வெற்றியை தேடி செல்லும் பெண்கள், செய்யக்கூடிய தவறு இதுதான்! நீங்க இந்த தவறை செய்றீங்களா?

women-fi
- Advertisement -

இந்த காலகட்டத்தில் பெண்கள், சாதிக்காத துறையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், பெரிய அளவில் பெண்கள் சாதிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய சூழ்நிலை வேறு. அதாவது சில பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை, தங்களுடைய குறிக்கோளுக்காகவே அர்ப்பணித்து விடுவார்கள். தங்களுடைய சொந்த பந்தம், வீடு, குடும்பம், இவைகளை எல்லாம் விடுத்து, தன்னையே மறந்து, ஆராய்ச்சி கூடம், மருத்துவமனை இப்படிப்பட்ட இடங்களிலேயே இருக்கும், பெண்களும் உள்ளார்கள். துணிச்சல் மிக்க பெண்கள். இவர்கள் ஒரு ரகம்.

women

ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் இருக்கும் சூழ்நிலையே வேறு. குறிப்பாக திருமணம் ஆனதற்கு பின்பு, வெற்றியை நோக்கி செல்ல வேண்டும், என்ற நோக்கம் உள்ள பெண்களுக்கு எதிர்ப்புகளும், தடைகளும், அதிகமாகவே இருக்கும். காரணம் குடும்பம், குழந்தை, சூழ்நிலை! இதற்காக பெண்கள், குடும்பத்தை விட்டுவிட்டு சாதிக்க சென்று விடவேண்டும் என்று சொல்லவில்லை. குடும்பத்திற்காக தங்களுடைய லட்சியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. வீட்டு வேலைகளையும், தங்கள் செய்யும் அலுவலக பணியையும் எப்படி சரிசமமாக நடத்தி செல்ல வேண்டும் என்பதைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும.

- Advertisement -

சில பெண்கள், வெற்றியை நோக்கி செல்லக்கூடிய அந்த பயணத்தில், தங்களுடைய வாழ்க்கையை எப்படி பேலன்ஸ் செய்வது என்று தெரியாமல் தடுமாறி விடுகிறார்கள். அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன? அதை அவர்கள் எப்படி எதிர் கொண்டால், வெற்றியை சுலபமாக அடைய முடியும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women

பொதுவாகவே, பெண்களுக்கு நேரம் என்பது குறைவாகத்தான் இருக்கும். வீட்டு வேலையில் இருந்தும் தவர முடியாது. தாங்கள் செய்யும் அலுவலகப் பணியில் இருந்தும் தவிர முடியாது. இதனாலேயே பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். ஆகவே, முதலில் இவர்கள் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நேரம் குறைவாக இருக்கின்றது என்ற ஒரு காரணத்தினால், அவசர அவசரமாக எதையாவது தவறாக சிந்தித்து, பதற்றத்தோடு செய்யக்கூடிய வேலை, அவர்களை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வைக்கின்றது. அந்தப் பிரச்சினையை மேலும் மேலும் வளர்ந்து, அவர்களுடைய வெற்றிக்கு தடையாக மாறி விடுகிறது.

- Advertisement -

இந்த நேரம் இன்மையை எப்படித்தான் சரி செய்வது? பெண்கள் தாங்கள் எப்போதும் கண் விழிக்கும் நேரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக காலை நேரத்தில் எரித்து விட வேண்டும். உங்களோட முதல் வெற்றியே இங்க தாங்க ஆரம்பிக்குது. இத மட்டும் நீங்க சொதப்பினா, அந்த நாளே வீணாகிவிடும்.

women-1

அடுத்ததாக, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகப்படியான ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், வீட்டில் இருக்கும் மீதமுள்ள வேலைகளை செய்து முடிக்க வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில், தினசரி வேலைகள் கெட்டுப்போகாமல் இருக்கும். முடிந்தால் உங்களது அலுவலகப் பணியும் கூட, முன்பாகவே செய்து முடித்து வைப்பது தவறு ஒன்றுமில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் கட்டாயம் தூங்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.

- Advertisement -

வீட்டில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி. அலுவலகத்தில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி. கடைசி நேரத்தில் எந்த ஒரு வேலையையும் அவசர அவசரமாக ‘முடிக்க வேண்டுமே… நேரம் ஆகுதே!’ என்று பதற்றத்தோடு செய்யவே செய்யாதீர்கள். “நாளைக்கு தேவையான வேலையில், ஒரு 20% சதவிகித வேலையை, இன்றைய தினமே செய்து வைக்கிறீர்களோ, அன்றிலிருந்தே நீங்கள் ஜெயிக்க ஆரம்பித்துவிடலாம்.” இது இன்றைய சூழ்நிலையில் நிறைய பெண்களுக்கு தெரிவதே கிடையாது.

women3

‘அதுக்குதான் டைம் இல்லையே?’ இப்படினு நீங்க சொல்றது கேக்குது. முன்கூட்டியே உங்களது வேலையை செய்ய பழகிப் பாருங்கள்! அதன்பின்பு அவசரமும், பதட்டமும் உங்களது வாழ்க்கையில் இருக்காது. அதன் பின்பு நீங்கள் எடுக்கக்கூடிய தீர்மானமும், நீங்கள் செய்யும் வேலையும் எந்த ஒரு பிழையும் இல்லாமல் இருக்கும். ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்! இன்று சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லாம் பின்பற்றி கொண்டிருக்கும் ஒரு வழிதான் இது. இத மட்டும் முயற்சி பண்ணி பாருங்க சீக்கிரமா வெற்றியைத் தொட்ருவீங்க!

கடைசி நேரத்தில், நேரம் இல்லாமல் போவதால், அவசரமும் பதட்டமும் நிறைந்திருக்கும். ‘அவசரத்துல அண்டாவுல கை விட்டாலே போகாது என்று சொல்லுவாங்க’. அப்படி இருக்கும்போது பதட்டத்தோடு செய்யக்கூடிய காரியம் சிதறித்தான் போகும். தப்புத்தப்பாக எதையாவது செய்துவிட்டு, பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில், சிறிது தூரம் சென்று விட்டு, திரும்பி பார்த்தால், பிரச்சனை என்ற வட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள். அதிலிருந்து திரும்பி வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

women4

“ஒரு வேலையை பிழை இல்லாமல் செய்வதற்கு நேரம் அதிகமாக எடுக்காது. பிழையோடு செய்த வேலையை, திருத்துவதற்கு தான் அதிகப்படியான நேரம் எடுக்கும், என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உங்களது பணியை தொடர வேண்டும்.” ஆகவே, முடிந்த வரை உங்களது வேலைகளை கடைசி நேரத்தில் தவறாக செய்து, பதட்டத்தில் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல், முன்கூட்டியே செய்து பழக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு ரோஜா செடியை, இப்படி மட்டும் வெட்டி பாருங்க! நீங்களே, நம்ப முடியாத அளவுக்கு பூ பூக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal pinpatra vendiyavai. Pengal seiya vendiyavai Tamil. Pengal seiyya vendiya seyalgal. Pengal kadaipidikka vendiya seyalgal

- Advertisement -