உங்க வீட்டு தொட்டியில் இருக்கும் ரோஜா செடியிலும், மல்லி செடியிலும், நிறைய பூக்கள் பூக்கவே மாட்டேங்குதா! இத மட்டும் செஞ்சா கொத்துக்கொத்தா பூ பூக்கும்.

rose-and-jasmine
- Advertisement -

நம் வீட்டை அழகுபடுத்துவதற்காக பார்த்து பார்த்து செடிகளை வாங்கி வளர்த்து வருவோம். சிலபேருக்கு வீட்டில் தாராளமாக இடவசதி இருந்தால் தோட்டம் அமைத்து மண்ணிலேயே செடியை வளர்ப்பார்கள். சிலருக்கு இடப்பற்றாக்குறை காரணமாக இருக்கும். இதனால், தொட்டி வாங்கி செடிகளை வளர்ப்பார்கள். நீங்கள் செடியை தொட்டியில் வைத்து வளர்த்தாலும் சரி. தோட்டத்தில் உள்ள மண்ணில் வைத்து வளர்த்தாலும் சரி. அந்த செடியானது நன்றாக துளிர்த்து பசுமையாக வளரும். ஆனால் சில செடிகளில் பூக்களே பூக்காது. நன்றாக செழுமையாக வளர்ந்த செடியில் பூக்கள் பூக்கததை பார்க்கும் போது, ஆசையாக செடியை வாங்கி வைத்தவர்களுக்கு மன வருத்தம் இருக்கத்தானே செய்யும். உங்க வீட்ல இருக்கிற ரோஜா செடி, மல்லி செடி சாமந்திப்பூ செடி இவைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக அழகாக பூத்துக் குலுங்க வேண்டும் என்று நினைத்தால், இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். அது என்ன டிப்ஸ் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

rose

உங்கள் வீட்டில் இட்லிக்கு அரைக்கும் மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் 50ml அளவிற்கு தனியாக எடுத்து வைத்து விடுங்கள். அதை ப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டாம். உங்கள் வீட்டிலேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்து, மூன்று நாட்கள் வரை நன்றாக அந்த மாவை புளிக்க விடுங்கள். நன்றாகப் புளித்து வந்த, 50ml மாவை, ஒரு பக்கெட்டில் 6 லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் இந்த மாவை நன்றாக கரைத்து விடுங்கள்.

- Advertisement -

நன்றாகப் புளித்த மாவை, தண்ணீர் கலந்து, நீர்ம தன்மை கொண்ட அந்த நீரை, ஒரு டம்ளர் அளவு உங்கள் செடிக்கு ஊற்ற வேண்டும். காலை 6 மணிக்கு இந்த நீரை உங்கள் செடிக்கு ஊற்றலாம். மாலை 6 மணிக்கு முன்பாக ஒரு டம்ளர் நீரை உங்கள் செடிக்கு ஊற்றி விடுங்கள். மாவு கலந்த தண்ணீரை ஊற்றிய பின்பு அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. ஒரு கப்(jug) அளவு தண்ணீரே போதும். (இதேபோல் மாவு கலந்த தண்ணீரை ஊற்றிய பின்பு தான், சாதாரண நீர் ஊற்ற வேண்டுமே தவிர, சாதாரண நீரை ஊற்றிய பின்பு, மாவு கலந்த தண்ணீரை ஊற்றக்கூடாது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.)

jasmine

முதலில் மாவு கலந்த தண்ணீர் ஒரு டம்ளர். அதன்பின்பு சாதாரண தண்ணீர் ஒரு கப்(jug). இந்த மாவு கலந்த தண்ணீரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உங்களது செடிக்கு ஊற்றலாம். புளித்த மாவில் நுண்ணுயிர் சத்து அதிகமாக இருப்பதால், செடிகளுக்கு அதிகமான ஊட்டச்சத்து கிடைத்து, உங்களுடைய செடியில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டிருப்பதை, பத்தே நாட்களில் உங்களால் காண முடியும்.

- Advertisement -

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு செடிக்கு மட்டும், இந்த மாவு கலந்த தண்ணீரை ஊற்றி, சோதனை செய்து பார்த்துவிட்டு பின்பு எல்லா செடிக்கும் இந்த முறையை பின்பற்றினாலும் பரவாயில்லை.

watering-rose-plant

மாவை தண்ணீரில் கலக்காமல் ஊற்றினால் இன்னும் அதிகமாகப் பூக்கும் என்று கெட்டியான மாவைக் கொண்டு போய் செடியில் தயவுசெய்து ஊற்றி விடாதீர்கள். மாவை தண்ணீரில் கலந்து நீர்ம தன்மையோடு தான் ஊற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

English Overview:
Here we have Home remedies for growing flowers. Homemade plant food for flowers. How to grow flowers fast. How to grow flowers in pots. How to grow healthy flowers.

- Advertisement -