31
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 30, 31, 1
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராமபிரான்
கூற வேண்டிய மந்திரம்:
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தந்துல்யம் ராமநாம வராணனே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்:
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்
மிதுனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 29, 30, 31
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 30, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கூற வேண்டிய மந்திரம்:
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாமம்
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கடகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 30, 31, 1
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 31, 1
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30, 1
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு –29, 30, 31
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 30, 31, 1
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கூற வேண்டிய மந்திரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராஜராஜேஸ்வரி அம்மன்
கூற வேண்டிய மந்திரம்:
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 29, 30, 31
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 30, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்:2, 4
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
கூற வேண்டிய மந்திரம்:
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்
விருச்சிகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 30, 31, 1
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 31, 1
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30, 1
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
தனுசு:
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 29, 30, 31
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 30, 31, 1
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மகரம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 31, 1
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீபுவனேஸ்வரி அம்மன்
கூற வேண்டிய மந்திரம்:
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்றும் ஓர் தெய்வம் வந்திப்பதே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 29, 30, 31
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 30, 31, 1
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு
கூற வேண்டிய மந்திரம்:
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்
மீனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 30, 31, 1
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 31, 1
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 29, 30, 1
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: மகா அம்பிகை
கூற வேண்டிய மந்திரம்:
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
ஆன்மிக கதைகள், வார ராசி பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.