நீங்கள் புதியதாக வாங்கிய பொருட்கள் கண் திருஷ்டியால் சேதாரம் அடைகிறதா? அடுத்தவர்களின் கண் பார்வையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த 1 இலை போதும்.

Kan thirusti

எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உள்ளவர்களாக இருந்தாலும், அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் தான் குடி இருக்கின்றாள் என்றாலும், கஷ்டத்தைக் கண்டு நீங்கள் பயப்படாதவர்களாக இருந்தாலும், அடுத்தவர்களின் கண் பார்வைக்கும், வயிற்றெரிச்சலுக்கும்,  கண் திருஷ்டிக்கும் கண்டிப்பாக பயந்துதான் ஆக வேண்டும். கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி இருப்பீர்கள். அந்த வீட்டிற்கு குடி போன சில நாட்களுக்குள்ளேயே வீட்டில் நிம்மதி குறையும். பிரச்சனை தலைவிரித்து ஆடும். சதாகாலமும் சண்டை! சண்டை! சண்டை! காரணம் கண்திருஷ்டி. வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு புதிய வாகனத்தை வாங்கி இருப்பீர்கள். இன்னும் சிக்கனப்படுத்தி அதற்கான தவணையும் கட்ட வேண்டியிருக்கும். வண்டி வாங்கி ஒரு மாதம் கூட கடந்து இருக்காது. எங்கேயாவது கொண்டு போய் இடித்திருப்பீர்கள். இதேபோல்தான், பெண்கள் ஆசை ஆசையாக ஒரு புடவை வாங்கி இருப்பார்கள். நகை வாங்கி இருப்பார்கள். புடவையை உடுத்தாமல், நகை அணியாமல் இருக்க முடியுமா? கட்டாயம் முடியாது.

thirusti

வாங்கிய பொருட்களை அணிந்துகொண்டு ஏதாவது ஒரு விசேஷத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் உண்டாகும். பார்ப்பவர்கள் உடனடியாக கண்டுபிடித்து விடுவார்களா? நீங்கள் புதிய பொருட்களை வாங்கி இருக்கிறீர்கள் என்று. பார்த்த மாத்திரத்திலேயே முடிந்தது. உங்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு விடும். கண்ணை கட்டும். சிலருக்கு புதிதாக வாங்கிய நகைகள் உடைந்து போகும். அந்த நகை தொலைந்து போகக் கூட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய துணி ஆணியில் மாட்டி கிழிந்துவிடும். இப்படிப்பட்ட பல வகையான, பல பிரச்சனைகளை நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். இதற்கு என்னதான் வழி? அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கண் வைத்து விடுவார்கள்! என்ற பயத்தில் நம் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்க கூடாதா! என்னதான் செய்வது? இப்படிப்பட்ட கேள்வி உங்களுக்குள் இருக்கிறதா? உங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.

மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்ப்பதற்கு ஒரே ஒரு வில்வ இலை போதும். நம்ப முடியவில்லையா? இந்த பரிகாரத்தை செய்து பார்த்துவிட்டு நம்பலாமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக புதிய கார் வாங்கி இருக்கிறீர்கள். அல்லது இரு சக்கர வாகனம் வாங்கி இருக்கிறீர்கள். குடும்பத்தோடு ஏதாவது ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. புதிய துணி, நகை இவைகளை அணிந்து கொண்டு, புதிய வண்டியை எடுத்துக் கொண்டு நீங்கள் செல்வதை பார்ப்பவர்களுக்கு, ‘பொறாமையாக பார்க்காவிட்டாலும் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் இருக்கும் அல்லவா’ அது நம்மை சற்று பாதிக்க தான் செய்யும்.

vilvam

அடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும். வெளியில் சென்று விசேஷங்களில் கலந்து கொண்டு, வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் நின்று உங்கள் வீட்டு உறுப்பினர் அனைவரையும் வாசலிலேயே நிறுத்தி, உங்கள் கைகளில் இருக்கும் வில்வ இலையை எடுத்து திருஷ்டி சுற்றுவது போல் எல்லோரையும் சுற்றி வீட்டு, வாசலிலேயே அந்த இலையை இரண்டாக கிழித்து போட்டு விட வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் அடுத்தவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் கட்டாயமாக உங்களை தாக்காது. நீங்கள் வாங்கிய பொருட்களும் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கும்.

தினம்தோறும் சோம்பேறித்தனம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் இப்படி ஒரு கண்திருஷ்டி ஏற்படும். அவர்கள் கூட தங்கள் கைகளில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொள்ளலாம். தினம்தோறும் வேலைக்கு சென்று வந்த பிறகு, வீட்டு வாசலில் தங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி, இந்த இலையைக் கிழுத்து வாசலில் போட்டு விடுவதும் நல்ல பலனைத் தரும். கண் திருஷ்டியால் உங்களுடைய வேலைக்கும் எந்தவித பிரச்சினையும் வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti remedies Tamil. kan thirusti